உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 21, 2006

லோகோ ரகசியம் : அடிடாஸ்


அடிடாஸ்-adidas ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற காலணி ஷூ மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இதன் பெயர் இதன் நிறுவனரான Adolf(Adi) Dasler-ல் இருந்து வந்தது.மற்றபடி இதன் பெயர் ரகசியம் All Day I Dream About Sports (or Soccer or Sex) அல்ல. இந்நிறுவன லோகோவிலுள்ள மூன்று முக்கோண துண்டுகள் அவர் மூன்று மகன்களை குறிக்கிறது என்கிறார்கள்.1920-லேயே ஷூ தைத்து விற்ற அடி 1949-ல் இதை ஒரு நிறுவனமாக்கினார்.1980-களில் அடிடாஸ் காலணிகள் இளசுகள் மற்றும் மத்திய வயதினர் மத்தியில் கொடிகட்டி பறந்தது.இன்றைய 2006 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் official partner இவர்கள்.இப்போட்டிகளுக்கு கால்பந்து வழங்குபவர்களும் இவர்களே.

டெயில் பீஸ் - PUMA - புமா என்பது Adi-யின் சகோதரர் Rudolf Dassler-யின் போட்டி ஷூ கம்பனி.Sister concern மாதிரி Brother concern எனலாமா?

வகை:லோகோ ரகசியம்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

யாத்ரீகன் said...

addidas-ல் உள்ள s-க்கு ஸ்போர்ட்ஸ் என்றே நினைத்திருந்தேன்... மிகவும் சுவாரசியமான தகவல்.. சரி, அப்போ புமாவுக்கு எப்படி பேர்வந்தது ;-)

PKP said...

:)

தங்கள் வருகைக்கு நன்றி யாத்திரீகன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்