உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, September 10, 2008

சகாயவிலையில் SIP கால்கள்

இப்பொழுதும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கால் செய்ய "ரிலையன்ஸ் இன்டியாக்கால்" இன்னும் அநியாய கட்டணமே வசூலித்துக் கொண்டிருக் கின்றார்கள். நிமிடத்திற்கு 7.9¢.அதுவும் ஒவ்வொரு முறையும் ஐ.எஸ்.டி முழுநம்பரையும் நாம் டைப் செய்ய வேண்டும்.

ரெப்டெல்லை பற்றி கேள்விப்பட்டவுடன் பின்பு அதற்கு தாவலானேன். இவர்கள் நிமிடத்திற்கு 5.6¢ வசூலிக்கின்றார்கள். ஒவ்வொரு இந்திய நம்பருக்கும் ஒரு அமெரிக்க லோக்கல் போன் நம்பரை இவர்கள் நியமித்து நமக்கு தந்து விடுவதால் போன் Contacts-யிலிருந்து நேரடியாகவே அந்த லோக்கல் நம்பர் டையல் செய்து இந்தியா பேசலாம்.இப்படி சமீபத்தில் டெல்லி நண்பன் ஒருவனையும் துபாய் நண்பன் ஒருவனையும் Conference call-ல் இழுத்து ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

ஆனால் அயல்நாட்டிலும் இந்தியாவிலும் அகலப்பட்டை இணைய இணைப்புகள் வைத்திருபவர்களுக்கு கொண்டாட்டம் தான். விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருக்க முடியும். இன்றைய நிலையில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே அகலப்பட்டை வசதிகள் உள்ளன. நகரத்தை விட்டு தூரச்செல்லச் செல்ல அகலப்பட்டை கிடைப்பது அரிதாயிருக்கின்றது.

இது போன்று புறநகரின் ஒரு மூலையில் இணைய இணைப்பின்றி மாட்டிக்கொண்டோரிடம் பேசவும் ஒரு விஓஐபி(VOIP) தீர்வு இருக்கின்றது. உங்களுக்கு தேவை இங்கு அக்கரை சீமையில் இன்டர்நெட் டேட்டா பிளானுடன் கூடிய ஒரு நல்ல WiFi கைப்பேசியும் அதில் fring அல்லது Gizmo போன்றதொரு VOIP மென்பொருளும். Callcentric போன்ற ஏதாவதொரு சகாயவிலை SIP சேவை தருபவர்களிடம் ஒரு கணக்கு ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் செட்டிங்குகளை அந்த மென்பொருளில் செய்துவிட்டால் நிமிடத்திற்கு $0.0715 கட்டணத்தில் இந்திய தரை தொலைபேசிகளுக்கும் நிமிடத்திற்கு $0.0649 கட்டணத்தில் இந்திய கைபேசிகளுக்கும் நாம் பேசலாம்.

உங்கள் போன் மாடலுக்குத் தகுந்த fring அல்லது Gizmo மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவவேண்டும். Callcentric தரும் SIP Proxy settings-களையும் இன்னபிற செட்டிங்குகளையும் சரியாய் அதில் குறிக்க வேண்டும். அப்புறமென்ன இன்னும் சீப்பாக நம் கிராமங்களுக்கும் நாம் பேசலாம்.

சீக்கிரத்தில் நம் ஊர்புறங்களுக்கும் கூட இந்த இணையம் வரும். அப்பொழுது உலகம் கணக்குவழக்கின்றி இன்னும் சுருங்கிப் போயிருக்கும்.

கல்கியின் "தியாக பூமி" இங்கே தமிழில் மென் புத்தகமாக.Kalki Thiyaaga Poomi in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

Jafar ali said...

உண்மைதான்! அகலபட்டை வசதியால் நம் குடும்பம் 24 மணிநேரமும் நம் கண்ணெதிரே இருக்கிறது. சிறிது காலத்திற்கு முன்னர் லட்டர் ஒன்றை போட்டு விட்டு வாரக்கணக்கில் பதில் வர காத்து இருந்தது ஒரு காலம். சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி பிகேபி!

Nagarajan Pandurangan said...

//அயல்நாட்டிலும் இந்தியாவிலும் அகலப்பட்டை இணைய இணைப்புகள் வைத்திருபவர்களுக்கு கொண்டாட்டம் தான். விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருக்க முடியும்.//

விடிய விடிய நயா பைசா செலவில்லாமல் கதைத்துக்கொண்டே இருப்பது எப்படி என்று சொல்லுங்களேன். எனக்கு அகலப்பட்டை இணைப்பு உள்ளது. இது குறித்த தங்களது பதிவு ஏதேனும் இருப்பின் தயைகூர்ந்து 'சுட்டி' அளிக்க முடியுமா?

Anonymous said...

Y dont you try freecall, intervoip, smsdiscount softwares. they give cheaper than you said. they are giving as low as 0.015 euro per minute.

I am a regular reader of your blog and more info i came to know from your blog. its very informative. thanx for ur work.

here in UAE these voip softwares are very popular... since the local telecom provider rate is tooooo much for india ISD call.

Giri
Palayamkottai

ஆ! இதழ்கள் said...

Hi PKP,

I am a regular reader of your blog, inspired by your blogging as you have done to many. Even from UAE i feel at home cos of broad band.

But do you have any bands that can reduce the distance of the family members within a home?

Kannan said...

Hello Friends,

This may be a my second comment in PKP blog.. All the information are very good and hats off to PKP!! you rock!!!!

Here i have one idea to reduce the cost especially for UAE Friends those have broadband in work place but not there in other end.. But your any friends having Broadband in India.

Simple steps to connect ur family..
1. Connect both the end with Gtalk / Skype.
2. from indian friend speaker mobile phone call to your india parent.
3. place the Comp. mike near the speaker mobile phone and make sure you have comp. output in Speaker instead of headphone. in this simply u can connect. May be there would be little disadvantages. but it works really. :)

Suggestion please to improve the same.

Thanks,
Kannan - Hyderabad India.

Muhammad Ismail .H, PHD., said...

@ Kannan ,

This way falling the category of call routing and offence according indian telecom law. Few people already caught by police for running private telephone exchanges. Even call center also never allow to route outbound calls to local PSTN cloud. So don't do in public. LOL.

with care and love,
Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்