உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 12, 2009

வருமா வெள்ளிக்கப்பல்கள்?

நாளை நவம்பர் 13. பிரபலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஹாலிவுட் திரைப்படம் ட்வெண்டி ட்வொல்வ் "2012" வெளியாகின்றது. 2012 டிசம்பர் 21-ல் என்ன நடக்கலாம் என்பது தான் இந்த படத்தின் கதை. இன்னொரு முறை உலகத்தை திரையில் அழித்து பார்க்க முயன்றிருக்கின்றார்கள். எல்லாம் மாயன் காலண்டர் கொடுத்த திரைக்கதை தான். இந்த மாயன்கள் காலண்டர் பைத்தியம் பிடித்திருந்தவர்கள். நம் காலண்டரை விட மிகத்துல்லியமான நாட்காட்டியை கொண்டிருந்தார்கள். இருபது காலண்டர்கள் வரைக்கும் பயன்படுத்தினார்களாம். அதில் மூன்று மிகப் பிரபலமானவை. மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ பகுதிகளில் கிபி 900களில் உச்சகட்டத்தில் வாழ்ந்திருந்தார்கள். எதோ ஒரு காரணத்தால் சிந்துசமவெளி நாகரீகம் போல் இதுவும் அழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவர்கள் கொண்டிருந்த வானியல் ஞானம் இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் இருக்கின்றது. பூமி தனது அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளும் ஒருமுறை ஏறத்தாழ ஒரு டிகிரி நெகிழ்வதைக்கூட இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்களாம். கணிணிகள், டெலஸ்கோப்புகள் இல்லாத காலத்திலே இது சாத்தியமாகியிருக்கின்றது அவர்களால். சிலர் அழிந்து போன இன்னொரு புகழ்மிகு நாகரீகமான அட்லாண்டிஸ் மக்களிடமிருந்து தான் இவர்கள் இவ்வித்தைகளை கற்றுக்கொண்டார்கள் எனக் கூறுவதும் உண்டு.

மாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக் கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000 ஆண்டுகள். ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு மாற்றம் அலல்து அழிவு உண்டாகும் என்பது ஐதீகம். இப்போது நாமிருக்கும் இந்த ஐந்தாவதான மற்றும் இறுதியான சுழற்சி ஆகஸ்ட் 11 கிமு 3114-ல் தொடங்கியதாகவும் வரும் 2012 டிசம்பரில் இந்த 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவுபெறப்போகின்றதாகவும் சொல்கின்றார்கள்.இதனால் என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பது பற்றி சூடாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் 1987-லேயே 25-ஆண்டுகள் கவுண்டவுன் தொடக்கிவைத்தவர் Law of Time நிறுவனர் José Argüelles. இவரின் கூற்று படி 2012 ஆண்டில் மக்களெல்லாரும் தங்கள் உணர்வுகளில் முக்திபெற்று ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். எளிய வாழ்க்கை, சூரிய சக்தி தொழில்நுட்பம், தோட்டங்கள் நடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர். அவர்கள் தங்களுக்குள்ளே டெலிபதி முறையில் பேசிக்கொள்வார்கள். இப்படியான ஆன்மாவில் உயர்நிலை அடையாத மனிதர்களையெல்லாம் ”வெள்ளிக்கப்பல்கள்” வந்து கொண்டு போய்விடும் எனக் கூறியிருக்கின்றார்.

2012 படத்தோட முன்னோட்டத்தை பார்த்தாலேயே பேசாமல் வெள்ளிக்கப்பலில் போய்விட்டால் தேவலாம் போலிருக்கின்றது.(மேலே படம் ஒரு 2012 பட போஸ்டர். 2016-ல் ஒலிம்பிக் நடக்கவிருக்கும் பிரேசில் ரியோடிஜெனிரோவில் இருக்கும் மிகப் பெரிய யேசு நாதர் சிலை அழிவில் கீழே விழும் காட்சி)


உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்











வி.ஏ.சிவராசா ”எண்ஜோதிடம்” தமிழ் நியூமராலஜி மென்புத்தகம்.V.A.Sivaraasa "Enjothidam" Numerology in Tamil pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

suvaiyaana suvai said...

very interesting movie!!

ஸ்ரீராம். said...

//பேசாமல் வெள்ளிக்கப்பலில் போய்விட்டால் தேவலாம் போலிருக்கின்றது//

புன்னகைக்க வைத்த வரிகள்.

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

tamilan said...

பதிவு நல்லா இருக்கு..
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.

Unknown said...

"one of the ultimate movie "

R. Jagannathan said...

Can someone obtain the comments on 2012 from our 'josyars'of Kutti Sastrigal Panchaangam / Paambu Panchangam? - Jagannathan

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்