உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, October 09, 2009

படைப்பாளிகளின் பொக்கிஷம்

யல் மென்புத்தகங்கள் வடிவிலும், இசை MP3-க்கள் வடிவிலும், நாடகம் CD,DVD வடிவிலும் டிஜிட்டல் உலகில் மாறிவிட படைப்பாளிகளுக்கெல்லாம் திண்டாட்டம். முன்பெல்லாம் படைக்க பாடுபட்ட வியர்வைகளுக்கு விலை கிடைத்துக் கொண்டிருந்தது. தங்கள் படைப்புகள் பற்றிய புகழ் பரவப் பரவ திருவிழாக் கொண்டாட்டமாயிருக்கும். இப்போது வைரஸ் கணக்காயும் வலையெங்கும் தங்கள் படைப்புகள் பரவினாலும் கையில் நயா பைசா கிடைப்பதில்லை. விரக்தியில் இணைய இறக்கச் சுட்டிகளைத் தேடி தேடி விரட்டி விரட்டி அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அழிக்க அழிக்க புதிது புதிதான வழிகளில் அவை இறக்கத்துக்கு வருவதால் அதையும் அழிக்க ஓடி இதிலேயே தங்கள் பொன்னான நேரங்கள் வீணாய்ப் போய்க்கொண்டிருக்கின்றது. ரேப்பிட்ஷேர் எனும் தளம் இது மாதியான கோப்புகளை பகிர்வதில் முதலிடம் பிடிக்கின்றது. தினமும் அப்லோட் செய்யும் கோப்புகளில் 2 சதவீதம் வரை அழிக்கப்படுகின்றனவாம். அத்தனை மின்னஞ்சல் வேண்டுகோள்கள் அவர்களுக்கு போய் கொண்டுள்ளன.

இப்படித் தேடித் தேடி ஆன்லைனில் கிடக்கும் உங்கள் படைப்புகளையெல்லாம் அழிப்பதை நிறுத்திவிட்டு அதை நீங்களே இலவசமாய் கொடுங்கள்.எப்படி காசு பண்ண வேண்டுமென நான் சொல்லித் தருகின்றேன் என்று அனுபவபூர்வமாய் தான் பெற்ற படிப்பினையை சொல்லித் தருகின்றார் Nine Inch Nails புகழ் Trent Reznor.

இங்கே அந்த பார்மலாவை என் நடையில் கொடுத்துள்ளேன்.
முதலில் படைப்பாளியான நீங்கள் உஙகள் படைப்புகளுக்கென ஒர் இணையதளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதில் உங்கள் சில பழைய படைப்புகளையும் புதிய படைப்புகளையும் இலவசமாய் வழங்குங்கள்.ஆனால் ஒரு நிபந்தனையோடு. இறக்கம் செய்ய வரும் உங்கள் விசிறியின் மின்னஞ்சல் முகவரியையும் வீட்டு முகவரியையும் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவை எல்லாவற்றையும் ஒரு டேட்டாபேசாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாய் கிடைப்பதால் அநேக புதிய நபர்களும் உங்கள் படைப்புக்களை இறக்கம் செய்ய வருவதால் நிறைய புதிய விசிறிகளும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.
இப்போது புரிகின்றதா...?
இப்போது உங்கள் கையில் உங்கள் படைப்புகளுக்காக ஆலாய்ப் பறக்கும் விசிறிகளின் பட்டியல். இந்த பட்டியல் தான் உங்கள் பொக்கிஷமே.
இனி அடுத்த படைப்பை வெளியிடும் போது இந்த உங்கள் விசிறிகளை தனியாய் தொடர்புகொள்ளுங்கள்.அவர்களுக்கென விசேட விலைகளை அறிவியுங்கள். உங்கள் கையொப்பமிட்டபடைப்புகளை விசேசமாக அவர்களுக்கு அனுப்பலாம் அல்லது உங்கள் படமிட்ட ஒரு விசேச பரிசோடு அந்த படைப்பை அவர்களுக்கு அனுப்பலாம் இப்படி அந்த உங்கள் விசிறிகளை எப்படியாவது அந்த படைப்பை வாங்கச் செய்துவிடலாம். உங்கள் விசிறிகளை பரந்த உலகில் தேர்ந்து கண்டு பிடிப்பதுதான் கஷ்டம். அவர்களை கண்டு பிடித்துவிட்டால் அவர்களிடம் உங்கள் படைப்பை வாங்கச் செய்ய ஒரு சில காரணங்கள் போதும் என்கின்றார் அவர்.

