உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, December 17, 2010

QR கோடுக‌ள்

‌ப்பான்!
சூரிய‌ன் ம‌ட்டும‌ல்ல‌, ப‌ல‌ப்ப‌ல‌ தொழில் நுட்ப‌ங்க‌ள் கூட‌ முத‌லில் உதிப்ப‌து இங்கிருந்து தான். அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிக‌ளை க‌ண்ட‌ க‌‌ண்ட‌ ப‌டி எத‌ற்கெல்லாமோ பய‌ன்ப‌டுத்திக் கொண்டிருக்கின்றார்க‌ள். நாம் இங்கு சொல்ல‌வ‌ரும் QR Code (Quick Response) என‌ப்ப‌டும் இருப‌ரிமாண‌க் கோடுக‌ள் கூட‌ அங்கே ஐந்து வ‌ருட‌த்துக்கு முன்பே பிரப‌ல‌ம். இப்போது தாம் நம‌க்கு இங்கே உதய‌மாக தொட‌ங்கியிருக்கின்ற‌து. ல‌வுகீக‌ ஜ‌ட‌ உல‌க‌த்தை மாய‌ வ‌லை உல‌க‌த்தோடு இணைத்‌து வைப்ப‌து தான் இக்கோடின் மிக‌ப் பெரிதான‌ப்‌ ப‌ணி என‌ நான் சொல்ல‌ப்போனால் உங்க‌ளில் எத்த‌னை பேருக்கு புரிய‌ப் போகின்ற‌து‌ புரிய‌வில்லை. விள‌க்குகின்றேன்.

பிரப‌ல‌ விள‌ம்ப‌ர‌த்தாள்க‌ள் வீட்டில் வ‌ந்து விழும் போது அதில் மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள் இருப்ப‌தில்லை. வெறும் 50 டால‌ர் தான் 1TB USB Western Digital பாஸ்போர்ட் எக்ஸ்டெர்ன‌ல் டிரைவ்க‌ள் என்பார்க‌ள்.(Corrected) மேற்கொண்டு விவ‌ர‌ங்க‌ளான‌ அது USB2-வா அல்ல‌து USB3-வா, டேட்டா டிரான்ஸ்ப‌ர் வேக‌ம் என்ன‌? த‌னியாக‌ ப‌வ‌ர் அடாப்ட‌ர் வேண்டுமா வேண்டாமா? வாங்கிய‌ பிற‌ரின் அனுப‌வ‌ங்க‌ள் இவையெல்லாம் அந்த‌ அச்சிட்ட‌த் தாளில் அட‌க்குவ‌து க‌டின‌ம். விள‌ம்ப‌ர‌த்தில் நீங்க‌ள் ப‌ட‌த்தில் காண்ப‌து போல‌ ஒரு ச‌துர‌க்கோடு ம‌ட்டும் இருக்கும். இதை உங்க‌ள் ஐபோன் வ‌ழி அல்ல‌து அன்ட்ராய்டு போன் வ‌ழி ஒரு நொடி ஸ்கேன் செய்தால் அது அதில் ஒளிந்திருக்கும் உரலை(URL) ப‌டித்து அப்ப‌டியே உங்க‌ளை குறிப்பிட்ட‌ இணைய‌ த‌ள‌ ப‌க்க‌த்துக்கு கொண்டு சென்றுவிடும். அடுத்த‌ நொடியில் அந்த‌ ஜ‌ட‌ம் ப‌ற்றிய‌ ச‌கல‌ த‌க‌வ‌லும் உங்க‌ளுக்கு கிடைத்துவிடும். சுருங்க‌க் கூறின் அந்த‌க் காகித‌ ஜ‌ட‌த்தை சொடுக்கி இங்கே வ‌லைப்ப‌க்க‌த்துக்கு வ‌ந்திருக்கின்றீர்க‌ள். எப்ப‌டி இருக்குது லிங்க். மேலே நீங்க‌ள் காணும் QR கோடு ந‌ம‌து இந்த‌ pkp.in வ‌லைப்ப‌திவுக்கான‌ கோடு. நீங்க‌ள் உங்க‌ள் போனில் ஸ்கேன் செய்தால் அது ந‌ம் வ‌லைப்ப‌க்க‌த்துக்கு கொண்டு போய் விடும். நீங்க‌ள் எதுவும் டைப் செய்ய‌ வேண்டிய‌ தேவையில்லை. இது போல‌ உங்க‌ள் வ‌லைப்ப‌க்க‌த்துக்கான QR கோடுக‌ளைக் கூட‌ நீங்க‌ள் கீழ் க‌ண்ட‌ சுட்டியில் இல‌வ‌சமாகஉருவாக்கிக் கொள்ள‌லாம்‌.
http://qrcode.kaywa.com
QR கோடை ஸ்கேன் செய்ய‌, ஐபோன் எனில் NeoReader என்ற‌ ப‌ய‌ன்பாடும் அன்ட்ராய்டு போன் எனில் QuickMark என்ற‌ பய‌ன்பாடும் தேவைப்ப‌டும். இர‌ண்டுமே இல‌வ‌ச‌ ப‌ய‌ன்பாடுக‌ள்.

