உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, December 03, 2007

அழகிய தமிழ்

சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் "கோலங்கள்" தொடரை தற்செயலாக பார்க்க நேரிட்டது. அதில் வரும் பால கிருஷ்ணன் எனும் கதாபாத்திரமானது, என்னை தொடர்ந்து அத்தொடரை பார்க்க வைத்து விட்டது. அதில் வரும் "தோழரான" அக்கதாபாத்திரம் பேசும் சுத்தமான தமிழ் மனதை மயக்குவதாகவும் அவர் கூறும் சில கருத்துக்கள் அருமையானதாகவும் இருப்பதோடு, தெளிவான தமிழில் பேசுவதொன்றும் அப்படி ஒரு கடினமான செயலல்ல என நிரூபிப்பது போன்றும் இருந்தது. இக்காலத்தில் நிஜ உலகில் இது போன்றோர் இருக்கின்றார்களா? எனபது சந்தேகமே.

ஆனாலும் தமிழ் பற்றி உலாவரும் சில உண்மைகள் நம்மை மனம் நிறைய வைக்கின்றது.

உலகின் மிக பழமையான நகரத்தின் பெயர் "ஊர்" (Ur) என்கின்றார்கள். இது பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. அட இது நம்ம தமிழ் வார்த்தையல்லவா?.

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம். Singam+Ur=Singapore. உலகில் ஒரு நாட்டின் பெயரே தமிழில் இருக்கின்றது நமக்கு பெருமையல்லவா?.

யானையையே கொல்லும் பாம்பு - அதை ஆனை கொன்றான் எனலாம்- அது ஆனைகொண்டான் ஆகி- அப்படியே Anaconda ஆனது- திரைப்படமும் வந்தது.

அரிசி (Arici) Rice ஆனது
கட்டுமரக்காரன் Catamaran ஆனது
காசு Cash என ஆனது
சுருட்டு Cheroot ஆனது
குருந்தம் அல்லது குருவிந்தம் Corundum ஆனது
கயிறு Coir ஆனது
கறி Curry ஆனது
கிடங்கு Godown ஆனது
பச்சை இலை Perfume Patchouli ஆனது

முன்பு மயில்-ஐ தோகை என அழைத்தார்களாம்- இதில் தோகை எனும் வார்த்தை Tuki ஆகி பின் மயில் போல் சிறகு விரிக்கும் வான்கோழியை பார்த்து ஏமாந்து Turkey என்றார்கள்.

அது போல்
இஞ்சிவேரிலிருந்து Ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து Papaaya-வும்,
சக்கவிலிருந்து Jack-கும்,
தேக்குவிலிருந்து Teak-கும்,
கொய்யாவிலிருந்து Guava-வும்,
வெற்றிலயிலிருந்து Betel-லும் வந்தது.

அது போல
Vettri (வெற்றி) தான் Victory ஆனதோ?
Parisu (பரிசு) தான் Prize ஆனதோ?
Idhara (இதர) தான் Other ஆனதோ?
Sarkkarai (சர்க்கரை) தான் Sugar ஆனதோ?
Pathukavar (பாதுகாவலர்) தான் Father ஆனதோ?
Tharai (தரை) தான் Terra ஆனதோ?
Akkam (அக்கம்) தான் Aqua ஆனதோ?
Tholai (தொலை) தான் Tele ஆனதோ?

"காசுக்கு எட்டு" எனும் தமிழ் வார்த்தை Cashew nut ஆன கதையை இங்கே படியுங்கள்.
அதே கொல்லாங்கொட்டை கப்பலண்டி ஆன சுவாரஸ்ய கதையை இங்கே படியுங்கள்.

இப்படி தமிழின் மகத்துவம் சொல்லித்தீராதவை.
என்ன, இலங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வரும் செய்திகள் தான் இப்போது நம்மை கவலையுற வைக்கின்றன.


"வெற்றி நிச்சயம்" சுகி சிவம் மென்புத்தகம் Sugi Sivam Vettri Nichayam Part1 and Part2 Tamil e-book Download. Right click and Save.
பாகம் 1 http://static.scribd.com/docs/hocj4zrx4asq9.pdf
பாகம் 2 http://static.scribd.com/docs/6oa1fzt61966j.pdf
Thanks Tamilnenjam!!


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

Anonymous said...

மாங்காய் தான் Mango ஆயிற்றோ !!!

Tech Shankar said...

தமிழில் வெளிவந்த 'மர்பியின் 1000 விதிகள்' மென்னூல் இங்கே உள்ளது..

http://www.esnips.com/doc/9ab7de91-19ad-4246-b61f-64497288f50a/Murphys-Laws---1000

KARTHIK said...

ஆமாம் நீங்கள் சொல்லுவதும் சரிதான் பல தமிழ் சொற்கள் மருவி ஆங்கில சொர்க்கலகா மாறிவிட்டன
கரகாட்டம் கராத்தே ஆனதுபோல

Srikanth said...

//
சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம்.
//

சிங்கம் என்பது சிம்ஹம் என்ற சம்ஸ்க்ருத வார்த்தை இல்லையோ?
தமிழில் 'ச' என்ற வர்க்கத்தில் வார்த்தைகள் ஆரம்பிக்காது - என்று படித்ததாக நினைவு.

Arun said...

I'm a regular reader of your blog.Its really superb.
Recently i came across a site named thinnai.info
They offer mobile tamil ebooks (jar/jad format) for free.
Hope u'll share this info. with others...
check out www.thinnai.info

(உங்களது blog அருமையாக உள்ளது)

அணில் said...

ஒன்று one, எட்டு eight
உங்கள் வலைப்பதிவு நன்றாக இருக்கிறது. இவ்வளவு நாள் தெரியாத பதராகவே இருந்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்