உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, December 28, 2007

மின்சாரக் கனவு

முதலில் எங்கோ உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை கம்பியின்றி தொலை வானொலிகளுக்கு கடத்தி வெற்றி பெற்றார்கள். அதோடு ஒளியையும் சேர்த்து கலந்து இனிதாய் ஒலியும் ஒளியுமாய் தொலைகாட்சிகளுக்கு பின் கடத்தினார்கள்.இப்படி வெற்றிகரமாய் வயர்லெஸ் வழி ஒலியையும் ஒளியையும் கடத்தியாயிற்று.

இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?

அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.

நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.

பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.

மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.

இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?

அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :)

ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

Ref 1 2



"கடைசி பேட்டி" கிருட்டிண மூர்த்தியின் மர்மக்கதை புதினம் மென்புத்தகம் Mohan Krishnamoorthy "Kadaisi Paetti" Novel pdf Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Tech Shankar said...

http://tamilnenjam.4shared.com/

மொத்தம் 30+ ஒலிக்கோப்புகள் உள்ளன.


எஸ். வீ. சேகர், கிரேசி மோகன் இவர்களது பங்களிப்புகளால் ஆன நாடகங்கள் இவை.


இவற்றை நேரடியாக இணையத்திலிருந்தே கேட்கலாம்.

அல்லது இணையிறக்கியும் கேட்கலாம்.

இஸ்னிப்ஸ் தளத்தை விரும்பாதவர்களுக்காக - 4ஷேர்டு தளத்தில் ஏற்றியிருக்கிறேன்.


சில கோப்புகள் உங்களுக்குப் போரடிக்காமல் இருக்கும்.

சில போரடிக்கக் கூடும்.ஒரு வித்தியாசத்துக்குக் கேட்டுப்பார்க்கலாமே?


Description: எஸ்.வி. சேகர் , கிரேசி மோகன் நாடகங்களின் தொகுப்பு - ஒலிக்கோப்புகளாக Here you can download the dramas by Crazy Mohan, S.Ve. Shekar in the format of MP3


http://tamilnenjam.4shared.com/ --- and Look for Tamil Comedy Dramas

Name : Rajesh RV said...

Mobile phone signals which is in terms of Milliwatt are damaging human cells.

I'm just thinking, these wireless power transfer can have more hazards to humans when they are exposed...

KARTHIK said...

நிட்சயம் நடக்கும்
நன்றி

வடுவூர் குமார் said...

கவலை வேண்டாம்,வரும் காலங்களில் இது வந்தே தீரும்.
குண்டு வைக்கிரவனை தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
படிக்க வைத்தால் குறையும் என்றார்கள்,
வேலை கிடைத்தால் குறையும் என்றார்கள்.
குறைக்கத்தான் முடிந்ததே ஒழிய ஒழிக்க முடியவில்லை. :-(

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்