உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, March 05, 2008

ஒரு என்னிலை விளக்கம்

சமீபத்தில் நான் பார்த்து மிகவும் ரசித்த படம் தான் நீங்கள் பக்கத்தில் பார்ப்பது.It says "Never Give Up" அதன் பொருள் "விடா முயற்சியை ஒரு போதும் விடாதீர்" என்பதே. இப்படத்தை அப்படி ரசிக்க ஒரு காரணமும் உண்டு.கீழே வாருங்கள்.

நான் அறிய வந்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு அவ்வப்போது பதிவுகளாக அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம் "I`m learning a lot."

:)

சொல்லவரும் விஷயங்கள் பலவற்றையும் வரி வரியாக, விளக்கம் விளக்கமாக சாதகம் பாதகம் ஆய்ந்து எழுதுவதில்லை. காரணம் சமயம் இருப்பதில்லை. நாலுவரிகளில் சொல்லவந்ததை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றேன்.அந்த நாலுவரிகளில் மொத்தத்தையும் விளக்குதல் என்பது மிகக் கடினம். அந்த நாலுவரிகளையும் நாற்பது வரிகளாக்க நானூறுவரிகளாக்க உங்களுக்கு இணையம் இருக்கின்றது, கூகிள் இருக்கின்றான்.
"Please do some research by yourself."

உதாரணத்துக்கு பல இலவச மென்பொருள்களை பற்றிய அறிமுகம் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.அதை எப்படி பயன்படுத்தவேண்டும் முதலான சகல விவரங்களும் இணையத்தில் தேடக் கிடைக்கின்றதே.

இங்கே கார்த்திக் என்ற ஒரு நண்பரின் கடிதத்தை பாருங்கள்.
"வணக்கம் பிகேபி அவர்களே நான் தங்களின் ஒரு பதிவை கூட விடாமல் வாசித்து விட வேண்டும் என்பதால் தான் மின்னஞ்சல் வாயிலாக பெறுகிறேன்.என்போன்ற படிக்காதவர்கள் நெறைய பேர்.தங்களின் பின்னுட்டத்தில் அடிக்கடி ஆங்கிலத்தில் எழுத வலியுறுத்துகிறார்கள்.
அப்படி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதுவதையும் தொடருங்கள்.நிறுத்திவிடாதீர்கள்"

இப்படிப்பட்ட என்னைப்போன்ற பட்டதாரியில்லாத சாதாரண கணிணி பயனாளர்களுக்கே இப்பதிவுகள்.

"புத்திசாலித்தனமாய்" யோசிப்பவர்கள் எடக்கு முடக்காய் கேள்விகளை எழுப்ப கணிணி வல்லுனர்களை தயவு செய்து அணுகவும்.

"kindly clarify"-என்று எனக்கு வந்த கீழ்கண்ட முகமறியாதவரின் வார்த்தைகள் தான் என்னை இங்கு இப்படி எழுத வைத்தது.இது கடந்த பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.

"Every thing is ok. But what will happen if I click "no" when opening such mails that requests for "confirmation of reading the mail.kindly clarify"

எனது பதில் "Every thing has its own limitations.Isn`t it sir?"

ரொம்ப நாளைக்கப்புறமாய் இப்படி ஒரு குப்பை பதிவு.வருத்தமாய் இருக்கின்றது.

"விரல் நுனியில் குறள்" திருவள்ளுவரின் திருக்குறள் இங்கே சிறு மென்பொருளாக ஆங்கிலம் மற்றும் தமிழில். நன்றி-இளங்கோ சம்பந்தம் அவர்களின் www.suvadi.com. "Viral Nuniyil Kural" Thirukural as a small application by Elango Sampandam in Tamil and English. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

Thiruppullani Raguveeradayal said...

Dear PKP Sir,

1ஊரையெல்லாம் (அதாவது எங்களை யெல்லாம்) உற்சாகப்படுத்திவிட்டு, இப்படி ஒரு மெயிலுக்காக ஆயாசப் பட லாமா? எங்கும் இப்படி ஓரிருவர் இருக் கத்தான் செய்கிறார்கள். தமிழில் மட்டுமே எழுதுவது என்ற நோக்கில் நான் எழுதும் வலைகளுக்குக் கூட தமிழில் எழுதுவது தேவையில்லாதது என அடிக்கடி மெயிலுவது என் வாசகர்கள் சிலருக்கு வாடிக்கை. விட்டுத்தள்ளுங்கள். உங்கள் எழுத்துக்களால் பயன்பெறும் கூட்டம் பெரிது. வாழ்த்துக்கள்.

Jafar ali said...

குப்பை பதிவல்ல அது. தங்கள் நிலையை தெளிவாய் சொல்லி இருக்கிறீர்கள். அவரவர் சூழ்நிலை என்று ஒன்று உண்டு. அவசியம் அறிவைத் தேடுபவர்கள் அதையும் நினைவில் கொள்ள வேண்டும். தாங்கள் ஏதும் வருத்தம் கொள்ளாதீர்கள். இந்த சிறு குறை அநேக பேர் உங்களால் பயன் பெறுகிறார்களே அந்த திருப்தியில் மறைந்து விடும். ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்:
jafarsafamarva

Thiruppullani Raguveeradayal said...

விரல் நுனியில் குறளைத் தொடர்ந்து திரு சம்பந்தம் வழங்கியுள்ள அற்புதமான விரல் நுனியில் பிரபந்தம், விரல் நுனியில் திருவாசகம் போன்றவற்றையும் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத் துங்கள். தமிழ்க்கணிணியின் பிதாமகனும் சாதனையாளருமான திரு சம்பந்தத்தின் பணிகள் அதுவும் கணிணியில் தமிழ் தொடக்க நிலையில் இருந்த அந்தக் காலகட்டத்தில் எண்ணி எண்ணி பிரமிக்க வைப்பவையல்லவா?

சிவானந்தம் நீலகண்டன் said...

Dear PKP,

As you have rightly mentioned "Please don't give up". It's my kind request.

Its natural for people to mis use when things are free.

Please bear with them and continue your great work.

Thanks,
Sivanantham.

கவி ரூபன் said...

பி.கே.பி ஐயா,

இப்படி ஒரு குப்பை பதிவைப் போட்டதற்கு ஏன் வருத்தப்படவேணும்? குப்பையில குண்டுமணி போல, பழகிப்போன விசயம் என்றாலும் "Never Give Up" என்ற வாசகத்தை தலைப்பில் போட்டதால் தேவையான பதிவு தான்... ம் படம் நல்லாத் தான் இருக்கு...

Jega said...

Dear PKP,
Further to the downloading of .flv files from Youtube, there is another smaller file called save2pc which is available from http://www.majorgeeks.com/download5580.html
the REalplayer is a heavy file whereas this is only2.35MB. Please check it out

Anonymous said...

Hello PKP sir,
I'm surprised to saw a blog like this. I'm a very new one for blogs. Your blog is very interesting. Every articles having lots of informations and e-books. very nice to find a person like you. Best wishes to Continue........

by
Emlin

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்