நம்மில் பலரும் தனிமர சகாப்தத்தை விட்டு விட்டு தோப்பு நோக்கி பிரயாணிக்கும் பருவத்தில் இருப்போம். இரு சிங்கிள்கள் ஒரு நன்னாளில் குடும்பமாகி அப்புறமாய் அதுகள் சந்திக்கும் ஏற்றங்கள் இறக்கங்கள் சொல்லிமாளாது. அலைகளை மீறிச்செல்லும் படகுகளின் துள்ளல்களையும் விஞ்சும் அவர்களின் தடுமாற்றங்கள். முற்றிலும் வேறுபட்ட இரு வேறு மனங்கள், இரு வேறு விருப்பு வெறுப்புகள், இரு வேறு பழக்கவழக்கங்கள், இரு வேறு குடும்பங்களின் சம்பிரதாயங்கள் ஒரே இல்லத்தில் கலக்கும் போது பலவித வினோத அனுபவங்கள் கியாரண்டி தானே.
”Everybody Loves Raymond" என்று ஒரு சீரியல் உண்டு. நான் விரும்பிப்பார்க்கும் ஆங்கில சீரியல்களில் இதுவும் ஒன்று. காமெடிக்கு ஒன்றும் பஞ்சம் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு எப்பிசோடிலும் நெஞ்சைதொடும் மாதிரி சில நல்ல கருத்துக்களையும் தூவியிருப்பார்கள். டாரெண்ட்டுகளில் எல்லாம் இறக்கம் செய்ய கிடைக்கின்றது.
பொதுவாக டாரண்ட்களின் வழி ஒரு முழு மூவியோ அல்லது பெரும் மென்பொருளோ நீங்கள் இறக்கம் செய்ய முயலும் போது உண்மையிலேயே நீங்கள் ரேப்பிட்ஷேர் போன்ற ஒரு பொது செர்வரிலிருந்து இறக்கம் செய்வதில்லை. மாறாக உங்களைப் போன்ற இன்னொரு நபரின் கணிணியிலிருந்து தான் இறக்கம் செய்கின்றீர்கள். அந்த நபரை இங்கே Seeder- என்கின்றோம். அதிக Seeder-கள் இருக்கும் போது இறக்கம்செய்யும் வேகமும் உங்களுக்கு அதிகமாயிருக்கும். அதாவது ஒரு கோப்பின் பலபகுதிகளை பல Seeder-களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
பெற்றுக்கொள்ளும் உங்களை Leeches என்பர். உங்கள் கணிணியில் இறக்கப்பட்டு நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பிறர் இறக்கம் செய்ய நீங்கள் அனுமதி வழங்கும் போது நீங்களும் Seeder ஆவீர்கள். பொதுவாக எவ்வளவுக்குஎவ்வளவு அதிகமாய் அப்லோடு செய்ய நீங்கள் அனுமதிக்கின்றீர்களோ அதைப்பொறுத்தே உங்கள் டவுண்லோடு வேகமும் இருக்கும். Seeder-க்கும் Leeches-க்கும் இடையே இருக்கும் Tracker எனும் செர்வர் இருவரையும் இணைத்து விடுவதோடு சரி வேறெந்த வேலையும் அது செய்வதில்லை. சொல்லப்பபோனால் அது உங்கள் அப்லோடு வழக்கத்தை கண்காணித்து கொண்டேயிருந்து உங்களுக்கு கிரெடிட் கொடுப்பதுண்டு. இதனால் நீங்கள் டவுண்லோடு செய்யும் போது உங்களுக்கு அதிக வேகம் கிடைக்கலாம்.
Seed செய்யும் போது உங்களின் Upload Limit-யை கூட்டிவைத்திருங்கள்.இதனால் உங்களின் கிரெடிட் அதிகமாகும்.பின் Leech செய்யும் போது Upload Limit-யை குறைத்துவிட்டு Download Limit-யை கூட்டிவிட்டுவிடுங்கள்.மேலே நீங்கள் பெற்ற கிரெடிட்டால் இப்போது உங்கள் கோப்பிறக்கவேகம் அதிகமாயிருக்கும்.
.torrent கோப்புகள் இணையத்தில் தேட பல கிடைக்கின்றன. www.btmon.com www.mininova.org போன்ற தளங்களில் தேடலாம்.உங்கள் கோப்பிறக்கம் தொடங்க குறைந்தது ஒரு Seeder-ராவது இருக்க வேண்டும்.விண்டோசில் µTorrent பயன்படுத்தியும் லினக்சில் Deluge பயன்படுத்தியும் இறக்கம் செய்யலாம். ஒருவேளை நீங்கள் இது போல டாரண்ட் கோப்புகள் உருவாக்கி அதன் மூலம் கோப்புகளை உலகுக்கு பகிர விரும்பினால் ஒரு டிராக்கர் செர்வரின் உதவி உங்களுக்கு தேவைப்படும். டாரண்ட் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களுக்காக இத்தகவல்களைச் சொன்னேன்.
