உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, October 05, 2007

போலி வெப்சைட்கள்


திநகர் லலிதா ஜீவல்லர்ஸ்-க்கு அடுத்துள்ள கனாராபாங்க் இப்போது கண்ணமாபேட்டையிலுள்ளது என யாரோ உங்களுக்கு ஈமெயில் அனுப்ப, உடனே அடுத்த நாள் கண்ணமாபேட்டை போய் அங்குள்ள ஒரு ஏமாற்று வங்கியில் உங்கள் பணத்தை போட்டுக்கொண்டிருப்பீர்களா?.நிஜ உலகில் மாட்டோம்.ஆனால் இணைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.

தினம் தினம் ஆயிரம் ஆயிரம் பேர் சிடிபேங்க் அல்லது ICICI பாங்க் வெப்தளம் தான் போகின்றோம் என நினைத்து நம்பி வேறெதோ ஒரு ஹாக்கர் நிறுவிவைத்துள்ள சிடி பாங்க் போன்றே அல்லது ICICI பாங்க் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி வெப் தளம் போய் தங்கள் அக்கவுண்ட் எண்,மற்றும் பின் நம்பர்களை டைப்பி ஏமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.இதை பொதுவாக பிஷ்ஷிங் என்பார்கள்.Phishing அதாவது password harvesting fishing.இது போன்ற போலி தளங்களின் முக்கிய நோக்கம் உங்கள் பாங்க் அக்கவுண்ட் அல்லது பிற முக்கிய அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட்களை திருடுவதே.பொதுவாக இத்தளங்கள் சில நாட்கள் மட்டுமே ஆன்லைனில் இருக்கும்.தேவையான அளவு அப்பாவி ஆட்களை ஏமாற்றி பாஸ்வேர்களை திருடி சுருட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.

So,எப்போதுமே பணபட்டுவாட விஷயங்களை ஆன்லைனில் செய்யும் போது மிக மிக கவனமாயிருங்கள்.சுட்டிகளை சொடுக்கும் போது கவனம் தேவை.அந்த சுட்டி சரியான இடங்களுக்கு உங்களை கொண்டு செல்கின்றதா வென பாருங்கள்.(படம்)

உதாரணமாய் கீழே பாருங்கள்.மேலே நான் யாகூக்கு உங்களை கூட்டி போகிறேன் என போர்டு வைத்து கொண்டு உங்களை ஏமாற்றி கூகிளுக்கு கொண்டு போகலாம்.

Click here to visit yahoo.com

எப்போதுமே நேரடியாக தளங்களுக்கு விலாசம் டைப்பி போகுல் நலம்.யாரோ அனுப்பிய ஈமெயிலிலுள்ள சுட்டியை கிளிக்கி குறிப்பிட்ட பணம் சம்பந்த பட்ட வெப் தளங்கள் செலல் எப்போதுமே ஆபத்து தான்.

சமீபத்தில் சிடிபாங்க் "Important Notice" என சொல்லி எனக்கு வந்த ஏமாற்று மெயில் கீழ் கண்ட சுட்டிக்கு என்னைக் கொண்டு செல்கின்றது.
அங்கே ஒரு முழு போலி சிட்டி பாங்க் தளமே இயங்குகின்றது.(ஒருவேளை நீங்கள் சொடுக்கி செல்லும் போது அது காணாமலும் போயிருக்கலாம்).Do not enter your details on this fake citibank web site.

Fake citibank website


"அண்டத்தின் அற்புதங்கள்" பாகம் 1 தமிழில் அறிவியல் மென்புத்தகம் Andathin Arputhangal Part1 Tamil ebook Download. Right click and Save.
http://static.scribd.com/docs/bixmg9vceupf2.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Anonymous said...

ஏங்க பி.கே.பி இப்ப இந்த சைட் போலினு தெரியுது, இது மேல கம்ளைன்ட் பன்னினால் இந்த சைட் யாரு பேருல ரெஜிஸ்டர் பன்னிருக்காங்கனு தெரியும்ல...அந்த டீட்டெய்ல்ஸ் வைத்து அவர்கள் மேல் நடவடிக்க்கை எடுக்கமுடியும் தானே?

அதே மாதிரி மெயின் ஐ.எஸ்.பி யிடம் சொல்லி அந்த சைட் பிளாக் பன்னமுடியும் தானே?

வடுவூர் குமார் said...

படம் போட்டு விளக்கியதற்கு நன்றி.

Anonymous said...

A TIMELY INFO.
THANKS
CAN U. HELP US IN SALES OF UR. TAMIL SPIRITUAL PUBLICATIONS ?

www.freewebs.com/gopalseva

REGARDS,
R.DEVARAJAN
09364188444

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்