உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, April 04, 2006

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 13

அங்கே நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன.வடக்கு தெற்காய் ஓடும் சாலைகள் ஒற்றைபடை எண்ணிலும் (எ.கா Route 1-(Pronounced as ரவுட்)) கிழக்கும் மேற்காய் ஓடும் சாலைகள் இரட்டைபடை எண்ணிலும் குறிப்பிடுகிறார்கள்.(எ.கா.ரவ்ட் 256)
மாகாணங்களை இணைக்கும் பெருஞ்சாலைகள் டர்ன்பைக் (TurnPike)எனப்படுகின்றன.
மற்ற நெடுஞ்சாலைகள் பார்க்வேஸ் (Parkways) எனப்படுகின்றன.பெரும்பாலும் குறுக்காக செல்லும் சாலைகள் அவெனியூ (Avenue) என்றும் நெடுக்காக செல்லும் சாலைகள் ஸ்டிரீட்-Street அல்லது ரோடு-Road என்றும் அழைக்கப்படுகின்றது.
இரு மருங்கும் மரங்கள் நிறைந்த சாலை போலேவாட்-Boulevard எனப்படுகிறது.
பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள்,ரயில்கள் நம்பமுடியா அளவு அட்டவணை நேரப்படி வந்து போகும்.Academy,greyhound,CoachUSA,NJTransit,MTA,NYC Transit இவை சில East Coast பொது பேருந்துகள்.Amtrack,NJTransit,Subway,PATH,MTA இவை சில East Coast ரயில்கள்.ஒற்றைபடை எண் கட்டடங்கள் சாலையின் ஒரு மருங்கிலும்,இரட்டைபடை எண் கட்டடங்கள் சாலையின் மறு மருங்கிலும் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.சாலைகளின் சிக்னல்கள் லைட்ஸ் எனப்படுகின்றன.
"Support Our Troops,Proud to be an American" இவை சாலை வாகனங்களின் பிரபல வாசகங்கள்.சில வாகனங்கள் Stop War.Put troops on the Mexican border என புஷ்ஷை திட்டவும் செய்கின்றன.
சைரென் லைட் உள்ள ,இல்லாத கார்களில் மாமாக்கள் வலம் வருவார்கள்.சில சமயம் பதுங்கியும் இருப்பர்.ஓவர் ஸ்பீட் தாதாக்களை பிடிக்கத் தான்.மரத்தாலும் இரும்பாலும் ஆன நாடு இதுவென்றால் மிகையில்லை.வீடுகள் மரத்தாலானதென்றால்,மாபெரும் பாலங்களும்,வானுயர் கட்டடங்களும் இரும்பை உருக்கி கொட்டி கட்டியிருக்கிறார்கள்.
மாதம் ஏறக்குறைய $400 தவணையும்,$300 இன்சூரன்சும்,$100 காஸ்க்கும் (அதாங்க Gasoline எனப்படும் பெட்ரோல்) நீங்கள் செலவு பண்ணமுடியுமென்றால் நீங்களும் கார்வைத்துக்கொள்ளலாம்.எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்.காரில்லா வாழ்வு மிகக் கடினம்.யாரோ சொன்னார்கள்.அமெரிக்க வாழ்க்கைக்கு நான்கு C-க்கள் மிக முக்கியம் என்று.CAR--CREDIT CARD-COMPUTER-CELLPHONE.
கூடவே Job-ஐயும் சேர்த்துக்கோங்கப்பு.

வகை:அமெரிக்கா


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

வடுவூர் குமார் said...

இங்கு 5 C வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்