உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, August 26, 2008

நேரடி ஒளிபரப்பு செல்போனிலிருந்து

தன்னை சுற்றியுள்ள சூழலின் தாக்கம் எழுதுபவனில் எழுத்துக்களில் எப்படியாவது தெறித்துவிடும் என்பது எத்தனை நிஜம். யாரோடைய எழுத்துக்களையாவது விடாது பின் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு அது புரியும். தூரத்தில் எங்கோ இருந்து எழுதும் அந்த எழுதுபவனில் உள்ளேயும் வெளியேயும் நிகழும் சலனங்கள் உங்களையும் வந்து எட்டும். அப்படித்தான் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும் சம்பவங்களும் என் எழுத்துக்களை சில சமயம் வேறு திசையில் திருப்பிச் சென்றுவிடுகின்றன. எனினும் சில நொடிகளை வீணாக்கி என்னை வாசிக்க வருபவர்களுக்கு கொஞ்சமேனும் உருப்படியாய் எதாவது கொடுக்க வேண்டும் என்பது தான் என் அவா.

நண்பர் செல்வா எழுதியிருந்தார், "என்ன பிகேபி, நீங்க இப்போ அதிகமா ஐபோன் மேட்டர சொல்லுறீங்க .ஸோ நீங்க ஐபோன் வாங்கிட்டீங்களோ :)" வென.
பாருங்கள், எப்படி என் எழுத்துக்கள் என்னை காட்டிக் கொடுக்கின்றன.

இந்த ஐபோன் மேளாவின் கடைசியாய் நான் தெரிந்து கொண்ட ஒரு சுவாரஸ்ய விசயத்தை மட்டும் இங்கே உங்களுக்கு சொல்லிவிடலாமென்றிருக்கின்றேன்.

போகக்கூடாத இடமொன்றிற்கு போய் இருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். கேர்ள் ஃபிரண்டிடமிருந்து செல்போன் கால் வருகின்றது. "டர்ன் ஆன் த கேமரா டியர். உன்னை பார்க்கணும் போல ஆசையாய் இருக்கு"
பகீர் என்றிருக்கும் உங்களுக்கு.

ஆனால் அவளோ வீட்டில் தன் கணிணியில் உங்கள் வலைப்பக்கத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருப்பாள். உங்கள் செல்போன் கேமரா நீங்கள் படம்பிடிப்பதற்கேற்ப உங்கள் சுற்றுபுறத்தை படம் பிடித்து அதை உடனுக்குடன் ஸ்டிரீம் பண்ணி இணையத்தில் ஏற்றி அதை உங்கள் வலைப்பக்கத்தில் காட்டிவிடும். ஏடாகூடாமாகிப் போய்விடுமேப்பா என்கின்றீர்களா. ஆமாம் அதுவும் இப்போது சாத்தியம்.

அதாவது இன்ஸ்டன்ட் வெப்கேமாக இணையத்தில் உங்கள் செல்போன் கேமராவை வேலை செய்யவிடலாம்.

லேபர்டே ஹாலிடேஸ் வருகின்றது. சிக்காகோவிலிருந்து Cedar Point பூங்காவரைக்கும் போகும் முழு டிரிப் மற்றும் அங்கே வாட்டர் பார்க்கிலும் ரோலர்கோஸ்டரிலும் நாங்கள் கிறங்குவது அத்தனையையும் என்னால் லைவாய் அதாவது நேரடியாய் என் செல்போன் கேமராமூலம் இணையத்தில் ஒளிபரப்பு செய்ய இயலும்.

இந்த 3ஜி அலைவரிசையால் இப்படி நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
எல்லோரும் twitter ஆனது போல் இனி எல்லோரும் Qikker ஆகலாம்.
உங்கள் செல்போனில் இந்த வசதியை கொண்டுவரலாமாவென கீழ்கண்ட சுட்டியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Phones qik support list.
மேலும் விவரங்களுக்கு http://qik.com

எதற்கும் இப்போதே கேமரா இல்லாத செல்போனாய் பார்த்து ஒன்று வாங்கி வைத்திருக்க முடிவெடுத்திருக்கின்றேன்.

பிரபல தமிழ் சிறுகதைகள் தொகுப்பு இங்கே சிறு மென் புத்தகமாக. Popular Tamil Short Stories pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



9 comments:

Tech Shankar said...

http://www.4shared.com/file/60492305/d93129c8/Salamon_Aug152008.html

Aug 15, 2008 Salaman Pappaiya's Pattimantram

Thanks

keyven said...

பி.கே.பி., நிறைய மென் புத்தகங்கள் தருகிறீர்கள்.. சாண்டில்யனின் "கடல் புறா" மற்றும் ஏனைய நாவல்களை மென் புத்தகமாக தந்தால் நன்றிக்கடன் படுவேன்...

Anonymous said...

NIce Tools i got one more like from one of my friend .we always fight with technology

ooru nnaaal morning call pannine
nan: yenga irukinga
avan :Vittula than

nan :mm so yenna matter today ,he said check your mail

Suprised avanga vittula irukkura yellam nerula pakkuren video la

amma ,sofa ,car everything

so technology valnthuttu irukku

sanhotsam oru pakkam

bayam oru pakkam

suggest one non camra phone ( other than Blackberry )

MADURAI NETBIRD said...

"Every person is a new door to a different world."
- (thanks to Steve's Famous Quotes)


Thats quotes remember u so i said here.Thanks pkp sir for ur good works.

தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

தென்றல்sankar said...

ரொம்ப நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க.உங்கள் I-phone பயன்படுத்தி நேரடியா வாங்க! உங்கள ஒரு நேரடி பேட்டி(live interview)எடுக்கனும் வாங்க!வருவீங்களா?

problem generator said...

பி கே பி: சமிபத்தில் அறிமுகம் ஆனது தங்களது வலை பதிவு எனக்கு என் நண்பர் மூலம். documentary, RFID, Live video stream... மனிதன் தனது சுதந்திரமான செய்கைகளால், எல்லையற்ற கண்டுபிடுபிடிபுகளால், privacy என்ற சுதந்திரத்தை இழந்து கொண்டு இருக்கின்றான். .........
கண்ணன், கானா

EMLIN said...

பிகேபி அவர்களே,
எங்கிருந்து இவ்வளவு அரிய தகவல்களை எல்லாம் திரட்டுகிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நானும் எனது Phone-ல் முயன்று பார்க்கிறேன்.

Anonymous said...

என்னுடைய NOKIA N82 போனில் சிங்கப்பூரில் இருந்து பயன்படுத்தி பார்த்தேன் நன்றாக இருந்தது
நன்றி

சிங்கப்பூரில் தீவு முழுவதும் இலவச இணைய தொடர்பு உள்ளதால் எளிதாக உள்ளது Free Wireless broadband

Anonymous said...

Sir
I'm a silent viewer of your blog, i'm visiting your blog atleast once in a week for past 1 yr.
I like to start a blog in tamil (to be precise, i have already started, i mean booked a name in blogspot, downloaded e-kalappai) that's all. I can't even take a step ahead from there.
I request you to kindly help me (i prefer step-to-step guide since i'm novice).
Thanks
Chandru

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்