உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, April 15, 2008

வறட்சியான வளர்ச்சி

கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.

"அன்புள்ள பிகேபி ,
உங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்துப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி? உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு."

என்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே. அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.

வருந்தி அழைத்தாலும் வராதன வாரா.
பொருந்துவன போம் என்றால் போகா.

:)

அட அத விடுங்க. இங்க வாங்க. வித்வான் விஜயசந்தரின் ராகு கேது பொதுப் பெயர்ச்சிபலன் 2008 பார்க்கலாம். Vijayasanthar Raagu Keathu Pearchi Palankal jothidam 2008 in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories3 comments:

Thanga said...

Dear PKP,

Indeed, its true, but "change" is the constant factor, it will force to enter our life.

with regards

Adirai Thanga Selvarajan

செல்லி said...

பிகேபி நல்லதொரு சேவை செய்கிறீர்கள். உங்களின் இந்தச் சேவை தொடர கடவுளை பிரார்த்திக்கிறேன்.

வடுவூர் குமார் said...

இப்படி யோசித்து முடிப்பதுக்குள் நம் வாழ்வு முடிந்துவிடும். :-)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்