உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, December 11, 2007

குக்கீஸ்-ன் இன்னொரு அவதாரம்

ஏதோ ஒரு தேவைக்காக ஒரு
இணைய தளம் போகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். சில வாரங்கள் கழித்து மீண்டும் அதே இணைய தளம் போனால் அது "ஹாய் " என உங்கள் பெயர் சொல்லி கூப்பிட்டு வரவேற்பதோடு உங்களுக்கு பிடித்தமான சமாசாரங்களையும் பட்டியலிட்டு காட்டும். அமேசான்.காம் போன்ற தளங்கள் போனவர்கள் மிக தெளிவாகவே இதை உணரலாம். இதற்க்கு காரணம் பிரவுஸர் குக்கீஸ் (Browser Cookies). முதல் தடவை அத்தளம் போகும் போது அது உங்களை குறித்த முக்கிய தகவல்களை உங்கள் கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இட்டுச் செல்லும். எனவே மறு முறை நீங்கள் அதே தளம்
செல்லும் போது அது உங்களைப் பற்றி தெளிவாக சொல்லுகின்றது.
பயனுள்ள தொழில்நுட்பமாக இது தெரிந்தாலும் சிலர் இதை தவறாக பயன் படுத்துவதால் பெரும்பாலோர் இந்த குக்கீகளை தாங்களாகவோ அல்லது சில பிரைவேஸி மென்பொருள் கொண்டோ அழித்து விடுவது உண்டு.

இதற்கு டிமிக்கி கொடுக்க வந்துள்ளது ப்ளாஷ் குக்கீஸ் (Flash cookies-Local Shared Object (LSO)). சாதாரண பிரவுஸர் குக்கீ போலவே இது செயல் பட்டாலும் இந்த பிளாஷ் குக்கீகள் சில விஷயங்களில் சிறிது வேறுபட்டவை.

முதலாவது உங்கள் கணிணியிலுள்ள அனைத்து பிரவுசர்களுக்கும் (Like Internet Exploere and Firefox in the same computer) ஒரே ஒரு குக்கீ மட்டுமே இருக்கும்.

இரண்டாவது இக்குக்கீகளை பராமரிக்க ஆன்லைனில் செல்ல வேண்டும். பிரவுசர் செட்டிங்ஸ் உதவாது. இக்குக்கீகளை பிரவுசர் செட்டிங்ஸ் வழி அழிக்கவும் முடியாது. இதற்காகவே macromedia.com தளம் Adobe Flash Player settings Manager-யை ஆன்லைனில் வைத்துள்ளது.
View Adobe Flash Player settings Manager

To View and delete Flash Cookies on your computer click here
View and delete Flash Cookies

அல்லது கீழ்கண்ட இடத்தில் (ஹார்ட் டிரைவ்) உங்கள் கணிணியிலுள்ள பிளாஷ் குக்கீகளை பார்க்கலாம். அழிக்கலாம்.
[systemdrive]:\Documents and Settings\[username]\Application Data\Macromedia\Flash Player

அல்லது இருக்கவே இருக்கு Objection எனப்படும் Firefox extension to delete Flash Cookies

http://objection.mozdev.org/

சாதாரண பிரவுஸர் குக்கீகளை மட்டுமே அழித்துவிட்டு ஆகா தடயங்களை முற்றிலுமாய் அழித்து விட்டோம் என மெத்தனமாய் இனி இருக்க வேண்டாம். பிரைவசி பற்றி கவலைப்படுவோர் இனி பிளாஷ் குக்கீகளையும் அழித்து விடவேண்டும்.


"இது ஆண்டவன் கட்டளை" நடிகர் ரஜினிகாந்த் இதயம் திறக்கிறார் மென்புத்தகம் Super Star Rajini Special - Aandavan Kattalai Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/i4naop96e56eo.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்