உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, June 06, 2009

பேசுங்க பேசுங்க


புதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். கடலிலிருக்கும் உப்பையெல்லாம் எடுத்து தரையில் கொட்டினால் உலகம் முழுக்க 500 அடி உயரம் வரைக்கும் அது நிரம்பி கிடக்குமாம். அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.

http://betacalls.com என ஒரு தளத்தை நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியிருந்தார். 10 டாலருக்கு 333 நிமிடம் வரைக்கும் பேசலாமாம். Hotspot போன்ற VPN மென்பொருள்கள் எதுவும் தேவையில்லை. முயன்றுபார்த்து சொல்லுங்கள்.

அதுபோல http://www.nettelsip.com (NetTelePhone) என ஒரு தளம் UAE-யிலிருந்து இந்தியாவிற்கு பேச நிமிடத்திற்கு 0.069 அமெரிக்க டாலர் வாங்குகிறார்களாம். அவர்கள் தளத்திலேயே UAE-யின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை இத்தளம் சட்டப்படி அனுமதிபெற்றே நடத்தப்படுகின்றதோ என்னமோ? குறைந்த விலையிலேயே நிறையப் பேசலாம்.

“உலகில் முதல் பேசும் கருவியை கண்டுபிடித்தவன் நானல்ல. அது கடவுள்தான். நான் கண்டு பிடித்த கருவியை இடையிலேயே நிறுத்தி பேசவிடாமல் செய்ய முடியும். ஆனால் இறைவன் கண்டு பிடித்த கருவியோ பேச ஆரம்பித்தால் அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அந்த கருவிதான் பெண்கள்” என வேடிக்கையாக ஒருமுறை பிரபல விஞ்ஞானி எடிசன் அவர்கள் பேசியதாக சொல்வார்கள். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.

Torrent ஐப் போலவே ஒரே Click ல் ஆங்கிலப் படங்களை download செய்வதற்கு மிகச் சிறந்த வலை தளம் என கீழ்கண்ட தளமொன்றை அறிமுகப் படுத்தியிருந்தார் இன்னொரு நண்பர்.
http://oneclickmoviez.com

தொடர்ந்து இதுபோன்ற பல பயனுள்ள நல்லத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பெருவாரியான பின்னூட்டங்கள் வழியும் மின்னஞ்சல்கள் வழியும் மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துதல்கள் கூறி உற்சாகமூட்டிய அனைத்து இனிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.
இன்னொரு புரியாத புதிர்?!


மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.












தமிழ் மழலையர் கல்வி பாடல்கள் மென்புத்தகம்.Tamil Children Rhymes pdf ebook Download. Right click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



16 comments:

இம்தியாஸ் said...

கரும்பு இருக்குற எடத்துக்கு எறும்பு தானா வரும் ணா....

Tech Shankar said...

thanks dear PKP

Sudhar said...

Betacalls not working. It is blocked. I just tried after your post.

Another one asking us to pay $10 nowitself. (usually we first register and get id and password etc, then credit), so not interested to take risk.

Keep post as and when u heard these things.

Sudharsan

Anonymous said...

hello, pkp My name is Prathap...

In my computer the mike is not working...i have tried a lot but i can't find the pbm. will this is be the pbm of Motherboard s/w..

Please help me

ALIF AHAMED said...

try www.jumbocalls.com

6.07 hour india mobile

ALIF AHAMED said...

http://stagevu.com/videos/Films_and_Movies


here free dvix movie download


enjoy

:)

Muthu Kumar N said...

பிகேபி அவர்களே,

அருமையான பதிவு இணையவழி தொலைபேசிப்பற்றி. வாழ்த்துகள்.

\\பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள்\\

சரியாகச் சொன்னீர்கள் அதுவும் கடல்கடந்து தெலைதொடர்பு என்றாலே கண்ணைமூடிக்கொண்டு டாலரை வாங்கத் தயங்குவதேயில்லை...

\\அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.\\

இப்போது உள்ள உலகத்தில் உப்பையும் விலை குறைக்க மாட்டார்கள தெலைத்தொடர்பையும் விலை குறைக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது...