Connect with Fans (CwF) + Reason to Buy (RtB) = The Business Model
இது தான் அவர் பார்முலா.

நம்மூருக்கும் நம்மாட்களுக்கும் இந்த ஐடியா சரிப்பட்டு வருமாவென தெரியவில்லை. ஆனாலும் இவர் எழுதிய நாவல் வேண்டும் அவர் எழுதிய நாவல் வேண்டும் என்றும் இந்த மென்புத்தகம் வேண்டும் அந்த மென்புத்தகம் வேண்டும் என்றும் எனைக் கேட்டு அநேக விசிறிகள் தேவையோடு தொடர்புகொள்வதுண்டு. அவர்களை எல்லாம் எட்டும் வகையில் காலத்திற்கேற்ப நம் படைப்பாளிகள் தங்கள் வியாபார யுத்திகளையும் மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று நினைக்கின்றேன். படைப்பாளிகள் நொடிந்து போனால் மொழி எப்படி வாழும் இல்லையா?.

நீங்கள் Outlook Express பயன்படுத்துவீர்களானால் இந்த மென்பொருள் மிக உதவியாக இருக்கலாம்.மாதாவாரியாக *.idx/*.mbx/*.dbx வடிவுகளில் அல்லது eml வடிவில் நீங்கள் சேர்த்துவைத்திருக்கும் மின்னஞ்சல்களை பிற்பாடு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உதவியின்றி ஒவ்வொரு மின்னஞ்சல்களாக திறந்து பார்க்க உதவும் சிறிய மென்பொருள் இது.
Mail Viewer - for Outlook Express, Windows Vista Mail/Windows Live Mail and Mozilla Thunderbird message databases as well as single EML files.
http://www.mitec.cz/mailview.html


ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது, “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?










சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009-2012 மென்புத்தகம்.Sani Peyarchi Predictions 2009-2012 in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

buruhani said...

நல்ல கருத்துள்ள பதிவு தொடரட்டும்
தங்களின் இப்பனி

ஆ.ஞானசேகரன் said...

சரியாதான் சொல்லுரீங்க

Chandru said...

நல்ல தகவல் பிகேபி

இப்போது உங்களுடைய தளத்திற்கு ரெகுலராக வருபவர்கள் குறைந்து விட்டார்களா??
comments எதுவுமில்லாமல் இருக்கிறதே.

தொடர்ந்து எழுதுங்கள். விட்ட இடத்தை பிடியுங்கள்..

CM ரகு said...

நல்ல கருத்துள்ள பதிவு தொடரட்டும்... அப்படியே தமிழில் பின்னூட்டமிட வசதியளித்தால் நன்றாக இருக்கும், google transliteration சென்று வர வேண்டியுள்ளது...

Anonymous said...

நண்பரே உங்கள் வலைதளம் என் போன்ற புதியவர்களுக்கு மிக பயனளிக்கிறது மேலும் போட்டோஸாப் பயிர்ச்சி பற்றிய விபரம் எப்படி அறிந்துக் கொள்வது

s.jabarullah, said...

நண்பரே உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்

s.jabarullah, said...

நண்பரே போட்டோஸாப் பயிற்ச்சி பற்றிய விபரம் வேண்டும்?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்