உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, January 16, 2009

3G-யுடன் மடிக்கணிணிகள்

முன்பெல்லாம் GPRS என்கின்ற பெயரில் டயல்அப் இணைப்பு வேகத்தில் ”எங்கிருந்தாலும் இணையம்” வசதியை பெற்றிருப்பீர்கள். அதை 2.5G என்பார்கள். இப்போது அதே GPRS இன்னும் ஒரு படி முன்னேறி 3G எனும் பெயரில் வந்திருக்கின்றது. அட்டகாச வேகம் நீங்கள் எங்கிருந்தாலும் கிடைக்கும் குறிப்பாக மெட்ரோ ஏரியாவில். வீட்டிலும் விமானநிலையத்திலும் நீங்கள் Wifi பயன்படுத்தினால் வழியில் நீங்கள் 3G பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ கூட சிக்கலின்றி தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். எங்கிருந்தாலும் இணையம் கிடைக்குமென்றால் அது 3G. அங்கிருந்தால் மட்டுமே இணையம் கிடைக்குமென்றால் அது WiFi.


இப்போதைக்கு இந்த 3G வசதி கைப்பேசிகளில் மட்டுமே இருந்து வருகின்றது. அதுவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் நோக்கியாவின் N வரிசைபோன்கள், ஆப்பிளின் ஐபோன்கள்,RIM-ன் பிளாக்பெர்ரிகளில் இதைக் காணலாம். ஏறக்குறைய ஒரு கணிணியின் வேலையையே முழுதாக செய்யும் இந்த ஸ்மார்ட்போன்களை நாம் கணிணியாகவே கணித்தோமானால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் கணிணி தயாரிப்பாளார் இடத்துக்கு நோக்கியா வந்துவிடுவார். அதை அடுத்துதான் HP, Dell வந்து மீண்டும் நான்காம் இடத்தை ஆப்பிள் பிடிக்கும். மடிக்கணிணியை கண்டு பிடித்த டொசீபா-வே 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே கைப்பேசிகளில் இருக்கும் கேமராக்களை கணக்கில் கொண்டால் உலகில் அதிக அளவு காமெரா தயாரிப்பாளர் என்ற பெயர் நோக்கியாவிற்கே போய்விடுகின்றது.

இந்திய முகங்களை பார்க்க கடந்த முறை சிக்காகோ Devon Ave-போக வழிதவறிய போது iPhone 3G-யின் GPS ரொம்பவே உதவியாக இருந்தது. இந்த 3G வசதியை சீக்கிரத்தில் மடிக்கணிணிகளும் தன்னகத்தே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தைகளில் ஏற்கனவே இத்தகைய மடிக்கணிணிகள் நெட்புக்குகள் இருக்கலாம். இதனால் போகுமிடமெங்கும் அதிவேக இணைய இணைப்பு உங்கள் மடிக்கணிணியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கும் ஒரு சிம் கார்டு போட வேண்டி இருக்குமோ?

சென்னையில் இது போல போகுமிடமெல்லாம் இணைய இணைப்பு வேண்டுமானால் இப்போதைக்கு இரண்டு சேவைகள் உள்ளனவென நண்பர் முகம்மது இஸ்மாயில்.H, PHD தெரிவித்திருந்தார்.

ஒன்று BSNL-ன் EVDO (Evolution-Data Optimized) சேவை.மாதம் 550 ரூபாயாம். எவ்வளவு வேண்டுமானாலும் வலைமேய்ந்து கொள்ளலாம். குறைந்த பட்சவேகம் 256 Kbps-ஆகவும் அதிக பட்சவேகம் 1024Kbps ஆகவும் இருக்கும். ஒரு PCMCIA கார்டு (BSNL data card ) கொடுப்பார்கள் அல்லது USB மோடமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.அதை உங்கள் மடிக்கணிணியில் செருகிக் கொள்ளவேண்டும். அவ்ளோதான். இவ்வசதி பெரும்பாலான தமிழக நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேகம் தான் வித்தியாசப்படலாம். Rental அல்லது Purchase செய்யவும் வசதி கொடுத்திருக்கின்றார்கள்.

இவ்வசதிஉள்ள நகரங்களின் வரிசையை பார்க்க கீழே சொடுக்கவும்
http://bsnlevdoclub.com/bsnl-evdo-coverage/bsnl-evdo-enabled-cities-in-india/

சென்னையில் எங்கெங்கு எவ்வளவு EVDO வேகம் கிடைக்கும் என இங்கே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
http://chennai.bsnl.co.in/News/EVDO_BTS.htm

மேலும் விவரங்களுக்கு
http://chennai.bsnl.co.in/News/EVDO.htm

இன்னொன்று Tata Indicom-ன் Photon சேவை. மாதம் 1500 ரூபாயாம். ஒரு USB மோடம் கொடுப்பார்கள்.சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்கின்றது.
http://www.tataindicom.com/HSIA-photon-usb-personal.aspx

3G சேவை எப்போது சென்னைக்கு வருகின்றதாம்?
தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து விலைவாசி குறைந்துவிட்டது என படம் காட்டுவது போல 3G-யையும் வெளியிட்டு ஒளிருகின்றோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.



கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்-முகமதுநபி

ஜெய்சக்தி "எழுதி வைத்தாய் என்னை" புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Jaisakthi Ezhuthi Vaithaai Yennai novel in Tamil pdf ebook Download. Right click and Save Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Thiruppullani Raguveeradayal said...

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ந்ண்பர் EVDO வாங்கிய நாளிலிருந்து 23 -- 35 kbpsக்கு மேல் கிடைத்ததேயில்லை என்று புலம்புகிறார். BSNL காரர்கள் வெளியில்தான் வேகம் கிடைக்கும் வீட்டுக்குள் கிடைக்காது என்ற்ட் சொல்லிவிட்டார்களாம்.அவர் வீட்டுக்கும் கேகேநகர் தொலைபேசி நிலையத்துக்கும் 2கிமீ தொலைவுதான்.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் PKP,

காலத்துக்கேற்ற மிகப் பயனுள்ள பதிவு.
இது சம்பந்தமாக சில கேள்விகள் உள்ளன..உங்கள் கேள்விகள் பக்கத்தில் தருகிறேன்..பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதிவுக்கு நன்றி நண்பரே !

Anonymous said...

to day i saw a trailor about mgr's animated film


information about animation film about MGR.


mgr's first 3 D animated film

http://puratchithalaivan.com/


Contact Us At:
Mayabimbham Media (P) Ltd.
Plot No. 6/1,
Nakkeeran Street,
Valasaravakkam,
Chennai - 600 087.
Phone No : 91-44-24866149
: 91-44-65877828
E Mail ID : info@mayabimbham.com

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்