உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, August 16, 2008

மூன்று வாலட்டுகள்

நமது வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தரும் நண்பர் வடுவூர் குமார் பெரும்பாலான நமது பதிவுகளில் சும்மாவாச்சும் தனக்கு தோன்றுவதை இரு வரிகளில் பின்னூட்டமாக இட்டுச் செல்வார். அதில் அவருக்கு ஒரு திருப்தியோ என்னவோ? அப்படி இட்டு இட்டு இன்றைக்கு அவர் நமது வலைப்பதிவில் முதல்முறையாக சென்சுரி போட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இருவேறு ஐடிகளில் பின்னூட்டம் இட்டுச் செல்வதுண்டு. இரண்டையும் சேர்த்தால் நூறையும் தாண்டும். அவருக்கும் என் நன்றிகள்.தன்னம் தனியே பிரயாணிப்பதை விட இது போன்ற சகப்பயணிகளுடன் சேர்ந்து சம்சாரித்துக் கொண்டே பயணித்தல் தூக்ககலக்கத்தை போக்குகின்றது.

"இரண்டு விவரணப்படங்கள்" என்ற எனது முந்தைய பதிவில் இரு டாக்குமென்டரி வீடியோக்களை அறிமுகப்படுத்தியிருந்தேன்.

LAV enkat எழுதியிருந்தார்,Dear Mr.PKP,I am regular reader of your blog and GREAT job done. I like your simple writings so anyone can understand. However today this blog I couldn't understand at all. Can you explain in more detail so everyone understand.Thankx.

நன்றி LAV enkat!! கொஞ்சம் குழப்பிவிட்டேனோ?

Zeitgeist என்ற விவரணப்பட வீடியோவின் மூன்றாம் பாகத்தை நீங்கள் பார்த்திருந்தீர்களானால் நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கலாம். நான் அங்கு குறிப்பிட்டுச் சொன்ன "அந்த தொழில் நுட்பம்" நாம் இங்கு ஏற்கனவே பேசிய "RFID" -தான். சீக்கிரத்தில் இந்நுட்பம் சக்கைபோடு போடப்போகின்றது பாருங்கள். இது பற்றிய எனது முந்தைய பதிவு இதோ. "மனிதனுக்குள் ஒரு சிப்" ஒரு நிமிடம் இந்த சுட்டியை சொடுக்கி அப்பதிவை படித்து விட்டு மீண்டும் இப்பதிவை தொடர்தல் நல்லது.

சந்தேகமே இல்லாமல் இது ஒரு scary-யான தொழில் நுட்பம்தான். ஆயிரம் அருமைகள் இருந்தாலும் இதனால் மனிதனின் பிரைவஸி மற்றும் சுதந்திரம் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் திரண்டு வரும் தொழில் நுட்பமுன்னேற்றங்களை யாரால் தடுக்க இயலும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம்மில் பலரும் இந்த Radio-frequency identification எனப்படும் RFID தொழில் நுட்பத்தை ஏற்கனவே தாங்களே அறியாமல் பயன்படுத்தி வருகின்றார்கள். கோபாலிடம் நீயும் பயன்படுத்துகிறாய்டா என்றேன். "வாட்" என்றான். அவன் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு ஒன்று இந்த RFID சிப் நிறுவப்பட்டது. எதிர்கால கடனட்டைகள் இந்தமாதிரி ஒரு சிப்பை உள்ளடக்கியே வருமாம். இந்த சிப் உங்கள் கடனட்டை பற்றிய தகவகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இதில் ஒரு சிக்கலும் இருக்கின்றது. டன்கின்டோனட்ஸ் வரிசையில் நிற்கும் கோபாலருகே தனது பாக்கெட்டில் RFID scanner வைத்திருக்கும் ஒரு ஹேக்கர் நெருங்கினால் அந்த RFID scanner-ஆல் இவன் கிரெடிட் கார்டு தகவல்களை வயர்வெஸ்ஸாய் படிக்க முடியும்.இந்த அலைவரிசை தொடர்பை தடுக்கத்தான் புதிதாக ஒருவித பர்ஸை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். அதன் பெயர் RFID Blocking Wallet.என்னமோ அதில் alloy shielding material இருக்கிறதாம். அது அந்த அனாவசிய ஸ்கேனர்கள் படிக்கமுடியாமல் சுவர்போலிருந்து தடுத்துவிடுமாம்.

நீங்கள் படத்தில் காண்பது போல் சிவப்பு வட்டமிட்டது போன்ற குறிகள் உள்ள கடனட்டை பயன்படுத்துவோராயின் அது RFID கொண்டது என தெரிக.


தனது கிரெடிட் கார்டுகளை வரிசையாய் அடுக்கி வைத்துப் பார்த்து "நான் தப்பித்தேன்பா" என்றாள் பரிமளா.

"இல்லை" என்றேன் நான். திகிலுடன் என்னை பார்த்தாள்.

விளக்கினேன்.

