உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, April 12, 2007

இனி புத்தகங்களுக்கு குட் பை!!

சோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு
நுட்பம் பயன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

யோசிப்பவர் said...

யுனிகோடு சப்போர்ட் செய்யுமா?!?! சமீபத்தில்தான் இது போன்ற ஒரு கருவி இருந்தால், மிக நன்றாயிருக்கும் என்று ஒரு நண்பர் பேசிக் கொண்டிருந்தார். வந்துவிட்டதா? நீள, அகலம், எடை கடைசியாக விலை(!) போன்ற விவரங்களையும் கொடுக்க முடியுமா?

யோசிப்பவர் said...

இதை அழுக்கேறாமல், எண்ணெய் பிசுக்கு படாமல் வேறு காப்பாற்ற வேண்டுமா? பக்கங்களின் மேல் பெயரை எழுத முடியாது! அடிக்கோடிட முடியாது! படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் பிடிக்காவிட்டால் தூக்கியெறிய முடியாது! முக்கியமாக படித்துக் கொண்டிருக்கும்பொழுதே அதன் மேல் படுத்து தூங்க முடியாது!! அதனால் இது எனக்கு வேண்டாம்!!!( சீ! சீ!! இந்தப் பழம் புளிக்கும்!!!;-))

R Kamal said...

very nice blog...can you please post karka karka song lyrics from வேட்டையாடு விளையாடு movie in tamil?

thanks!

R Kamal said...

Oh...i saw the tamil translator link...thanks a lot...dont bother...im doing it myself...cheers!

nagoreismail said...

புதுசு புதுசாய் தொழில் நுட்ப செய்திகளை அள்ளி தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் - வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

PKP said...

சோனி ரீடர் அளவீடு 6.9” by 4.9” by 1/2 inch”,approx 1/2 lb இப்போதைக்கு $350-ஆம் போகபோக குறையலாம்.ஆமாம் இப்போதைக்கு புளிக்கத்தான் செய்கின்றது.

நண்பர்கள் யோசிப்பவர்,கமல் மற்றும் அடிக்கடி உற்றுபார்த்து உற்சாக மூட்டும் நண்பர் இஸ்மாயில் அனைவருக்கும் மிக்க நன்றி !!

Shan said...

Compare to this product Amazon Kindle is very very good, that has wireless you can access any where wikipedia and dic.

Check out the link below:
http://www.amazon.com/dp/B000FI73MA/?tag=googhydr-20&hvadid=2466176081&ref=pd_sl_907ba0ydu2_e

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்