உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 13, 2007

விண்டோவே இல்லாமல் விண்டோஸ்

லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெப் உலகின் டாப் ஸ்டாராக சில காரணங்கள் உண்டு. ஒன்று இது தனக்காக மெமெரியோ அல்லது சிபியூவோ அதிகம் எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் இதனை முழுக்க முழக்க படம், ஜிகினாக்கள் என எதுவும் இன்றி கமாண்டுகளை டைப்பியே ஓட்டலாம். இதனால் லினக்ஸில் புகுந்து விளையாட ஹாக்கர்களுக்கு பரப்பளவு கம்மியாவதால் மிக அதிக பாதுகாப்பானதாக லினகஸ் கருதப்படுகின்றது.

இன்றைய மைக்ரோசாப்ட் விண்டோஸ் வெப் செர்வர்களின் கதை அதுவல்ல,அநாவசியமாய் கலர்கலராய் விண்டோஸ் மற்றும்,பல ஜிகினாக்களை காட்டி அதிக மெமரி,சிபியுவை விண்டோஸ் மட்டுமே எடுத்து கொள்வதால் அதில் ஓடும் இணையதளங்களுக்கு குறைந்த அளவே மெமரி,சிபியு கிடைக்கின்றதாம்.மேலும் இப்படி விண்டோஸ் செர்வர்கள் அநியாயத்துக்கும் அதிக வசதிகளை கொடுப்பதால் வெளிநபர் தாக்குதலுக்கு அநேக வாய்ப்புகளை கொடுக்கின்றதாம்.

இதையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த மைக்ரோசாப்ட் அண்ணாச்சி இப்போ புதுசா ஒரு விண்டோஸ் செர்வரோடு வந்திருக்கின்றார்.நோ படங்கள்.நோ ஜிகினாக்கள்.நோ விண்டோஸ்கள். ஒன்லி ஒர்க். அதுவும் கமாண்ட் லைனில். லினக்ஸ் போலவே. இதற்கு செர்வர் கோர் (Server Core) என பெயர் வைத்திருக்கின்றார்கள். வரப்போகும் Windows Server 2008-ன் ஒரு வசதியாக இது அமையுமாம். இதனால் ஏற்கனவே IIS7 மூலம் ஏறுமுகத்தில் இருக்கும் மைக்ரோசாப்டின் வெப்செர்வர் மார்க்கெட் இன்னும் முன்னுக்கு போகும் என நம்புகின்றார்கள்.

More Details
http://www.microsoft.com/windowsserver2008/servercore.mspx



Swamy Sukabhothanantha Manasey relax Please Tamil ebook download Part1
சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 1 மென்புத்தகம்.Tamil ebook. Right click and Save.
http://static.scribd.com/docs/etbn8h13803xt.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Muthu Kumar N said...

This PDF file format very nice to read, i am very surprised this file size is very small but 58 pages available. may i know how its possible with high resoultion in small size file.
you can reply me and clear my doubt my email :muthukumar2311@gmail.com

Anonymous said...

I attended the microsoft techmela at mumbai this year. There they gave some presentations about Windows Server Core OS. It should give microsoft quiet an edge in Server technology.

Lot of people in the presentation were asking - can we run Anti-virus? Can we have automatic updates? etc. We have to wait how it finally turns out.

எஸ்.கே said...

நீங்கள் IIS ஏறுமுகமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அது மைக்ரோசாஃப்டின் ட்ரிக்குகளில் ஒன்று! ரெஜிஸ்டராகும் டொமைன் பெயர்களில் பெரும் பகுதி நெடு நாட்கள், ஏன் வருடக் கணக்காகக்கூட பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் IIS-ல் ஹோஸ்ட் செய்ய அந்த ரெஜிஸ்ட்ரார்களிடம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஐ.ஐ.எஸ்ஸின் பயன்பாடு அப்பாச்சேயை எட்டிவிடப் போவதாக பாவ்லா காட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

மைக்ரோசாஃப்ட் இதுபோன்ற பல commercial sharp practices களில் கைதேர்ந்த நிறுவனம் என்பது உங்களுக்கே தெரியும்!

எஸ்.கே
hhtp://www.cyberbrahma.com/

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்