உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 18, 2007

மர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ?

12B பேருந்துக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறீர்கள்.12B பஸ் வரவே வராது.17D யாக போய்க்
கொண்டேயிருக்கும்.ஒரு நாள் 17D பஸ் பிடிக்க வருகிறீர்கள்.ஒரே 12B மயமாக இருக்கும். ஒரு மணி நேரமாகியும் 17D வராது.இதைத் தான் மர்பி லா (Murphy's law) என்கிறார்கள்.அதாவது "Things will go wrong in any given situation, if you give them a chance".இதை தான் நம் ஆட்கள் "நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்" என்றார்கள்.

அன்றாடம் வாழ்வில் நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு அவஸ்தைதான் இந்த மர்பி லா.

நீங்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது உங்கள் வரிசை முன்னுக்கு நகராது போல் தோன்றும்.பக்கத்து வரிசை வேகமாய் நகரும்.

நெடுஞ்சாலையில் உங்கள் கார் போகும் லேன் எப்போதுமே அடுத்த லேனை விட மெதுவாகவே நகரும்.

குடை வைத்திருந்தால் மழை பெய்யாது.மழை பெய்யும் போது குடையிருக்காது.(நா உப்பு விக்கப்போனா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது பாட்டு நினைவுக்கு வருகிறது.)

அவசரமாய் பிரிண்ட் அவுட் எடுக்க வந்தால் அப்போதுதான் பேப்பர் ஜாம் ஆகும்.

வீட்டில் சாதம் இல்லாத போது ரொம்ப பசிக்கும்.சாப்பாடு ரெடி என்றால் பசிக்காது.

தண்ணீர் கைக்கு எட்ட இல்லையென்றால் ரொம்ப தாகம்
எடுக்கும்.

Restroom அருகில் எங்கும் இல்லாத போது தான் அது வரும்
.

இப்படியாக பலப் பல.

கெட்ட குடியே கெடும்,கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துகொண்டு கொடுக்கும்.அது கூரையை சரிபண்ணவே சரியாய் போய்விடும்.இதெல்லாம் மர்பி விதியின் சாரம் கொண்டவையே.இப்படி "Anything that can go wrong, will, and at the worst possible moment" போன்ற விதிளெல்லாம் Edward A. Murphy-யின் பெயரில் "மர்பி லா" எனப்படுகிறன.
இனிமேல் இந்த அவஸ்தைகளின் போது மர்பிலாவை நினைத்துக்கொள்ளுங்கள்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

nagoreismail said...

பி.கே.பி. ஐயா அவர்களே, அருமையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள், அப்படியே மர்ஃபிஸ் லா வை மாற்றக்கூடிய லா வை அதாவது நினைத்ததை எல்லாம் நடக்கக் கூடிய வழியையும் காட்டினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் - நாகூர் இஸ்மாயில்

பாலராஜன்கீதா said...

// நீங்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது உங்கள் வரிசை முன்னுக்கு நகராது போல் தோன்றும்.பக்கத்து வரிசை வேகமாய் நகரும்.

நெடுஞ்சாலையில் உங்கள் கார் போகும் லேன் எப்போதுமே அடுத்த லேனை விட மெதுவாகவே நகரும். //

அப்படி என்றால் பக்கத்து வரிசையிலிருப்பவர்களுக்கு, அடுத்த வரிசையிலிருக்கும் கார்களுக்கு இந்த மர்ஃபி விதி பொருந்தாதா ?
:-)))

PKP said...

இஸ்மாயில் சார்,
உங்கள் வழியில் சொன்னால் அல்லாவினால் தான் மர்பிலாவை எதிர்கொள்ளமுடியும். :)
வருகைக்கு நன்றி.

PKP said...

பாலராஜன்கீதா,
Thats a good catch. :)
வருகைக்கு நன்றி.

nagoreismail said...

பி.கே.பி. ஐயா, அல்லாஹ்வினால் தான் மர்பிலாவை எதிர் கொள்ள முடியும் என்று என் வழியில் விடை சொன்னதற்கு மிக்க நன்றிகள், கிழக்கு பதிப்பகத்தாரின் நாகூர் ரூமி எழுதிய "அடுத்த விநாடி" புத்தகம் வாங்கி வாசித்து பார்க்கவும், அதில் மர்பில் லா வை எதிர்கொள்ள வழிகள் சொல்லப் பட்டிருக்கிறது - நன்றி - நாகூர் இஸ்மாயில்

PKP said...

Sure I`ll do!!

Anonymous said...

பிகேபி சார் நீங்கள் அனுப்பும் மின்=அஞ்ஜல் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது
தொடரட்டும் உஙகள் சேவை
நன்றி
சங்கர்
singapore

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்