"உன்னைப் பார்த்தால் இந்தியப்பெண் போல இருக்கின்றாய், பேச்சுக்கொடுத்தால் அமெரிக்க ஜாடை வீசுகின்றது, வைத்திருக்கும் புத்தகங்களோ ஃப்ரெஞ் தலைப்பிட்டவை, கேட்கும் பாடல்கள் எல்லாம் அரபிக் இதெல்லாம் குழப்புபவைதான். ஆனாலும் RFID scanner வைத்திருக்கும் அந்த ஹேக்கர் உன்னை நெருங்கினால் எளிதாய் அவன் சொல்வான் நீ அமெரிக்க பிரஜை என்று. எப்படி என கேட்கின்றாயா? நீ வைத்திருக்கும் அமெரிக்க பாஸ்போர்டில் RFID இருக்கின்றது" என்றேன்.

நேகாவுக்குமாய் சேர்த்து மூன்று வேலட்கள் ஆர்டர்பண்ணியிருக்கின்றோம்.

அருணா நந்தினியின் புதினம் "பார்த்த முதல் நாளே" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக.Aruna Nanthini Novel "Paartha Muthal Naalea" in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



9 comments:

துரியோதனன் said...

Dear PKP,
இப்போதெல்லாம் தலைப்பிலேயே பின்னியெடுக்கின்றீர்.
எதிர் கால சங்கதிகளை விளக்கி சொல்கின்றீர் படித்து முடித்ததும் ஒரு வித பயம் வருகிறது. கூடவே வெல்வதற்கான தீர்வை பின்னொரு பதிவில் நம்ம PKP சொல்வார் என்ற நம்பிக்கையும் வருகிறது.

Anonymous said...

//மனிதனின் பிரைவஸி மற்றும் சுதந்திரம் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் திரண்டு வரும் தொழில் நுட்பமுன்னேற்றங்களை யாரால் தடுக்க இயலும்.//

முற்றிலும் உண்மை
உங்கள் பதிவுகளை இப்போதுதான் படிக்கத்தொடங்கியிருக்கிறேன். மிக மிக அருமையான விடயங்களை எளிமையாக தொகுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்
எதிர்பார்ப்புகளுடன் சுபாஷ்

MyFriend said...

ம்.. இதுவும் என்னுடைய fieldதான். NFC device டிசைக்ன் செய்கிறேன். இந்த NFC ஒரு போனில் இருந்தால் எவ்வளவு எளிதாய் இருக்கும்? செய்து வெற்றியும் கிட்டியது.

இப்போது கொஞ்சம் அட்வான்ஸாக NFC with secure செய்துக்கொண்டிருக்கிறேன். செய்து கொஞ்ச நாளில் இதை hack பண்றதுக்கும் ஒருத்தன் வருவான். அதை Overcome பண்றதுக்கு திரும்ப தலை முடியை பிச்சுக்கணும். :-))

NFC RFID ரேஞ் 0-20cm மட்டுமே.. நாமத்தான் கொஞ்சம் அதிக ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். எங்க நாட்டுல எல்லா க்ரேடிட் கார்ட்டும் போன வருட ஆரம்பத்திலேயே VISA Wave ஆக மாறிவிட்டது!

செல்லி said...

LAV enkat போல நானும் கொஞ்சம் குழம்பிவிட்டேன்.
இப்ப தெளிவாகிவிட்டது.
radio-frequency identification (RFID)
இது ஆசாமிகளுக்கு ஒரு எச்சரிக்கையாயிருக்கும்:-)

வடுவூர் குமார் said...

நான் செஞ்சுரி போட்டுவிட்டேனா?அதிசியம் தான்.
பல பதிவுகளில் :-) இப்படி போட ஆசை தான்,கஷ்டப்பட்டு தகவல்களை அளிக்கு உங்களுக்கு இரண்டு வரி எழதினா என்ன குறைந்தா போய்விடப்போகிறேன்.
வெறும் ஸ்மைலி போட்டால் கொஞ்சம் ரூடாக இருப்பதாக தோனுகிறது...எனக்கு.
இருங்க என் அட்டையில் அந்த கட்டம் இருக்கா என்று பார்க்கிறேன்.

karthikeyan.v.p said...

dear pkp
iam karthik,new fan of your blog.
it is intersting to know abt latest technology in tamil.ur r doing great job...

karthik

La Venkat said...

Dear Mr.PKP, Thankx for your response. I saw the video and understand the message of the film. Really a great video.
Anyway if the video is in TAMIL everyone can understand each and every word. If possible anybody who understand clearly can take effort. It will help a lot.
Best Regards
LAV enkat.

Tech Shankar said...

Congrats வடுவூர் குமார்.

Rajasubramanian S said...

சில நாட்களுக்கு முன்பு தான் உங்கள் தளத்தைப்பற்றி அறிந்தேன். அது முதல் உங்களைப் பாராட்ட வார்த்தைகளைத்தேடிக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் செய்வது மிகப்பெரும் சேவை. வாழ்த்துக்கள்.
ராஜசுப்ரமணியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்