‌மிழ் குட்டீஸ்க‌ளுக்கான அம்புலிமாமா வேடிக்கைக்க‌தைக‌ளை ந‌ம் குழ‌ந்தைக‌ள் கீழ்க‌ண்ட‌ சுட்டியில் ப‌டிக்க‌லாம். தெரியாத‌வ‌ர்க‌ளுக்காக‌ ஒரு குயிக் அறிமுக‌ம்.
http://www.chandamama.com/lang/TAM/index.htm

Talking Tom Cat எனும் ஐபோன் ப‌ய‌ன்பாடு, குழ‌ந்தைக‌ள் ம‌ழ‌லைக‌ள் பேசி விளையாட‌ ஒரு அருமையான‌ இல‌வ‌ச ப‌ய‌ன்பாடு.

Need for Speed போன்ற‌ EA-வின் ஐபோன்/ஐபேட் கார் ரேசிங் கேம்க‌ளில் நீங்க‌ள் ஆர்வ‌ல‌ர் என்றால் அவைக‌ளை நிறுவிக்கொள்ள‌ இப்போது ந‌ல்ல‌ த‌ருண‌மாம். 99¢ டீல் போட்டிருக்கின்றார்கள்‌. வாண்டு ஒன்றின் க‌ண்டுபிடிப்பு. யாருக்காவ‌து ப‌ய‌ன்ப‌டுமே என்று சொல்லவந்தேன்.

மீண்டு(ம்) வ‌ந்த‌ என்னை மிக்க‌ ம‌கிழ்வோடு வ‌ர‌வேற்று பின்னூட்ட‌ மிட்டுச்சென்ற‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!

வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.


Kartik Shanker Kadalaamaiyin Kadhai Turtle Story in Tamil கார்த்திக் ச‌ங்க‌ர் "க‌ட‌ல் ஆமையின் க‌தை"


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



13 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒரு டிபி ப்ளாஷ் ட்ரைவ் என்பது சரியான பயன்பாடா? It may not be a flash drive for that capacity. It would not be a SSD and it would rather be a spinning disc. 1 TB external hard drive is what you might have wanted to say.

goo.gl என்ற தளத்தில் எந்த பெரிய உரலையும் சிறிதாக மாற்றுவது மட்டுமில்லாமல் அதற்கான QR code தருகின்றார்கள். உங்கள் கூகிள் அக்கவுண்ட் மூலமாக லாகின் செய்தால் நீங்கள் மாற்றி இருக்கும் சுட்டிகள், அதனை எத்தனை பேர் எங்கிருந்து சுட்டினார்கள் போன்ற மேலதிக தகவல்களும் தருகின்றார்கள்.

ஐபோனில் எந்த பார் கோட் ரீடர் இருந்தாலும் qr code படிக்க முடிகிறது. நான் Redlaser என்ற app மூலம் முயன்றேன்.

மாணவன் said...

மதிப்பிற்குரிய திரு.பிகேபி ஐயா தாங்கள் மீண்டும் பதிவு எழுத வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

எழுத்துப் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

பயனுள்ள தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

vasu said...

மீண்டும் நீங்கள் தொடர்ந்து எழுத ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி... பதிவு நன்றாக இருக்கிறது....

Sam said...

pkp வலை பூ பூத்து இருகிறது..இது தொடர விரும்புகிறோம்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

QR கோட் பற்றி புதிய விஷயங்கள் புரிய வைத்தீர்கள்.நன்றி!

Anonymous said...

NeoReaderஐப் பயன்படுத்தி Nokiaவிலும் Scanபண்ண முடிகிறது.

Sinnah

Speed Master said...

வழக்கம் போல அருமை சார்

நண்பன் said...

வனக்கம்

அறிவை அள்ளித்தரும் அன்பருக்கு
பல்லான்டு காலம் வாழ வழ்த்துக்கள்

babu said...

Sir
Ivlo nal yengala yellam thavikka vittutu yenga sir poneenga, athukku thandanaya inime oru nalaikku 2 article post pannunga sir

Sugumarje said...

நன்றி...
பயன்படுத்திக்கொண்டேன் :)

Dr.D.Sukumar said...

மீண்டும் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Maya Studios said...

வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்....

ஒரு கேள்வி... :(
Websiteஇல் ஒலிக்கோப்புக்களைப் பகிருகிறோம்...
அவற்றை Iphoneஇல் ஏன் எங்களால் செவிமடுக்கமுடியவில்லை ?...

அப்படியாயின் இரண்டிலும் செவிமடுக்கக் கூடிய ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா..

உதாரணமாக Soundcloud.comநான் இல் ஒலிக்கோப்புக்களை பகிர்வது வழக்கம். ஆனால் அவற்றை Iphoneஇல் கேட்கமுடிவதில்லை என்ன காரணம் தெரியுமா ?

Anonymous said...

Your information are amazing.
Keep up the good work.
Expecting more like this from you on variety of fields and for different ages.

Thank you.
-Prabakaran

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்