உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 11, 2007

உலகின் ஒரே 7 நட்சத்திர ஓட்டல்

Vegas of the Middle East எனப்படும் துபாயிலுள்ள 54 மாடிகள் கொண்ட உலகின் உயரமான (321மீ) படத்தில் நீங்கள் காணும் இந்த ஓட்டல் தான் புர்ஜ் அல் அராப் - Burj Al Arab-Dubai (அதாவது அராபியர்களின் கோபுரம்) எனப்படுகின்றது.தங்களை உலகின் முதன் முதல் மற்றும் ஒரே 7 நட்சத்திர ஓட்டல் எனக் கூறிக்கொள்கிறார்கள்.ரொம்ப காஸ்ட்லி.ஒரு நாள் குறைந்த வாடகை 70000ரூபாய்க்கும் மேல் என்றால் பாருங்கள்.தங்கள் விருந்தினர்களை கூட்டிவர BMW,Rolls Royce கார்கள் மற்றும் கெலிகாப்டர்களையே பயன்படுத்துகிறார்கள்.இதற்காக உயரத்தில் ஒரு கெலிபேட் -Helipad -கெலிகாப்டர் இறங்கும் தளம் அமைத்திருக்கிறார்கள்.அதை டென்னிஸ் தளமாக்கி உலகின் நம்பர் ஒன் ரோஜர்பெடரரும் , அன்ரூ அகாசியும் விளையாடுவதையும் தான் படத்தில் பார்க்கிறீர்கள்.துபாய் நகர கார்கள் தங்கள் நம்பர் பிளேட்டுகளில் இவ்வோட்டலின் படத்தை பெருமையாக இட்டுக்கொள்கின்றன.
Dubai Car Number Plate
(யாரோ ஒரு விருந்தினர் தான் பாலில் (Milk) தான் குளிப்பேன் என அடம்பிடித்ததால் பாலால் குளியல் தொட்டியை நிரப்பி கொடுத்ததாம் இந்த ஓட்டல் நிர்வாகம்.எத்தனை உண்மை தெரியவில்லை.)

Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-DubaiBurj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai
Burj Al Arab-Dubai


Email PostDownload this post as PDF

Related Posts by Categories3 comments:

வல்லிசிம்ஹன் said...

அருமையான வெகு அருமையான படங்கள். ஒவ்வொரு முறையும் துபாயில் ,இந்த ஹ்ஹோட்டலை அருகில் சென்று பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுகிறோம்.

உள்ளே செல்ல மனம்(பணம்)வரவில்லை.
வெளியிலிருந்தே பார்க்கத்தான் அழகு.
கடலலைகள் உள்ளே தாக்காமல் இருக்க முட்டுக்கொடுக்கும்படி பல கோடி செலவழித்து உருவாகிய ஹோட்டலாம் இது.
நன்றி.

தருமி said...

அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறது மாதிரி இல்லைங்க.. புரோட்டா, சால்னா /இடியாப்பம், பாயா கிடைக்கலையே! :)

PKP said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்.
நன்றி தருமி.

இந்த பழம் புளிக்கும்-னு எஸ்கேப் உட்றலாம். :)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்