உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, January 25, 2008

படம் சுட்டு கதை கட்டு

இனிமேலும் புகைக்காத முன்னாள் "புகைவண்டி"யை இப்போது "தொடர்வண்டி" என்கின்றோம். டிஜிட்டல் கேமராக்கள் முலம் உருவாகும் படங்களை இனிமேலும் புகைப்படங்கள் எனலாமா?.தெரியவில்லை. அதற்கொரு வார்த்தை இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கலாம்.

நம் விசயத்துக்கு வருவோம்.

பிறந்த நாள் விழாவாகட்டும், வளைகாப்பு விழாவாகட்டும் அல்லது வீட்டில் ஏதோ ஒரு குடும்ப விழாவாகட்டும். வரவேற்பறை தொலைக்காட்சிபெட்டியில் சீரியல்களை ஓட விடுவதைவிட அதை ஆப் செய்து போடுதல் நன்று.

ஆனால் அதை ஆப் செய்து போடுவதை விட அதில் குடும்பம்/நண்பர்கள் புடைசூழ முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை/ டிஜிட்டல் படங்களை இன்னிசை பிண்ணணியோடு ஸ்லைடு ஸோ-வாக அதில் ஓட விடல் மிகவும் நன்று. பழைய சுவாரஸ்ய நினைவுகள் நிகழ்வுகள் நண்பர்கள், உறவினர்களை மகிழ்விப்பதாயும், நெகிழ்ச்சியூட்டுவதாயும் எல்லாரையும் கொஞ்சநேரம் கலகலவென சிரித்து பேச வைப்பதாகவும் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்களை அழகாய் தொகுத்து யாரையும் புண்படுத்தா கிண்டல் வார்த்தைகளை எழுதி அல்லது பிண்ணணியில் நகைச்சுவையாய் குரல் கொடுத்து அந்த ஸ்லைடு ஷோ வை இன்னும் மெருகூட்டி ஓட விடலாம்.

இப்படி ஒரு குடும்ப ஸ்லைடு ஷோ புராஜெக்ட் செய்ய விருப்பமா? இலவசமாய் மைக்ரோசாப்ட் அளிக்கிறது போட்டோ ஸ்டோரி (Microsoft Photo Story 3 for Windows XP) எனும் மென்பொருள்.இம்மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி ஓட விடுங்கள்.எளிதாய் இம்மாதிரி இசையோடு கூடிய புகைப்பட ஓட்டத்தை படைக்கலாம். வேண்டுமானால் போட்டோக்களோடே இடைஇடையே சிறுசிறு வீடியோக்களையும் செருகலாம் என்பது கூடுதல் வசதி.

Download Photo Story here

இல்லை இந்த மாதிரி ஸ்லைடு ஷோ அல்லாமல் மொத்தமாய் ஒரு வீடியோ காட்சி அல்லது டாக்குமெண்டரி எளிதாய் உருவாக்க மைக்ரோசாப்டின் இலவச விண்டோஸ் மூவி மேக்கரை முயலலாம்.

Download Windows Movie Maker

அது மாதிரி உருவாக்கிய ஒரு ஸ்லைடு ஷோ தான் நீங்கள் கீழே காணும் "தமிழறிஞர்கள் சிலர்"ஸ்லைடு ஷோ.மின்னஞ்சல் வழி படிப்போர் கீழ்கண்ட சுட்டியை சுட்டவும்
Tamil Arijarkal Slide Show made by Photo Story 3




"அடோபி போட்டோ ஷாப்" தமிழில் மென்புத்தகம் Adobe Photo Shop in Tamil pdf e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



11 comments:

வடுவூர் குமார் said...

டி கே சி அய்யாவுக்கு மாத்திரம் ஏன் இரண்டு தடவை?
இப்படியெல்லாம் கேட்பேன் என்று நினைக்காதீர்கள்.:-)
தமிழ் வளர்த்த மூதறிஞர்களை காண முடிந்ததே சந்தோஷம்.
சில சமயம் பெயர்கள் படிப்பதற்குள் காணாமற்போய்விடுகிறது,அதற்கு முன்பு ஒரு வெற்று சிலைடு போட்டிருந்தால் அந்த குறையை தவிர்த்திருக்கலாம்.
Transition வரும் இடங்களில் சற்று தடுமாறுகிறது.

சுதாகர் said...

ஹாய் PKP sir,இளையராஜாவின் வெளியீடான how to name it மற்றும் nothing but wind ஆல்பம்களை எங்கே download செய்வது? தயவுசெய்து link கொடுக்கவும்.
thanks

Jafar ali said...

எல்லாம் சரி பிகேபி ஸார்! விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? மீறி காப்பி விண்டோஸில் மைக்ரோஸாப்டின் எந்த ஸாப்ட்வேர் இறக்கினாலும் டெஸ்க்பாரில் ஒரு ஐகான் வந்து உட்கார்ந்து கொண்டு தொல்லைக் கொடுக்கிறதே. அதை நீக்க ஒரு புண்ணியவான் ஒரு கருவியை கொடுத்து உதவி செய்தார்.

பிரேம்ஜி said...

வணக்கம் pkp. ஒளிப்படங்கள் என்று சொல்லலாமா?

KARTHIK said...

நன்றி P.K.P. Sir

Anonymous said...

i cant download the photoshop ebook pls check it

Tech Shankar said...

Hi Jafar Safamarva
//எல்லாம் சரி பிகேபி ஸார்! விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?
//

uninstall your existing windows XP
install fresh
give the following key :
Windows XP
TBHXM-H6W74-4D8GM-B6XX4-M29T8

this key is valid one.

I did like this.
Now I am enjoying - IE 7, Media player 11 and other latest upgradation.

I am sure about it

Tech Shankar said...

http://www.esnips.com/nsdoc/db4368c4-da2d-4731-b4ed-cd733c175f80


there cd-keyreader.rar file is there.
extract this file.

run it.
it will read the serial key for ms products and display the same on screen.

ராஜசேகரன் said...

அன்பு நண்பர் திரு PKP அவர்களே உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
தங்களின் சேவை மேன்மலும் தொடரட்டும்.

Windows Movie maker ல் டிஜிட்டல் இமேஜ் களை mpeg file முறையில் ஸ்டோர் செய்ய முடியதலால் CD யில் write செய்து மற்றும் CD பிளேயர் - ல் PLAY செய்து பார்கமுடிவதில்லை. போட்டோ ஸ்டோரி இதே மாதிரி தான்.

இதற்கு தங்களின் தீர்வு ?

நன்றி

Rajasekaran

cheena (சீனா) said...

பயனுள்ள தகவல்கள் - நன்றி நண்பரே

Unknown said...

Dear Sir,
I cant download the photoshop tamil please help me
R.Muralidharan

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்