உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 05, 2009

கையிலேயே வெண்ணை

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைவதைப் போல ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டே அதை தேடுவது போல சில சமயங்களில் நாமும் சில விசயங்களை கையில் வைத்துக்கொண்டே வேறெங்கெங்கோ அவைகளை தேடிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு சில்லி விசயம் தான் நான் இங்கு சொல்ல வருவதும். வலையிலிருந்து இறக்கம் செய்த சில முக்கியமான வீடியோ படங்களை ஓட்டும் போது அல்லது நீங்களே உங்கள் கேம்கார்டர் வழி சூட்டிங் செய்த உங்கள் சில வீடியோ படங்களை கணிணியில் பார்க்கும் போது சில சமயம் அந்த வீடியோ படங்கள் தலைகீழாக ஓட நேரிடலாம். சில என்கோடர்கள் செய்த தவறினால் இவ்வாறு நேரிடும். அதற்கென்ன இது போன்ற தருணங்களில் அவைகளை தலை நிமிர்த்தி பார்க்க என்ன செய்வதாம். நண்பனைப்போல அவசரத்தில் லேப்டாப்பை சாய்த்துபோட்டு பார்க்கும் அதீத முயற்சியெல்லாம் வேண்டாம். கூகிளிலும் ஏதாவது மென்பொருள்கள் கிடைக்குமாவென தேடவேண்டாம். வீடியோக்களை இஷ்டப்படும் கோணத்திற்கு சாய்த்து கவிழ்த்து பார்க்கும் வசதி நம்மிடம் ஏற்கனவே இருக்கும் VLC media player-ரிலேயே உள்ளது. இதோ அதற்கான வழி.

VLC media player-ல் Tool-ஐ கிளிக் செய்யவும் அதில் Effects and Filters-ஐ தெரிவு செய்யவும்.

இப்போது படத்தில் நீங்கள் கீழே பார்ப்பது போல Adjustments and Effects என ஒரு பெட்டி வரும். இதில் Video Effects-ஐ தெரிவு செய்யவும்.

அங்கே நீங்கள் படத்தில் கண்டபடி Transform என்பதை ”டிக்” செய்து அங்கே Flip horizontally அல்லது Rotate by 90 degrees என தெரிவு செய்து பல கோணங்களில் நீங்கள் லைவாக வீடியோவை மாற்றி பார்க்கலாம்.

ஒரேயடியாக வீடியோவை அக்கோணத்திற்கே மாற்ற கீழ்கண்ட இலவசமென்பொருள் உதவலாம்.
Free Video Flip and Rotate software
http://www.dvdvideosoft.com/products/dvd/Free-Video-Flip-and-Rotate.htm


ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,
கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
-முள்முடியில் தி.ஜானகிராமன்










க.நவசோதி ”ஓடிப்போனவன்” சிறுவர் புதினம் மென்புத்தகம்.Ka.Navasothi "Oodi Poonavan" Tamil Siruvar Novel pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி pkp sir

Anonymous said...

தகவலுக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

உபயோகமான தகவல்கள்... நன்றி சார்

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான தகவல்கள்.. VLC Player ல் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம், synchronisation-- வீடியோ பார்க்கும் பொழுது audio சரியாக ஒத்து போகாமல் இருந்தாலோ அல்லது subtitles சரியானபடி இல்லாமல் இருந்தாலோ கூட VLC player மூலம் அதை சரி செய்து பார்க்கலாம்..ரொம்ப நாள் இந்த அம்சம் எனக்கு தெரியாமல் அப்புறம் தெரிந்து கொண்டேன். அதை ( SYnc ) பற்றியும் விரிவாக எழுதுலாமே சார்...

Jafar ali said...

தினம் உபயோகிக்கும் VLC பிளேயரில் இது நான் அறியாத விஷயம் தான். மிக்க நன்றி பிகேபி ஸார்!!!

செல்லி said...

Thanks PKP Sir
This happened to me once but I didn't what to do at that time. you know what I did is that I turned it off and on again , It worked well.but now I know what is the solution for it.
This is realy useful info!

Hearty thanks to you, PKP :-)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்