உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, March 06, 2008

எத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா

அடப்பாவமே! இந்த நவீன மின்னணு உலகில் எத்தனை கடவுசொல்கள் தான் நினைவில் வைத்திருப்பதோ? வங்கி ஏடிஎம் போனால் அங்கு ஒரு கடவு சொல்.ஆன்லைன் பாங்கிங்கில் நுழைந்தால் அங்கு ஒரு கடவு சொல். கிரெடிட்கார்டு கணக்குக்குள் நுழைய இன்னொன்று.ஜிமெயில் பார்க்க இன்னொன்று.அப்பப்போ கவுந்து வயிற்றை கலக்கும் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்ய இன்னொரு பாஸ்வேர்ட்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்ட்கள் வைத்து மறு நிமிடமே மறந்து தத்தளித்த நம்மாட்கள் அத்தனைக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைக்க தொடங்கினர்.அதுவும் அதிகம் போனால் குழந்தையின் பெயர், செல்ல நாயின் பெயர், காதலரின் பெயர், பிறந்த நாள், பிறந்த இடம், செல்போன் நம்பர் இதில் ஏதாவதொன்றில் நிற்கும்.

அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைத்தல் எப்போதுமே ஆபத்து தான்.எங்கோ உங்கள் திறவுசொல் தவறி கயவன் கையில் கிடைத்தால் அத்தனைக்குள்ளும் நுழைந்து கைவரிசையை காட்டி விடுவான் அவன்.

வேறென்ன தான் செய்ய?
இங்கே ஒரு தீர்வு.
சாதாரண டெக்ஸ்ட் கோப்பு ஒன்றில் அனைத்து வெவ்வேறு பாஸ்வேர்ட்களையும் எழுதி வைத்து அக்கோப்பை கீழ்க்கண்ட மென்பொருளைக்கொண்டு என்கிரிப்ட் செய்து வைத்துக் கொள்ளல் ஒரு எளிய தீர்வு.

Download Omziff

Omziff Homepage

இந்த ஓம்சிப் (Omziff) மென்பொருள் 336kb அளவே உடையதால் USB டிரைவிலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். விருப்பமான ஹைடெக் என்கிரிப்ஷன் அல்காரிதம் ஒன்றை தெரிவு செய்து கொண்டு பாஸ்வேர்ட் ஒன்றையும் கொடுக்கலாம்.

என்கிரிப்ட் செய்யப்பட்ட இந்த டெக்ஸ்ட் கோப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தவிர வேறுயாரும் அதை திறந்து படிக்க இயலாது.

பொதுவாக இதுமாதிரி பாஸ்வேர்ட்களை ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பாகவோ தட்டி வைத்திருத்தல் எப்போதுமே நல்ல பழக்கம் இல்லை. ஆகவே கவனம் தேவை.

ஒன்றுக்கு இரண்டு முறை மேற்சொன்ன கடவுசொல்கள் அடங்கிய சாதாரண டெக்ஸ்ட் கோப்பை என்கிரிப்ட் செய்து,நிஜமாகவே என்கிரிப்ட் ஆகியிருக்கிறதாவென சோதனை செய்து சரிபார்த்த பிறகே இம்முறையை நடைமுறை படுத்தவும்.

ரமணி சந்திரன் நாவல் "தந்துவிட்டேன் என்னை" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Thanthu Vittane Ennai Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Shankar Ganesh said...

ஹும்ம்... நல்ல ஒரு மென்பொருள்.

எனக்கு மிகவும் பிடித்தது KeePass என்ற ஒன்று. அதையும் USB Driveல் போட்டுக்கொள்ளலாம். :)

பயன்படுத்திப்பாருங்கள், it's a wonderful password manager.

http://keepass.info/

A.J.A. said...

Dear PKP Sir,

வணக்கம். நான் சுமார் 6 மாதங்களாக தங்களது பதிவுகளை படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. Today's Special-ல் நீங்கள் தரும் utilities & e-books பயனுள்ளதாக இருக்கிறது. சுஜாதாவின் புத்தகங்கள் - "என் இனிய இயந்திரா" , "மீண்டும் ஜீனோ" , "விக்ரம்" , "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு" மற்றும் "தலைமைச் செயலகம்" ஆகியவற்றின் PDF version கிடைத்தால் அனுப்ப முடியுமா? நான் நிறைய புத்தக நிலையங்களில் தேடி விட்டேன். மேற்சொன்ன புத்தககங்கள் கிடைக்கவில்லை. உதவினால் நலமாக இருக்கும்.

மிக்க நன்றி.

அன்புடன்

ஆரோக்கியராஜ்.

Clickme4joy said...

how to remove "ntdetec1.exe" virus

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்