உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, December 09, 2008

சின்னவன்

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கலியுகம் மொத்தம் 432,000 ஆண்டுகளாம். அதில் இதுவரைக்கும் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள். கலியுகத்திலேயே இன்னும் மிச்சம் எத்தினாயிரம் ஆண்டுகள் போக வேண்டி இருக்கின்றதுவென பாருங்கள்.

இதற்கு முந்தைய யுகமான துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.

அதற்கும் முன்பு இருந்த திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.

அதற்கும் முன்பு முதலாவதாக இருந்த யுகம் தான் சத்யுகம்.அதில் மொத்தம் 1,728,000 ஆண்டுகள் இருந்தனவென்கின்றார்கள். அக்காலம் தான் பூமியின் பொற்காலமாம். ஒவ்வொருவரும் 100,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்களாமே.

இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi). ஒரு Chaturyugi = மேலே எல்லாம் சேர்த்து மொத்தமாய் 4,320,000 ஆண்டுகள்.

கலியுகம் முடிந்ததும் என்னவாகும்? மீண்டும் பொற்காலமான சத்யுகம் தொடங்கி இன்னொரு Chaturyugi ஆரம்பிக்கும். இப்படியாக மொத்தம் 71 Chaturyugi உண்டாம். இந்த 71-ம் சேர்ந்தது ஒரு Manvantara( Manu) ஆகின்றது.நாம் இப்போது இருப்பது 28-ஆவது Chaturyugi-ல், 7-ஆவது Manu-வான Vaivasvat Manu-ல்.

பிரம்மாவின் ஒருநாள் ஒரு கல்பா (Kalpa) எனப்படுகின்றது. இது 14-Manuக்களை கொண்டது. அதாவது மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள். இந்த ஒரு நாள் முடிந்து பிரம்மா தூங்கப்போகும் போது மொத்த உலகமும் அழிந்து மறுநாள் அவன் விழிக்கும் போது புது உலகம் உருவாகும் என்பது நம்பிக்கை. ஆக வேதங்களின் படி இன்றைய உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 4,294,080,000 ஆண்டுகள். நாம் இருக்கும் இந்த 2008-ம் வருடம் வேதகாலண்டரின் படி 1,955,885,109-ஆவது வருடம்.

யூனிக்சில் cal என ஒரு கட்டளை உண்டு. இது நாட்காட்டியை உங்களுக்கு காட்டுவதற்காக அமைந்த கட்டளை. உங்கள் லினக்சின் $ prompt-ல் cal sep 1752 என நீங்கள் தட்டினால் 1752-ஆம் ஆண்டிற்கான செப்டம்பர் மாத காலண்டரை அது காட்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் 2-ம் தியதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் தியதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் simply gone. ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் பிரிட்டீஷார் தங்கள் காலண்டர்முறையை பழைய ஜூலியன் நாட்காட்டிமுறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிமுறைக்கு மாற்றினார்கள். அதனால் இப்படி சின்னதாக ஒரு அட்ஜஸ்ட்மண்ட் செய்யவேண்டி வந்தது.அந்த 1752-ம் வருட காலண்டரை

நீங்கள் கீழ் கண்ட சுட்டியிலும் பார்க்கலாம்.
http://www.timeanddate.com/calendar/?year=1752&country=1

இந்த உலகத்தின் ஆயுட்காலமாக மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள் இருக்க நானோ அந்த 11 நாட்களை பற்றியே கவலைக்கொண்டிருக்கின்றேன். எவ்வளவு சின்னவன் நான்.


முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

எஸ்.சம்பத் "இடைவெளி" நாவல் மென்புத்தகம் இங்கே தமிழில்.S.Sampath "Idaiveli" in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு இருக்கா ...

வால்பையன் said...

பூமியின் ஆயுள்காலம் சரியாக இருக்கலாம். ஆனால் மனித நாகரிகத்தை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று சொன்னால் அதையும் தெரிந்து கொள்வேன்

Muthu Kumar N said...

அருமையான தொகுப்பு, இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று சின்னவன் பதிவைப் படித்தவர்களுக்கு தெள்ளத்தெளிவாக விளங்கும் என்பதில் ஐயமேதுமில்லை...

rajakvk said...

1 டாலர் என்பது 50 ரூபாய் என்பது போல, இன்றைய ஒரு நாள் என்பது அவர்கள் நாள் கணக்கில் 10,000,00 நாட்களாக இருக்குமோ?

Krish said...

nalla pathivu!
On what basis the 'vedas' calculated this?

ரொம்ப நல்லவன் said...

பதிவு சூப்பர்!
முயல் ஆமை அதை விட சூப்பர்!
கலக்குறீங்க போங்க.

۞Ghanesh said...

Happy new year : Virodhi....
Per Our Calenders across the world this new year(2009-10) is the 1,955,885,111th year since the beginning of creation. Enjoy the day. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்