உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, December 24, 2006

State Bank of India - கலக்கல்

Thanks SBI
தமிழகத்தில் வங்கி சார்ந்த அனுபவம் நேர்ந்து ரொம்ப நாளாகி விட்டது.வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை இப்போதெல்லாம் எப்படி இருக்கின்றது. வாடிக்கையாளர்களை இப்போதாவது மனிதர்களாக மதிக்கிறார்களா? அதெல்லாம் இப்போழுது என்ன நிலை தெரியவில்லை.ஒரு காலத்தில் ICICI யும் Bank Of Baroda -வும் நல்ல பெயரோடிருந்தது.இப்போது தெரியவில்லை.

சமீபத்தில் ஒரு பாங்கிங் அனுபவம்.தபால் வழி அனுப்பப்பட்ட வங்கி காசோலைகள் சேர வேண்டிய இடத்தில் போய் சேராமல் காணாமல் போய் விட்டன.ஒரு மாதம் ஆகியும் போய் சேராததால் அந்த வங்கி செக்குகளை யாரும் பயன் படுத்தாமல் தடை செய்ய அவசியம் நேரிட்டது.

வலையில் தேடிய போது இந்த பக்கத்தின் வழி Customer Service Helpline சென்னை பிராந்திய தொலைபேசி எண் கிடைத்தது.Toll free number 1800-425-4424 -க்கு அழைத்தால் ஒரு ரோபோ பேசி பேசி ரொம்ப பேசி தொல்லை கொடுத்தது.பொறுமையின்றி helpline.lhoche@sbi.co.in -க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நம்பிக்கையின்றி Bouncing Message வருமோ என நினைத்திருந்தேன்.
அப்படியே லோக்கல் SBI கிளைக்கு ஒரு போன் போட விலாசம் தேடும் போது இந்த லிங்க் கொடுக்கும் SBI
கிளை சம்பந்த பட்ட தகவல்கள் அனைத்தும் outdated தப்பான தகவல்களாய் இருந்தன.
இந்த லிங்க் SBI Branch Locator சரியான தகவல்களை கொடுக்க ஒரு போன் போட்டால் ஒரு விண்ணப்பம் எழுதி பேக்ஸ் பண்ண சொன்னார்கள்.Atleast got a good response.பேக்ஸ் பண்ணியாயிற்று.
ஆச்சர்ய அதிர்ச்சியாய் அடுத்த இரண்டு நாளில் அந்த குறிப்பிட்ட கிளை Chief Manager-ம் இருந்து ஒரு மின்னஞ்சல்.காசோலைகள் block பண்ணப்பட்டுவிட்டதாகவும் கூடவே கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களும் சொல்லியிருந்தார்.மகிழ்ச்சி தாழவில்லை.சென்னை அனுப்பபட்ட எனது மின்னஞ்சல் குறிப்பிட்ட கிளைக்கு forward
-பண்ணப்பட்டிருக்க வேண்டும் போலும்.

தமிழகத்தில் வாடிக்கையாளர் சேவை ரொம்ப முன்னுக்கு வந்து விட்டதா? இல்லை இது ஓர்
அபூர்வமா?.எதுவாயினும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் அந்த குறிப்பிட்ட கிளை Chief Manager-க்கு நன்றியும் வாழ்த்துதலும் சொல்லவேண்டும் போலிருந்தது.
இதோ சொல்லியாயிற்று.

(Internet Banking - சேவை தேவையென்றால் காகித விண்ணப்பம் அனுப்பியே ஆக வேண்டும் என அடம் பிடிப்பதையும்,அப்படியே அனுப்பினாலும் ஒரு பதிலுமே அங்கிருந்து வராதிருப்பதையும் இப்போது தற்காலிகமாக மறந்திருக்கிறேன்.)

SBI block cheques lost on transit


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

வடுவூர் குமார் said...

இது கனவு இல்லையே??
போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம்...

PKP said...

சரியாய் சொன்னீங்க சார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்