உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 07, 2008

கூகிள் மாயங்கள்

கூகிள் சம்பந்தமாக பதிவு போட்டு ரொம்ப நாளாயிற்று. முன்பெல்லாம் கூகிளின் வலைப்பதிவோவென சந்தேகப்படும் அளவுக்கு அடுக்கடுக்காய் கூகிள் பற்றி எழுதியிருக்கின்றேன் ..ம்.ம்..அதெல்லாம் அந்தக்காலம். சமீபத்தில் நான் அறிய வந்த சில கூகிள் மாயங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.

"குருவி" பார்க்கலாம்னு இருக்கீங்களா? சென்னையில் எங்கெங்கு அது ஓடுதுனு தெரியுமோ? தெரியாதுனு வைச்சுக்கங்க. அதை தெரிஞ்சுக்க கீழ் கண்ட சுட்டியை கிள்ளுங்கள்.பின் Chennai,Madurai அல்லது Salem-னு டைப்புங்கள். ஓடும் திரைப்படங்கள், திரை அரங்குகள், ஓடும் நேரம் எல்லாம் அழகாய் கூகிள் காட்டுகின்றான்.
http://www.google.co.in/movies

கூகிள் கூட செல்போன்களுக்கு குறுஞ்செய்தி இலவசமாய் அனுப்ப வசதி செய்து கொடுத்திருக்கின்றான் தெரியுமோ? கீழ் கண்ட சுட்டியை கிள்ளிப்பாருங்கள்.
http://toolbar.google.com/send/sms/index.php

எனது ஜிமெயில் ஐடி PKPblog@gmail.com எனவைத்துக்கொள்வோம். நீங்கள் ஒருவேளை PKP.blog@gmail.com -க்கோ அல்லது P.K.P.blog@gmail.com-க்கோ அல்லது p.k.p.b.l.o.g@gmail.com- க்கோ மின்னஞ்சல் அனுப்பினால் அது தவறாமல் எனக்கு தான் வந்து சேரும். ஏனென்றால் ஜிமெயில் புள்ளிகளை பெரிதாய் கண்டுகொள்வதில்லை. நெசமாதான். வேணும்னா முயன்று பாருங்கள்.

எனது ஜிமெயில் ஐடி PKPblog@gmail.com எனவைத்துக் கொள்வோம். நீங்கள் ஒருவேளை PKPblog+tamil@gmail.com-க்கோ அல்லது pkpblog+blogspot@gmail.com-க்கோ மின்னஞ்சல் அனுப்பினாலும் அது தவறாமல் என்னைத் தான் வந்து சேரும். ஏனென்றால் ஜிமெயில்கார் +அடையாளத்துக்கு அப்புறமாய் என்ன வந்தாலும் கண்டுக்கமாட்டார். நெசமாத்தான்.

கீழ்கண்ட கூகிளின் சுட்டி தான் என்னை மிகவும் ஆச்சரியப் படவைத்தது.இந்த சுட்டியில் போய் ஆங்கிலத்தில் சும்மானாலும் vadu-ன்னு டைப்பினால் கூகிள் உடனே தமிழில் என்ன வடுவூர்குமாரையா தேடுறனு ஆலோசனை கேக்கின்றான்.(மேலேபடம்) tamilne-ன்னு டைப்பினால் கூகிள் உடனே தமிழில் என்ன தமிழ்நெஞ்சத்தையா தேடுறனு ஆலோசனை கேக்கின்றான். நீங்களும் டைப்பி பாருங்களேன்.கலக்கறான்பா கூகிள்.ஆச்சர்யமாக்கீது.
http://www.google.co.in/intl/ta/

1927 தந்தைப்பெரியார் அவர்களின் சொற்பொழிவு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Thanthai Periyaar speech as a Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Anonymous said...

கூகிள்-இல் இப்போது தமிழில் டைப் செய்யலாம்.
http://www.google.co.in/transliterate/indic/tamil

Jafar ali said...

கூகுலின் புதிய வரவுகளை பற்றி தங்கள் பதிவுகள் மிக அவசியம் தேவையான ஒன்று! அறியாதவர்களும் அறிந்து கொள்வார்களல்லவா!! மிக்க நன்றி!!!

Anonymous said...

Google allowed dot (.) initially to differentiate the mail addresses but they implemented a rule after sometime to ignore the dots in the mail address. So it is a issue for many users that they are getting others email now. I am also experiencing the same issue. As you said pkpblog@gmail.com and pkp.blog@gmail.com are same. Now they are not allowing to create 2 ids like this but they did initially. Eventhough these 2 mail ids are same they will not allow you to login using any id. You have to use the same id what you have created wither with dot or with out. There are lot of forums has the discussions about this.

http://www.ashleyrichards.com/2007/03/31/google-gmail-bug-routes-emails-to-wrong-address/

http://digg.com/security/Confirmed:_Gmail_dot_bug_sends_your_email_to_other_users_

வடுவூர் குமார் said...

சென்னை படங்கள் தேடுதலில் சில திரை அரங்கங்களே காணக்கிடைக்கிறது.
எல்லா திரையரங்களும் வந்தால் நன்றாக இருக்கும்.சென்னையில் இருக்கும் போது தேடிக்களைத்துவிட்டேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்