உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 10, 2009

சாதாரண பிரிண்டரிலிருந்து புத்தகம்

காகிதத்தின் இருபக்கத்திலும் பிரிண்ட் செய்யும் வசதி உள்ள (இதை Duplexing என்பார்கள்) பிரிண்டர் உங்களிடம் இல்லாவிடினும் சாதாரண மலிவு பிரிண்டர் மூலம் கூட தாளின் இருபக்கமும் அச்சிட்டு ஒரு புத்தகம் போல செய்யலாம் என நம் நண்பர் முகம்மது இஸ்மாயில் விளக்கியிருந்தார். அது எப்படி என அனைவருக்கும் பயன்படட்டுமேயென இங்கு ஒரு பதிவாகவேயிடுகிறேன்.

”விலை அதிகம் உள்ள பிரிண்டர்களில் தான் ஒரே நேரத்தில் இருபுறமும் அச்சிட இயலும். ஆனால் Canon LBP2900 போன்ற விலை குறைவான Entry Level Printer களிலும் இதை செய்ய இயலும். அதற்கான வழிமுறை இதோ,,,

மொத்தம் 150 page உள்ள doc.file லை புத்தகம் போல பிரிண்ட்செய்ய வேண்டி உள்ளது என்றால் 75 காகிதத்தை மட்டும் பிரிண்டரின் ட்ரேயில் வைக்கவும். இல்லை அதைவிட அதிகமாக வைத்தாலும் பிரச்சினை இல்லை.

பிறகு படத்தில் உள்ளபடி Print Range - All, மற்றும் Print - Odd Pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 1,3,5,7 ….. 149 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும்.

பிறகு ட்ரேயில் மீதம் உள்ள வெற்று தாள்களை எடுத்துவிட்டு பிரிண்ட் ஆகி வந்த 1 to 149 Odd Pages 75 சரியாக ட்ரே உள்ளே வைத்து மறுபடியும் ப்ரிண்ட் கொடுக்கவும். இப்ப அதில் Even pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 2,4,6,8 ….. 150 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும். அவ்வளவுதான் விஷயம்.

குறிப்பு - இதில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் பிரிண்டரானது பிரிண்ட் பண்ணி அடுக்கும் முறை தான். அதில் சரியான பக்கத்தை வைத்தால் தான் இரண்டு பக்க பிரிண்டிங் சாத்தியம். இல்லையென்றால் ஒரே காகிதத்தின் ஒரே பக்கத்திலேயே இரண்டு பக்கத்தையும் பிரிண்ட் செய்துவிடும். அல்லது அடுத்த பக்கத்தை தலைகீழாக பிரிண்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் Document முதல் நான்கு பக்கத்தை மட்டும் சோதனை முறையில் வெறும் இரண்டு காகித்தை வைத்து பிரிண்ட் செய்து இதை நன்றாக புரிந்து செய்யவும். தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையில் தேவையற்ற வீணடிப்பு சோதனைகள் வேண்டாம். LOL.”

நன்றி முகம்மது இஸ்மாயில்!!

xMax எனப்படும் wireless technology குறித்து அவர் விசாரித்து கேட்டிருந்தார். சுத்தமாக எனக்கு பரிச்சயம் இல்லாததால் மவுனமே எஞ்சியது. இந்நுட்பத்தை நம்மில் யாராவது பயன்படுத்தி இருந்தால் அனுபவத்தை சொல்லலாமே. பதிலுதவியாய் இருக்கும்.

"நண்பன் - உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளும் பரிசு” என்றார் ஒருவர். பரிசுகளினால் பயன் உண்டு. ஆனால் அவற்றை விலை கொடுக்காமல் வாங்கமுடியாது. உண்மைதான்.

ண்பர்கள் சிலர் மென்புத்தகங்களை இறக்கம் செய்ய முடியவில்லையே என புகார் சொல்லியிருந்தார்கள். தீர்வாக http://www.scribd.com -ல் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.

லையில் சிக்கிய ஒரு தமிழ் MP3 தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
http://www.nkdreams.com/music/index.php?dir=


குழந்தையின் மழலை,
பைத்தியக்காரனின் பிதற்றல்,
மகானின் பொன்மொழி
இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.