பாருங்கள்... நிஜ உலகத் தத்துவம் இந்த டாரண்ட் உலகிலும் எவ்வளவாய் ஒத்துப்போகின்றது. எவ்வளவு கொடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கதிகமாய் திரும்பப் பெற்றுக்கொள்வீ்ர்களாம். இரு சிங்கிள்களுக்கிடையேயும் தான்.
நல்லவனுக்கு நலம் நடக்கும்என மட்டும் நம்பாது வல்லவனாயும் வாழ்ந்துவிடு பாப்பா -பாரதியார் |
ரமணிச்சந்திரன் நாவல் "இது ஓர் உதயம்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Ithu oor uthayam Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF


நல்லவனுக்கு நலம் நடக்கும்






9 comments:
ஓ, இதுதான் டோரண்ட்டா, பலமுறை முயற்சித்து வேண்டாம் என்று விட்டுவிட்டேன். இப்பொழுது புரிந்துவிட்டது இதன் ரகசியம். நன்றி பிகேபி.
டாரெண்ட் பற்றிச் சொல்லும் பொழுது அதிலுள்ள படங்களை தரவிறக்கும் பொழுது சட்ட சிக்கல்கள் ஏதெனும் உள்ளதா? தரவேற்றம் செய்தால் பிரச்சனைகள் ஏதேனும் வருமா?
இது போல டாரண்ட் கோப்புகள் உருவாக்கி அதன் மூலம் கோப்புகளை உலகுக்கு பகிர விரும்பினால் ஒரு டிராக்கர் செர்வரின் உதவி உங்களுக்கு தேவைப்படும்........
இது பற்றிக்கொஞ்சம் விளக்கமாக பதிவு ஒன்று எழுதுவீங்களா ?
இறக்கம் செய்யும் போது அப்லோடு லிமிட்டை எப்படி கூட்டுவது?
டோரண்ட் பயனுள்ள மென்பொருள்
டோரண்டை தரவிறக்கம் செய்து
1 ஜிபி பெருமானமுள்ள ஒரு பைலை இறக்கி கொண்டிருக்கிறேன்.
ஆனால் அநியாயத்துக்கு ஸ்லோவாக இருக்கிறது. எதாவது வழி சொல்லுங்கள்
ஒரு வழி உள்ளது. என்றாலும் இது வைரஸ் கோப்புகள் ஏதேனும் நம் கணினியில் பதிவிறங்கினால் விஷ வேகத்தில் நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கணினிக்கும் வைரஸ் பரவ ஆரம்பித்து விடும். மேலும் விவரங்களுக்கு செல்லவும் http://www.lvllord.de/?url=tools
Dear,
Really good post. would you please tell me about 'RSS feed'.
Regards,
Haja
நன்றி
@ இ.கொ,
ஆமாம், காப்புரிமை உள்ள எதையும் பகிர்தல் என்பது காப்புரிமை சட்டபடி குற்றமாகும். அதனால் தான் காப்புரிமை உள்ளவைகளின் தரவேற்றம் பொதுவாக அனானியாக செய்யப்படுகிறது. அதிலும் மாட்டிக் கொண்டு கோர்ட், கேஸ் என அலைபவர்கள் உண்டு. ஆனால் இந்த காப்புரிமை என்பதே ஒரு போங்கு ஆட்டம் தான். இது வலது சாரி (காப்பி ரைட் /Copy Rights) கொள்கையாகும். ஆனால் நம்ம ஆளுங்க இதுக்கு வைத்து இருக்கும் அர்த்தம் காப்பி பண்ணுறது தான் சரி. அதாவது Copying is Right !!!
@ மாயா,
uTorrent - ல் File menu -ல் Ctrl+N click செய்தால் எளிதாக torrent file ரெடி. ஆனால் அதற்கு பிறகு நீங்கள் torrent-க்காக வைத்து இருக்கும் Local File (or) Local Folder ஐ இடமாற்றம் செய்ய கூடாது. மேலும் நீங்கள் ஏற்கனவே uTorrent உபயோகிப்பதால் உங்களுக்கு இந்த சுட்டி போதுமென கருதுகின்றேன்.
http://www.mininova.org/upload
@ வால் பையன்,
torrent வேகம் பல விஷயங்களைப் பொறுத்தது. முக்கியமாக Port Forwarding - எனப்படுவது. இதற்கு www.portforward.com -ல் தெரிந்து கொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு நமது http://wiki.pkp.in/forum/start வழியாக தொடரவும்.
இறுதியாக எனது பரிந்துரைகள்-
1. http://www.utorrent.com is best and light weight torrent client.
2. http://thetorrentsource.org is best private tracker.
3. ங்கொய்யல, digit - க்கு காப்புரிமை கிடையாதாம். ஆனால் அதை வைத்து உருவாக்கிய digital technology - க்கு காப்புரிமையாம். அப்ப digit கொடுத்த நாம் கேனையா?
with care and love,
Muhammad Ismail .H, PHD,
Post a Comment