உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, May 04, 2008

அவள் பறந்து போனாளே

இரவு 9 மணி.
கோபால் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.
"ஏண்டா லேட்டு"
"JFK வரை போயிருந்தேன்,பரிமளாவை டிராப் பண்ண"
"ஓ"
சற்று நேரம் அமைதி. கோபால் முகத்தை பார்த்தேன். அவன் முகத்தில் வழக்கமான களையில்லை.
லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.
"இன்னைக்கு ஏதாவது பதிவு போட்டிருக்கியா?" இது கோபால்.
"இல்லை"
"ஏன்,டாபிக் எதுவும் கிடைக்கலையா?" கிண்டலாகக் கேட்டான்.
சிரித்தேன்.
"பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முறை நேற்று" பிரசாந்தின் பாடல் என நினைக்கின்றேன்.
லேப்டாப்பில் ஓட விட்டு கூடவே முனுமுனுத்துக்கொண்டேயிருந்தான்.
"ஒரே டென்சனா இருக்குடா" என்றான்.
"ஏன்"
"ஒண்ணும் இல்லை"-ன்னு இழுத்தான் பின் "பரி ஒழுங்கா பத்ரமா டிரிவான்ட்ரம் போய் சேரனுமேன்னு தான்"என்றான்.
உடனே நான் "ஆமாடா நீ சொல்றதும் சரிதான்.ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் காங்கோல ஒரு பிளைட் கிராஷ் ஆகி...."
"கொஞ்சம் வாய மூடுறியா" என்றான்.
"ஓ..ஓ.க்கே"
"டேய் பெரிசு பெரிசா எழுதுறியே.இந்த பிளைட்டுங்கள் ஒழுங்கா போய் சேந்துதானு பாக்க ஏதாவது சாப்ட்வேர் இருக்குதான்னு பார்த்து சொல்லு" என்றான் கோபால்.
"ஓ இருக்கே"
விவேக் பாணியில் "சிஎன்என் பார்த்துக்கிட்டே இரு பிரேக்கிங் நியூஸ் போடுவார்கள்" என்றேன்.
"ஷடப்" என்றான்.

அப்புறம் http://flightaware.com தளத்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
பொதுவாக JFK போன்ற விமானநிலையங்களில் விமானத்தில் ஏறி அமர்ந்தால் அது ஒரு ஒரு மணிநேரமாக விமான தளத்தையே சுற்றி சுற்றி வரும். ஒரு நீண்ட வரிசையின் முடிவில் ஒரு மணிநேரத்துக்கப்புறம் தான் நம் விமானம் பறக்கிறதற்கு வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவு கூட்டம். இந்த இணைய தளத்தில் விமான சேவை நிறுவனம் மற்றும் அந்த குறிப்பிட்ட விமான எண் கொடுத்தால் போதும், விமானம் எப்போது புறப்பட்டது, எப்போது அது டேக் ஆப் ஆனது, இப்போது பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது? புறப்பட்ட இடத்திலிருந்து அது எவ்வளவு தூரம் போயிருக்கின்றது? இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்? இன்னும் எவ்வளவு நேரமாகும்? இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து சொல்கின்றார்கள்.
விமானம் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடத்தை அழகாய் ஒரு மேப்பும் வரைந்து காட்டுகின்றார்கள்.

குவைத் ஏர்வேஸ்-ன்னு டைப்பி விமான எண்ணையும் கொடுத்தான் கோபால். பட்டென அது புள்ளிவிவரங்களை சொல்லிற்று.
கோபாலுக்கு பயங்கர குஷி.ஏதோ பரியே தன் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.மேப்பில் அந்த விமானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

விமானம் டேக் ஆப் ஆகி 5 நிமிடம் ஆகிவிட்டதாக அது சொல்லியது.

"டேய் பைலட்டோட சாட் செய்ய முடியுமாடா" இது கோபால்.
"ஆமா,ரொம்ப ஆசை தான்" என்றேன்.

இரண்டு மணிநேரமாகியிருக்கும். என்னமோ நடந்திருக்க வேண்டும்.
பதட்டமாக கோபால் கத்தினான்.
"டேய் இங்க பாருடா We could not get the status of this flight-ன்னு என்னமோ சொல்லுது"
தூங்கிப்போயிருந்தேன்.


தமிழ்/ஆங்கில பைபிள் உங்கள் கணிணியில் நிறுவ வசதியான .exe வடிவில். Tamil / English Bible in installable .exe format Download here. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

Anonymous said...

