உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, May 25, 2009

எலியின் மரணம்

புஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம் ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ?. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.

மடிக்கணிணியை நமது வீட்டு HD டிவியோடு இணைத்து பெரிய 40 இஞ்ச் திரையில் வலை மேய்வது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, 10Megapixel போட்டோக்களை பார்ப்பது ரொம்பவும் ரம்மியமான விசயம். ஆனால் மடிக்கணிணியை இயக்க அதின் மவுசை கிளிக்க என ஒருவர் டிவி பக்கத்திலே ஒண்டிக்கிடக்க வேண்டுமாயிருக்கும். புதிதாக நான் அறியவந்த Air mouse உங்களிடமிருந்தால் நீங்கள் பத்தடி தள்ளி ஹாயாக சோபாவில் அமர்ந்திருந்து இந்த ரிமோட் மவுஸ் வழி மவுஸ் அம்புகுறியை நகர்த்தலாம், கிளிக்கலாம், டபுள் கிளிக்கலாம். எல்லா ஹோம் தியேட்டருக்கும் தேவையான ஒன்று. இன்றைய எக்கனாமிக் சூழலில் என் “Wish list"-ல் மட்டும் சேர்த்து வைத்திருக்கின்றேன்.


இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்












ஜெய்சக்தி ”வண்ணத்துப்பூச்சியாய்...” புதினம் மென்புத்தகம் இங்கே தமிழில்.Jaisakthi "VannaththupPoochiyaai..." novel in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



9 comments:

Krish said...

பழையன புதியன புகுதலும் தானே வாழ்க்கை

ஆ.ஞானசேகரன் said...

அறிந்தது..ஆனாலும் உங்கள் மூலம் அறிந்தது அற்புதம்

sarathy said...

வழக்கம் போலவே உங்கள் பதிவு அருமை..
உங்களை பார்த்துதான் நானும் blog ஆரம்பித்தேன்...

புதிய தகவலுக்கு நன்றிகள் பல..
தொடருங்கள்...

மதுரை பொறுக்கி said...

I already have a microsoft wireless mouse which can operate from anywhere in my room. what is the difference between air mouse and a wireless mouse?

Muthu Kumar N said...

வணக்கம் பிகேபி அவர்களே,

வாழ்த்துகள் உங்கள் அருமையான நீண்ட நாட்கள் கழித்த முதல் பதிவிற்கு தங்கள் பதிவு திருப்தியாக இருந்தது.

\\"எலியின் மரணம்"\\

தலைப்பே அசத்துகிறது மற்றும் என்னால் ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது நீங்கள் எதைப்பற்றி கூறப்போகிறீர்கள் என்று.

நானும் ஒரு காலத்தில் மேசைக்கணிணியை தெலைக்காட்சியோடு இணைத்துவிட்டு அதை இயக்குவதற்கு S$140 கொடுத்து வாங்கிய RF கம்பியில்லா சுட்டெலியை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டமெல்லாம் ஞாபகத்திற்கு வந்து போனது. இதைவிட மோசம் இதற்கு முன் வந்த IR கம்பியில்லா சுட்டெலியை நினைத்தாலே கடுப்பாக இருக்கிறது. ஆனால் அவையெல்லாம்த அந்த நேரத்தில் ஒரு வரப்பிரசாதம்.

பார்கலாம் இந்த வாயு சுண்டெலி இப்போதைக்கு S$250 வெகு சீக்கிரத்தில் S$50 அப்போதுதான் வாங்க வேண்டும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
முத்துக்குமார்.ந

Unknown said...

Hi PKP,

Glad to see that yo are back..

Why you were out of the scene for some time.

I hope you are doing fine there.

By the way can you send me the Ramanichnadran's books to my email.

samsulasfa at gmail dot com

I would be so glad to receive them

Thanks in advanced,

ASFA

தகட்டூரான் said...

சொல்லிட்டு போயிருக்கலாமில்ல! என்ன பன்றது? பிகேபி.இன் க்கு அடிக்ட் ஆயிட்டோமே

கவி ரூபன் said...

வணக்கம் பி.கே.பி (மறுபடியும் உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில் சந்தோசம். - படிப்பதில்லையா என்ற எதிர்க்கேள்வி விடுக.)

பல விசயங்கள் கற்பனையாக மிகைப்படுத்தலாக கதைகளில்/புராணங்களில் எல்லாம் காணக்கிடக்கின்றன. ஆனால் நீங்கள் சொல்வது போல பல நிஜமாகும் நிலை காணும் போது வியப்பின் விளிம்பில் நிற்கின்றோம். எங்கோ நடப்பதை வேறெங்கோ இருந்து ஒரு முனிவன் பார்த்துச் சொல்வது நிஜமாகவில்லையா? (மகாபாரதம்...)

எல்லாம் எப்போதோ சொல்லப்பட்டது அல்லது எப்போதோ இருந்தது. இல்லாதது தோன்றாது... (உண்மையோ...?)

Muhammad Ismail .H, PHD., said...

என்னாது சாதா எலி செத்திடுச்சா? அப்ப இந்த வாயு எலிக்குத்தான் வருங்காலமா? ம்ம் நடக்கட்டும். ஆனால் இந்த வாயு எலிக்கு ஒட்டக விலையாக அல்லவா இருக்கின்றது.


with care & love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்