உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, November 24, 2009

புரட்டும் வடிவில் மென்புத்தகங்கள்

மென்புத்தகங்களை Pdf வடிவில் படிக்கும் போது சீக்கிரமே அலுப்பு தட்டிவிடுகின்றது. சிலர் மென்புத்தகங்களை சேகரிப்பதோடு சரி. வாசிப்பது என்னமோ அபூர்வம் தான்.சிலர் மென்புத்தகங்களை அதிக ஆர்வமாய் வாசிக்க விழையும் போது அதை வீட்டு பிரிண்டரிலேயே அச்சிட்டு படிக்க முயல்வதும் உண்டு. அதிவேக லேசர் பிரிண்டர்கள் தாம் இப்போது வீடுகளுக்கு கூட கைகூடும் விலைக்கு வந்துவிட்டதே. ஆனாலும் சில டெவலபர்கள் மென்புத்தகங்களை மென்புத்தகவடிவிலேயே நம்மை படிக்க செய்ய
போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் அதை புரட்டும் புத்தகவடிவிலே தருவது.http://www.scribd.com போலல்லாது http://issuu.com-ல் ஏற்றம் செய்யப்படும் மென்புத்தகங்களை நீங்கள் புரட்டும் வடிவிலேயே அதாவது சாதாரண காகிதபுத்தகங்களை எப்படி புரட்டுவோமோ அதே புரட்டும் எஃபக்டில் படிக்கலாம். உதாரணத்துக்கு இங்கே ஒரு தமிழ் மென்புத்தகத்தை பாருங்கள்.
http://issuu.com/siva_asokan/docs/englishtotamildictionary

இது போன்ற வழங்கல் நம்மை மேலும் படிக்க தூண்டுவதாக உள்ளது. ஆனாலும் எல்லாம் இணைய இணைப்பு இருக்கும் வரை மட்டும் தான். இணைய இணைப்பு இல்லாத போதும் உங்கள் புத்தகங்களை இதே “எஃபக்டில்” படிக்க நீங்கள் http://www.spotbit.com/ தளத்தை அணுகலாம். இவர்கள் நீங்கள் கொடுக்கும் மென்புத்தகத்தை .exe வடிவில் மாற்றி உங்களுக்கு தர அதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம். இணைய இணைப்பு இல்லாத போதும் படிக்கலாம்.

இணையத்தில் எங்கும் அப்லோடு செய்யாமலே என்னிடம் இருக்கும் pdf கோப்புகளை புரட்டும் புத்தகவடிவில் காட்ட எதாவது மென்பொருள் இருக்கிறதாவென தேடியதில் POKAT reader கிடைத்தது. இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் உங்கள் கணிணியில் உள்ள எல்லா pdf கோப்புகளையும் அது புரட்டும் புத்தகவடிவில் காட்டும். நீங்கள் படிக்கும் pdf புத்தகங்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து அது தனியாக ஒரு மென்நூல் நூலகம் ஒன்றையும் பராமரிக்குமாம்.
Download Free POKAT reader

மென்புத்தகங்களை படிக்க இனி தனி ஆர்வமே வரும் போல தெரிகின்றது. பார்க்கலாம்.


”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.













பெரியார் “சித்திரபுத்திரன் விவாதங்கள்” மென்புத்தகம். Periyaar "Chithiraputhiran Vivathangal" Tamil Pdf ebook Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



10 comments:

ஆ.ஞானசேகரன் said...

//மென்புத்தகங்களை படிக்க இனி தனி ஆர்வமே வரும் போல தெரிகின்றது. பார்க்கலாம்.
//

எப்படினு பார்க்கலாம்... மிக்க நன்றி சார்

ஸ்ரீராம். said...

POKAT READER Download செய்து வைத்து விட்டேன். இனிதான் Install செய்து பார்க்கணும்...ஒண்ணும் பிரச்னை வராதே...!! இப்படி ஒரு வாய்ப்பைக் காட்டியதற்கு நன்றி

Anonymous said...

அன்புள்ள ஐயா!
தாங்கள் பெரியாரின் சித்திரபுத்திரன் விவாதங்கள் மென்புத்தகத்தை தரவிறக்கம் செய்ய வசதிசெய்திருக்கிறீர்கள். அது யாருக்குப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறீகள்? இளம் வயதினர் படித்தால் தறிகெட்டுப் போவார்கள் என்பது என் எண்ணம். முதியவர்கள் அதைப் படிக்கப்போவதில்லை.
சற்றுச் சிந்திக்கவேண்டு.
77 வயதுப் பெரிசு.

Tech Shankar said...

வணக்கம் திரு. பிகேபி அவர்களே.

உங்கள் மென்புத்தகங்களில் மயங்கிய ரசிகர்களுக்காக ஒரு பதிவு.


The Read Green Initiative's great free Offer : இணைய உலகில் மென்புத்தகப் புரட்சி


ஒவ்வொரு பதிவிலும் ஒரு மென்புத்தகம் வழங்குவதால் இணையத்தளபதியாகிய நீங்கள் பசுமைத்தளபதியாகவும் பதிவர்கள் மத்தியில் அமர்ந்திருக்கிறீர்கள்.

நன்றியுடன்
தமிழ்நெஞ்சம்.

Thamira said...

நன்றி. சேவை தொடர்க..

arumugamks said...

pokat reader didnt work with windows 7. It says pokat reader could not open the pdf file. Any one can help me please?. I like this pokatreader

காரணம் ஆயிரம்™ said...

மிக்க நன்றி...

ஏகப்பட்ட technical மற்றும் non-technical collections வைத்திருக்கிறேன்.. அதையெல்லாம் எப்படி படிக்கப்போகிறோம் என்று ஒரே மலைப்பு!!

இனி, படிப்பதில் சிரமமிருக்காது என்றே தோன்றுகிறது !!! நன்றிங்க...

http://kaaranam1000.blogspot.com

Babu K said...

திரு பிகேபி,

PDF File களை மின் புத்தகமாக படிப்பது பற்றிய தங்கள் கட்டுரையைப் படித்தேன். Mobile Book ஆக ஆக்குவதற்கு ஏதேனும் Tool உள்ளதா? (Like : http://www.mobileveda.com/)

Anonymous said...

Thanku sir.please continue.

a-nagarasan said...

இணைய தளபதி,பசுமை தளபதி ஆனதற்கு வழ்த்துக்கள்.நல்ல விஷ்யங்களை பகிரும் உங்களுக்கு என் நல் வாழ்துக்கள்
நற்பணி தொடரட்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்