உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 30, 2007

வயர்லெஸ் கீ-யையும் hack-கலாம்

மடிக்கணிணி (Laptop) -களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் "வயர்லெஸ் ரவுட்டர்" (Wireless Router) வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு (Wi-Fi) வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத (Unsecured) வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம். வலை மேயலாம். வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம். அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும். ஆனால் உங்கள் ipaddress தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர்கள்.இதை தடுக்க வந்தது தான் WEP (Wired Equivalent Privacy) எனப்படும் கீ (Key) உள்ளீடும் முறை. இதன்படி உங்கள் வீட்டு வலை பாதுகாக்கப்பட்ட வலை (Secured) யாகின்றது. யாருக்கெல்லாம் அந்த கீ தெரியுமோ அவர்கள் மட்டுமே உங்கள் இணைய இணைப்புவழி இணையம் மேய முடியும்.

ஆனால் அந்த பாதுகாப்பையும் முறியடிக்க வழிகள் வந்து விட்டது.இங்கே படிப் படியாக இந்த கீயை எப்படி உடைத்து கண்டுபிடிக்கலாமென வழி சொல்கின்றார்கள்.

A step-by-step to breaking WEP key

என்ன Aircrack Airodump WepAttack என சிலப்பல hacking மென் உபகரணங்களை பக்காவாய் பயன்படுத்த தெரிய வேண்டும்.அண்டை வீட்டாரின் WEP key எளிதாய் உங்கள் வசப்படும்.அப்புறமென்ன இலவச இணைய இணைப்புதான். :)

இன்னொரு வழி Default Password-யை பயன்படுத்துதல்.அதாவது பெரும்பாலான "வயர்லெஸ் ரவுட்டர்"-களின் Default Admin Password-யை யாரும் மாற்றுவதில்லை என ஒரு சர்வே சொல்கிறது.இங்கே சென்றால் அனைத்து "வயர்லெஸ் ரவுட்டர்"-களின் Default Admin Password-களையும் காணலாம்.

DEFAULT WIRELESS SETTINGS

கொடுத்து முயன்று பார்த்தால் அதிஷ்டம் இருந்தால் சரியாய் மாட்டும்.உள் புகுந்து WEP கீயை கண்டுபிடித்து ஜமாய்க்கலாம்.

இதையெல்லாம் தடுப்பது எப்படி?
முதல் வேலை உங்கள் வயர்லெஸ் ரவுட்டரின் Default Admin Password-ஐ மாற்றிவிடுங்கள்.
அப்புறம் உங்கள் பாதுகாப்பை WEP-யிலிருந்து இப்போதைக்கு அதிகம் பாதுகாப்பு கொடுக்கும் WPA- (Wi-Fi Protected Access) க்கு மாற்றிவிடுங்கள்.
மேலும் சில டிப்ஸ்கள் இங்கே

Home Wireless Security Settings Tips

ரொம்ப கவனமா இருக்கனும்கோ!


Email PostDownload this post as PDF

Related Posts by Categories1 comment:

Anonymous said...

Hey, something is wrong with your site in Opera, you should check into it.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்