உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, May 17, 2007

இன்னோவேஷன் சோறு போடும்

பல தடவைகளில் நாம் இங்கே சொல்லியிருப்பது உண்மை என்பது போல் இன்றைக்கும் தகவல் தொழில் நுட்ப உலகம் இன்னோவேஷன் வித்தகர்களின் கைகளில் சிக்கிகிடக்கின்றது. வித்தியாசமாய், அனைவருக்கும் உபயோகமாய், புதுமையாய் ஒன்றை மென்பொருளறிவால் உருவாக்கினால் உலகமும் மெச்சுகின்றது பணமும் புரள்கின்றது. ஆயிரமாயிரம் உதாரணங்களை அடுக்கினாலும் இதோ ஒரு சமீபத்திய உதாரணம் Rmail.

தனது வலைபதிவின் RSS Feed-களை ஈமெயில்களாக பலருக்கும் அனுப்ப கனடாவை சேர்ந்த Randy Charles Morin (37) என்பவர் இரு வருடங்களுக்கு முன்பு சில சேவைகளை பயன்படுத்தி பார்த்தாராம்.ஒன்றும் உருப்படியாய் வேலை செய்வது போல் தெரியவில்லையாதலால் தானே ஒரு RSS to Email வெப் பக்கத்தை உருவாக்கத் தீர்மானித்தார்.இப்பக்கத்தில் உள்ள கட்டங்களில் உங்கள் விருப்ப RSS feed url-ஐயும் உங்கள் email id-ஐயும் கொடுத்தால் போதும். எப்போதெல்லாம் புதுப் பதிவு வருகின்றதோ அப்போதெல்லாம் அப்பதிவு ஈமெயிலாக உங்களுக்கு அனுப்பப்படும்.ரொம்ப சிம்பிள் கான்செப்ட்.இப்போது 50,000 பேர் இங்கு பயனர்கள், தினம் ஆயிரக்கணக்கான feed-கள் மெயில்களாக அனுப்பப்படுகின்றன.NBC என்ன நினைத்ததோ தெரியவில்லை.ஏறக்குறைய 150,000 டாலர்கள் கொடுத்து இந்த தளத்தை ராண்டியிடமிருந்து வாங்கிவிட்டது.யார் யாருக்கு என்ன பிடிக்குமென இத்தள டேட்டாபேஸிலிருந்து எளிதாய் கணிக்கலாமென NBC-க்கு தெரியும்.

இன்னோவேஷன் சோறு போடும் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.நம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு புராஜெக்ட்களுக்கு கடந்த வருடத்திய புராஜெக்ட்களிலிருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்வதை விட்டு விட்டு இதுமாதிரி என்னமாய் யோசித்து புதுசுபுதுசாய் படைத்தால் நலமாயிருக்கும்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்