\\ சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.
இன்னொரு புரியாத புதிர்?! \\

அது உங்கள் பதிவுகளின் பலனை அடைந்ததின் மகிழ்ச்சியினால் உங்கள் மீதுள்ள மரியாதையினால் மற்றும் நீங்கள் மற்றவருக்கு ஆற்றும் இந்தத் தொண்டைக் கண்டு வியந்ததினால்...


\\ மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது. \\

அருமையான கருத்து தன்னம்பிக்கையை பற்றியது கருத்தாழம் மிக்க உரமேற்றக்கூடிய அருமையான கருத்து.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Beski said...

தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். ரொம்ப நன்றி.

Unknown said...

Dear sir,

மிக்க நன்றி பி கே பி அவர்களே
நாங்கள் எல்லோரும் துபாய் இல பணி புரிகிறோம்

அன்புடன்
இராயர்

Govind.K said...

Now Reliable calling gives 500 minuts for 10$+Tax = 10.8. Make use of it

Govind.K said...

Reliance calling gives 500 mins for lessthen 11$. try it.

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் பிகேபி,

ம்ம்ம, சக மனிதர்களின் மீதுள்ள பரிவால் மற்றுமொரு கரிசனையான பதிவு. ஆனால் இந்த பெயரளவில் இஸ்லாமும், செயலளவில் முட்ட துலுக்கனாகவும் உள்ள அரபுகள் இதையெல்லாம் கேட்பார்களா? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம் மட்டும் தான்.


நான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 2004 ஆரம்பத்தில் சென்று வந்தேன். அங்குள்ள தகவல் தொடர்பு நிலையை பார்த்து கொஞ்சம் சந்தோசம், நிறைய துக்கம். அந்த கோபத்தில் அவர்களுக்கு சூடாக மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் பதில் வரவில்லை. அதன் PDF வடிவம் கீழே,,

http://gnuismail.googlepages.com/VoIPSitesBaningETISALATNetworks-Reg..pdf


நான் உண்மையில் இந்த மின்னஞ்சல் யாரின் மனசாட்சியை கொஞ்சமாவது உலுக்கும் என்று நினைத்தேன். ஆண்டுகள் பல ஆகியும் இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது என்னும் போது, அவர்களுக்கு 'மனம்' என்ற ஒன்று இருந்தால் தானே அதில் சாட்சி இருக்கும் என்ற உண்மை தற்பொழுது தெரியவருகிறது :-(

இந்த www.hotfoon.org (or) www.hotfoon.com (or) www.hotfoon.cn கூட விலை மலிவான சேவையை வழங்குகிறது. முயற்சி செய்து பார்க்கவும். UAE ல் வாழும் நம் சொந்தங்கள் இங்கே முதலில் பார்க்கவும். http://www.hotfoon.cn/dubai.html


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Anonymous said...

நல்ல புள்ளை

2009 சனவரியில் 10 ம்
2009 பிப்ரவரியில் 9 ம்
2009 மார்ச்ல் 6 ம்
2009 ஏப்ரலில் 2 ம்
மற்றும்
2009 மே யில் 2 Articals எலுதிய திரு.பிகேபியை வாரத்திற்க்கு 5 Articalலாவது எழுதவேண்டும் இல்லை என்றால் கடுப்பாகிவிடுவேன் என்று ச்சும்மா ஒரு பேச்சிக்கு டொஷ் வுட்டதும் பய்ந்துபொய் இன்றைய தேதி 09-06-2009 தான் ஆகிறது இக்கணமே 2 பயனுள்ள Articals வந்துவிட்டது இன்னும் எத்தனை வரப்போகிறதோ..... Wait And See நம்ம பிகேபி ரொம்ப நல்ல புள்ளை, வாழ்க பிகேபி, வழர்க www.pkp.in

என்றும் நட்புடன்

குணா.சி
சிங்கப்பூர்

Marx said...

I am using some VOIP which is part of betacalls,actionvoip.com voicecheap.com etc it is cheap and working fine.Guarantee for money.

Vengu said...

தயவு செய்து mp3 பாடல்களை DVDயில்
பதிவு செய்து பிளேயரில் பாட வைப்பது
எப்படி என்று விளக்கிச் சொல்ல முடியுமா?

அருண் பிரசாத் ஜெ said...

Ungaladhu ovvoru pathivayum enadhu nanbargalidam pagirndhu kolgiren ... thank u very much to u PKP......ungaladhu unmyaana peyar enna ?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்