Hello PKP,

I am a regular visitor for your page and I only came to know about your site from S.Ramakrishnan's web page. You seems to be a knowledge tank and best thing is the effort you are taking to spread the knowledge to the rest of the community. My heartiest thanks to you.

And I need one more detail. Is there any software which can index the name of the files of any folder i have. Lets take, I have MP3 or pdf files in a folder. I need all the names of the folder(index ot content) as a text fils so that i can get to know what are the files i have in a particular folder. Please let me know.

Saravanan
saran76@yahoo.com
Singapore

Tech Shankar said...

பகவத் கீதை, குரான், பைபிள் @ விவிலியம், பழைய / புதிய ஏற்பாடு - என மூன்று மதங்களின் புனித நூல்களையும் பல்லூடக வாயிலாக உங்கள் வாசக அன்பர்களுக்குத் தந்து 'கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு', 'கற்றோரைக் கற்றோரே காமுறுவர்', 'கல்வி கற்றவருக்கு எந்த ஊரும் சொந்த ஊர்' என்ற மூத்தோர் வாக்குகளுக்கேற்ப உங்கள் பதிவுகளிலும், 'இன்றைய சிறப்பிறக்கம்' பகுதிகளிலும் தனித்துவமான கருத்துக்களையும், ரசனையையும் அள்ளித் தெளித்து மத நல்லிணக்கத்துக்கு ஒரு மாபெரும் சான்றாகத் திகழ்கிற அருமை நண்பர் பிகேபி அவர்கள் வாழ்க பல்லாண்டு, வாழ்க தமிழ், வாழ்க கணினி எனக் கூறி வாய்ப்பளித்த அரும்பெரும் திலகங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

பின்குறிப்பு: 1 மத நல்லிணக்கத்தைப் பற்றித்தான் பின்னூட்டமிட எண்ணினேன். ஆனால் இந்தப் பின்னூட்டத்தை எழுதியபிறகு பார்த்தால் அதில் 'முற்றுப்புள்ளி' யின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான் இருந்தது. ஏதோ அரசியல்வாதிகள்தான் மணிக்கணக்கில் பேசுவார்கள் (சம்பந்தம் இருக்கிறதோ / இல்லையோ மக்களும் கை தட்டுவார்கள்) வலைப்பூவுலக அன்பர்களையும் (என்னைத்தான் குறிப்பிடுகிறேன்) அரசியல்வாதியைப் போல பேச (எழுத)க் கற்றுக்கொடுத்த அண்ணன் பிகேபியை வாழ்த்தி வணங்குகிறேன்.

பின்குறிப்பு : 2
பின்னே ஃபுல்ஸ்டாப் இல்லாமல் இவ்வளவு பெரிய சொல்லாக்கத்தை எழுதத் தூண்டியதே நீங்கள்தானே.. இதைத்தானே அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.

பின்குறிப்பு : 3

இரத்தம் வர வர ப்ளேடு போட்டதாக நினைத்தால் தயவு செய்து மன்னித்துவிடவும்.

ரசிகன் said...

//இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து சொல்கின்றார்கள்.
விமானம் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடத்தை அழகாய் ஒரு மேப்பும் வரைந்து காட்டுகின்றார்கள்.//

ஆஹா.. எவ்ளோ வசதிகள் வந்துருச்சுல்ல:)

இலவசக்கொத்தனார் said...

http://www.flightstats.com/go/Home/home.do

என்ற தளத்தை நான் பாவித்து வருகிறேன். நீங்கள் சொல்வது போலத்தான். அமெரிக்க வான்வெளியில் இருக்கும் வரை / வந்து உடன் இது போன்ற மேலதிகத் தகவல்கள் கிடைக்கின்றன.

http://elavasam.blogspot.com/2008/03/blog-post_13.html
என்னுடைய இந்த கதைக்கு நான் முதலில் தெரிவு செய்திருந்த பெயர் - அவள் பறந்து போனாளே!

வடுவூர் குமார் said...

கிராஸ் டாக் மாதிரி அந்த பிளேனுக்கு கிழேயோ/மேலோ வேறு ஒரு பிளேன் போனால் தகவல் மாறதில்லை?? :-)

Anonymous said...

Dear Sir,
You are doing Excellent work. I have got many informations from your site. Can you please give me URL links to download Subha and arnika naser's tamil novels.

Thank you.


BABU

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்