உமா பாலகுமார் புதினம்
”சகியென சரணடைந்தேன்” மென்புத்தகம்.
Uma Balakumar "Sakiyena Saranadaithen"
novel in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



16 comments:

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ள பதிவு மிக்க நன்றி சார்

Beski said...

மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.

Anonymous said...

உபயோகமான தகவலுக்கு நன்றி.

Anonymous said...

மறுபடியும்

வலையில் சிக்கிய ஒரு தமிழ் MP3 தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
http://www.nkdreams.com/music/index.php?dir=

என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் இந்த சுட்டியை ஏற்க்கனவே நம் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன் மற்றும் பல பாடல்களை இறக்கம் சேய்திருக்கிறேன். நல்ல சுட்டித்தான்

Anonymous said...

xMan is here:
http://www.networkworld.com/weblogs/convergence/013022.html

Anonymous said...

xMax:
http://www.processor.com/editorial/article.asp?article=articles%2Fp2809%2F09p09%2F09p09.asp&guid=&searchtype=&WordList=&bJumpTo=True

http://blog.tmcnet.com/blog/rich-tehrani/wimax/xmax.html

Tech Shankar said...

Thanks dear. It is new thing for many persons.

Anonymous said...

இரண்டு பக்கமும் ப்ரிண்ட் பண்ணி புத்தகமாக போடுவது பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன். சரி. லெட்டர் சைஸ் பேப்பரில் இரண்டு காலம் போட்டு ப்ரிண்ட் பண்ணி , இரண்டு பக்கமும் ப்ரிண்ட் எடுத்து,எட்டு எட்டு பேப்பரக எடுத்து பாதியில் மடித்து, குமுதம் சைஸ் புத்தகமாக செய்வது எப்படி?.. நான் சுமார் 50 புத்தகம் ( 150-200 பக்கங்கள்) செய்து பைண்ட் பண்ணி வைத்து இருக்கிறேன். இது பேஜ் மேக்கரில் தான் செய்ய முடியும்.
செய்முறை தேவைப்படுமா? --
பி எஸ் ஆர்

G.R said...

மிக்க நன்றி பிகேபி சார்..
G.R..

அன்புடன் அருணா said...

Fantastic info!!!thanx!!

தென்றல்sankar said...

hipkp!
sucessful people do not relax in chair..they relax in their works... "same like as pkp"

Anonymous said...

ஒரு A-4 பேப்பரில் landscape-ல் இரண்டு காலம் செய்து சுமார் 96பக்கங்கள் டெக்ஸ்ட் flow பண்ணி விட்டு, அதை back and front அச்சடித்து ,எட்டு எட்டு பேப்பராக மடித்து பைண்ட் பண்ணால் குமுதம் அளவில் புத்தகம் வரவேண்டும். நான் சுமார் 50 புத்தகம் பண்ணீ இருக்கிரேன். வழி முறை தேவைப்படுமா? -- பி எஸ் ஆர்

Anonymous said...

Dear Gopi,

Please send me ebooks of Sujatha to indhraa@hotmail.com

With Love,

Indhraa

sangawww said...

பாஸ் சூப்பர்

nprasanna said...

Hi,

The printer should have installed the driver named Automatic Reverse Feeder (name not remember correctly), so as to feed the page automatically.

We cannot take backtoback printing from all printers only by setting in our client side print preview settings.

திவாண்ணா said...

நல்ல முறைதான். ஒரு சின்ன குறை இருக்கு. அந்த பேப்பரை எல்லாம் பண்ட் பண்ணுவதானால் பைண்ட் பண்ணும் பக்கம் அதிக இடம் விடணும். இது ஒத்தைப்படை பக்கங்களிலே இடது பக்கமும் இரட்டை படை பக்கங்களிலே வலது பக்கமும் வரும். (முஸ்லிம் நாட்டிலே இல்லாட்டா!) தீர்வு?
ஒபென் ஆலீஸ்லே: open document:
format> page> page layout> select mirrored.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்