உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, October 15, 2008

மடிக்கணிணி கூடுதல்கள்

அடுத்தமுறை புதிதாக மடிக்கணிணி வாங்கப்போகும் போது அதில் நான் இருக்க விரும்பும் சில கூடுதல் வசதிகளை இங்கே வரிசையிட்டு பார்த்தேன். சொல்லப்போனால் நான் விரும்பும் வசதிகளெல்லாம் இருக்குமாறு ஒரு ”முழு மடிக்கணிணி” கிடைப்பது என்பது மிகவும் கடினம். இரண்டாவது அதற்கான பட்ஜெட் எட்டி உதைக்கும். அத்யாவசிய பொருட்களை வாங்கவே கூப்பன்களையும் சேல் போட்டிருக்கும் மால்களையும் மக்கள்தேடும் காலத்தில் என் கூடுதல்கள் கொஞ்சம் கூடுதல் தான்.

இதோ நான் விரும்பும் மடிக்கணிணி கூடுதல்கள்

  • மடிக்கணிணியை பூட்டிங் செய்யாமலேயே அதாவது விண்டோசினுள் நுழையாமலேயே உடனடி VCD, DVD, ACD-யை ஓடவிடும் வசதியுடன் அது வர வேண்டும். Dell இதை MediaDirect என்கின்றது. HP இதை Quickplay என்கின்றது.அதற்கான Play பொத்தான்கள் கீபோர்டிலேயே இருக்கும்.
  • சோனி மடிக்கணிணிகள் ”Hard Disk Drive Recovery" எனப்படும் ஒரு Hidden Partition-னோடு வருகின்றன.விண்டோஸ் கிராஷ் ஆனால் எளிதாக ஒரு கீயை தட்டினால் போதும். நொடியில் மீண்டும் விண்டோஸ் புதிதாக அதிலிருந்து நிறுவப்படும்.
  • Lightscribe வசதியோடு உங்கள் மடிக்கணிணி வந்தால் கொண்டாட்டம் தான். VCD DVD எரிக்கும் போது அது அப்படியே அந்த தட்டுகளின் மேல் அழகாக லேபிளையும் எழுதிவிடும்.அப்படியே அது blu-ray வசதியும் கொண்டிருந்தால் சந்தோசம்.
  • ஒரு ஹார்ட்டிரைவை கழற்றி போட்டுவிட்டு சட்டென இன்னொரு ஹார்டிரைவை மாட்டும் வசதி உங்கள் மடிக்கணினியில் வேண்டுமா? Swappable Drive Bay உள்ள மடிக்கணிணி பார்த்து வாங்குங்கள்.IBM Lenovo-வில் பார்த்த ஞாபகம்.
  • படத்தில் நீங்கள் காணும் புதிய வகையான DVI வீடியோ போர்ட்டுகள் தட்டை மானிட்டருக்கேற்ற உச்ச தர டிஜிட்டல் வீடியோவை கொடுக்கின்றதாம்.
  • HDMI போர்ட்டும் HDTV-யும் இருந்தால் வீட்டில் ஜாலிதான். மடிக்கணிணியில் ஓடும் வீடியோவை உச்ச தரத்தில் ஆடியோவோடு உங்கள் டிவியில் கண்டுகளிக்கலாம்.
  • Biometric Fingerprint Reader இருந்தால் உங்கள் விரலை அடையாளம் கண்டு அது உங்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கும் .அப்படியே முகத்தையும் அடையாளம் காண Face Recognition கேமராவும் இருத்தல் நல்லது.
  • நெட்வொர்க் கார்டு, வயர்லெஸ் (வை-ஃபை) வசதியோடு Bluetooth-ம் அவசியம் இருப்பது நல்லது.
  • அவ்வளவு அவசியமில்லை என்றாலும் இன்ஃப்ராரெட் தகவல் தொடர்புக்கு CIR port உதவலாம். (பழைய IrDA -ன் வாரிசு).
  • மற்றபடி அவசரத்துக்கு Cellular Modem அல்லது TV Tuner போன்றன செருகிக் கொள்ள ExpressCard 54 slot கண்டிப்பாக இருத்தல்வேண்டும். (பழைய PCMCIA -ன் வாரிசு)
  • FM கேட்டுக்கொண்டே "இலக்கியம்" எழுத Built-in FM Tuner இருந்தால் நன்னா இருக்கும்.
  • 8 in 1 Memory card reader (SD/MS/MMC/XD) இருந்தால் எல்லாவகை கேமரா மற்றும் செல்போன் மெமரிகார்டுகளையெல்லாம் எளிதாய் செருகி பயன்படுத்தலாம்.
  • சில வகையான கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்களை செருக IEEE 1394 அல்லது Firewire போர்ட் இருக்கவேண்டும்.
  • USB போர்ட் eSATA/USB combo port ஆகவும் வெர்சன் 2.0 ஆகவும் இருத்தல் நல்லது. அப்படியே அவை Sleep-and-Charge USB போர்ட்டாக இருந்தால் மடிக்கணிணி ”OFF" ஆக இருக்கும் போது கூட USB போர்ட் வழி என் ஐபோனையும் ஐபாடையும் சார்ஜ் செய்ய இயலும்.Toshiba-வில் பார்த்த நியாபகம்.

பாருங்கள்.மனுஷனுக்கு எத்தனை ஆசைகள்.



ஆசையில்லாத முயற்சியால்
பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

11ம் வகுப்பு "கதை கோவை" சிறுகதைகள் தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. 11th Kathai Kovai Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் போட்டா எம்புட்டு வெயிட் ஆகும்? அப்புறம் அதைத் தூக்க ஆள் ஒண்ணு வேணும் பார்த்துக்குங்க!

வீணாபோனவன் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்... நீண்ட வருடங்களாக கணணித்துறையில் இருக்கிறேன். இருப்பினும், தாங்கள் கூறியவற்றில் இரண்டு விடயங்கள் எனக்கு புதிது..

மிக்க நன்றி

Jafar ali said...

புதியவைகளை அறிய தந்ததற்கு மிக்க நன்றி! இதையெல்லாம் அறிந்த பிறகு என்னுடைய தற்போதைய மடிக்கணிணி மிகப் பழையதாக தெரிகிறது.

புதியவன் said...

புதிதாக மடிக்கணிணி வாங்க இருப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்

மிக்க நன்றி

Anonymous said...

///நெட்வொர்க் கார்டு, வயர்லெஸ் (வை-ஃபை) வசதியோடு Bluetooth-ம் அவசியம் இருப்பது நல்லது.///

எரிக்ஸன் Mobile Brandband Module பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா ?

மொபைல் எங்கே எல்லாம் இணைப்பை தருகிறதோ அங்கே எல்லாம் 7.2 எம்.பி.பி.எஸ் வேக இணைய இணைப்பு சிம் கார்டு மூலம் சாத்தியம்...

அது பற்றி கொஞ்சம் எழுத முடியுமா ?

Indian said...

My HP laptop has quickplay but haven't yet tried in switch off mode.

Recently started using the biometric scanner feature. Now, login-in to Vista, all other apps, websites are just-a-swipe-away. One cool feature is whenever you change password periodically, the verisoft s/w automatically updates the new pw.

Have to check whether my laptop is lightscribe equipped.

Bought during 2007 Thanksgiving for 900 USD. Must be cheaper by now.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்