உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, June 25, 2009

சாணக்கியன் சொன்னது

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.

சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவு
பெருசு சொன்னது (ஐன்ஸ்டீன்)


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!


ஞா.தேவநேய பாவாணர் ”தமிழர் திருமணம்” மென்புத்தகம் இங்கே தமிழில்.Ja.Thevaneya Paavaanar "Thamilar Thirumanam" in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



10 comments:

ஆ.ஞானசேகரன் said...

//உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.//

மிகவும் பிடித்தது..

Tech Shankar said...

Thanks for sharing

nprasanna said...

I searching for a long time to get stuffs about Chanakya.

Where can i find those translation.

Can you have any pdf to post the entire work of chanakya in tamil.

prasanna.n

ரவி said...

அடிக்கடி எழுதுங்க பிகேபி..........

சுந்தர் said...

எந்த காலத்துக்கும் பயன்படும் பட்டை தீட்டப் பட்ட கூர்மையான வரிகள்., நன்றி.

Jafar ali said...

thangs

Anonymous said...

super pkp , really super..we are expect the same type of post. wondeful.

thanks
s.s.nagamani

Unknown said...

n.out

nizamuseen said...

சாணக்கியன் நல்லாச் சொன்னாரு, அவரு படத்தையும்
போட்டீங்க. நன்று! அதோடு உங்க புகைப்படமும்
போடுங்க! -நிஜாமுத்தீன்.

Eswari said...

//ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.//

//உன் குழந்தையை ...
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.//

நம் குழந்தைகளிடமே சுயலாபமா?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்