உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, July 06, 2007

எளிமை வெல்லும்

படத்தில் நீங்கள் காணும் இந்த வழுக்கை மனிதரின் பெயர் கிரேயிக் நீயூமார்க் (Craig Newmark). சுத்தமான ஜாவா புரோகிராமர். பத்து வருடங்களுக்கு முன் இந்த மனுஷனுக்கு கொஞ்சம் போரடிக்க சான்பிராசின்கோ சுற்றுவட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளை நண்பர்களுக்கு மெயிலாக டைப்பி அனுப்பிக்கொண்டிருந்தாராம். நண்பர்களுக்கு அந்த தகவல்கள் பிடித்து போக அந்த நண்பர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பெருகியது. 1995 வாக்கில் அவர் 240 பேர்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். உற்சாகம் கொண்ட சிலர் ஏன் சுற்று வட்டார நிகழ்வுகளோடு, அக்கம் பக்கத்தில் விலைக்கு இருக்கும் வீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் கூடவே சொல்ல கூடாது என தூண்டினர். மனிதர் பிஸியாகி விட்டார். உலகின் மிகப்பெரிய வரிவிளம்பர வலைப்பக்கம் http://www.craigslist.org பிறந்தது. அதற்கு sf-events என்றுதான் பெயரிடவிருந்தார். ஆனால் நண்பர்கள் அந்த வரிவிளம்பரங்களை ஏற்கனவே Craig`s List என அழைத்துக் கொண்டிருந்ததால் அப்பெயரே நிலைத்துப் போனது. தனக்கு தெரிந்த majordomo, Java,Perl,Linux,SPARC நுட்பங்களை ஒருங்கிணைத்து மாபெரும் வரிவிளம்பர இணைய பக்கம் உருவாக்கினார். வரிவிளம்பரங்களால் பிழைத்த காகித செய்திதாள்கள் படுத்து போயின.

இன்று மாதம் 20 மில்லியன் பேர் இவ்வலைப்பக்கம் வருகின்றார்கள். மாதம் 7 பில்லியன் பக்கங்கள் பார்வையிடப்படுகின்றது. பெரும்பாலான வரிவிளம்பரங்கள் இலவசமாகவே வெளியிட அனுமதிக்கப்படுகின்றது. அதிக வருமானஎதிர்பார்ப்பில்லாமல் சேவை நோக்கிலேயே இது நடத்தப்படுகின்றதாம். வருடம் 10 மில்லியன் வருவாய் இருக்கும் என யூகிக்கபடுகின்றது. மொத்தமாய் 24 பணியாளர்கள் தாம் கிரேய்க்லிஸ்ட் நிறுவனத்தில் பணிசெய்கின்றார்கள். தலைமையகம் சான்பிரான்சிஸ்கோவிலுள்ளது.

பொதுவான அந்தகால IBM-காரர்கள் போல இவரும் IBM-க்கு 17 ஆண்டுகள் வாழ்கைப்பட்டவர். பொழுது போக்காய் அவர் துவக்கிய லிஸ்ட், craigslist-டாக அவர் போக்கையே மாற்றியது. வாய்பிருந்தும் சேவையாகவே இன்றும் அந்த பணி தொடர்கின்றது. அவர் சொல்கிறார் "Our philosophy is that we’re basically making enough to pay the bills, with a little left."

படித்த உயர் நுட்பங்களை தேவைப்படும் சேவைகளை நிறைவுசெய்ய பயன்படுத்தியும் வாழ்வில் உயரலாம் என்பதற்கு இந்த மனிதர் ஒரு நல்ல எ.கா .


சென்னை கிரேய்க்லிஸ்ட்
http://chennai.craigslist.org/

பெங்களூர் கிரேய்க்லிஸ்ட்
http://bangalore.craigslist.org/


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

bavijai said...

very very very super infomation ,
my selgf confident improved

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்