இங்குள்ள ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்கி அதில் புதைந்திருப்பதை நாம் புரிந்து கொண்டால் புல்லரித்து ஒரு புன்னகையை உதிர்க்கலாம்.
எங்கே முயற்சித்து பாருங்களேன்.

தேடிப்பிடித்தவை
இங்குள்ள ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்கி அதில் புதைந்திருப்பதை நாம் புரிந்து கொண்டால் புல்லரித்து ஒரு புன்னகையை உதிர்க்கலாம்.
எங்கே முயற்சித்து பாருங்களேன்.
ஊருக்கு கிளம்பும் முன் அவசர அவசரமாக இந்த பதிவு.Eye-Fi-பற்றியது.இந்த மாதிரியான அற்புத தொழில் நுட்பங்களை பற்றி கேள்விப்படும் போது உடனே எழுதிவிட வேண்டும். நம்மில் அநேகருக்கு இது ஏற்கனவே தெரிந்த விசயம் தான். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த அறிமுகம். சாதாரண மெமரி கார்டுக்கு உயிர்கொடுக்கும் தொழில் நுட்பம் இது. memory card + Wi-Fi = Eye-Fi எனும் சமன்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது உங்கள் SDHC மெமரிகார்டால் Wi-Fi எனப்படும் வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைய முடியும். அவ்ளோதான். இதனால் என்ன பயன்? உங்கள் சாதாரண டிஜிட்டல் கேமராவில் இந்த Eye-Fi மெமரிகார்டை பயன்படுத்தினால் உங்கள் கேமரா உங்கள் வீட்டு வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்பட்டு விடும்.விளைவு போட்டோ எடுக்க எடுக்க அப்படியே வை-பை வழி உங்கள் கணிணிக்கோ அல்லது ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டுக்கோ போட்டோக்களை எளிதாக கடத்திவிடலாம். உங்கள் மெமரி கார்டு எப்போதுமே போட்டோக்களால் நிரம்பிவழியாது.never run out of space again, எப்படி கான்செப்ட்? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்? இங்கு ஆப்டிமம் மற்றும் AT&T வைபைகள் ஊரெங்கும் உள்ளன. எனவே எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டோக்களை சாதாரண டிஜிட்டல் கேமராவிலிருந்து அப்லோடு செய்துவிடலாம். இன்னும் அநேக நம்ம வீட்டு சாதனங்கள் சீக்கிரத்தில் உயிர்பெற்று வீட்டு வயர்லெஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்படும். அந்த வழியில் டம்ப் பொருட்களைக்கூட நெட்வொக்கில் இணைக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை என்பதை இந்த ஐ-பை நிரூபிப்பதாய் உள்ளது.
மீண்டும் cleartrip.com இந்திய ரெயில்வே ரெசர்வேசன்களுக்கு உதவியது. irctc.co.in -னோ makemytrip.com-மோ அல்லது yatra.com-மோ சர்வதேச அல்லது குறைந்த பட்சம் அமெரிக்க கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. flykingfisher.com-ல் கூட முன் பதிவு செய்ய cleartrip.com - தான் உதவியது.Long live cleartrip.com. ஆன்லைன் coupon code-களையும் கவுரவிக்கிறார்கள். பல சென்னை ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்கள் அநியாயத்துக்கும் இருக்கின்றன. பக்காவாக வெளிநாட்டு ஓட்டல்களுக்கு வெப் பக்கங்களை வடிவமைக்கும் நாம், நம்ம ஊர் ஸ்டார் ஹோட்டல் ஆன்லைன் ரெசர்வேசன் தளங்களை பார்க்கவேண்டுமே, பாழடைந்த மண்டபத்தினுள் நுழைவது போல் இருக்கின்றது. வியாபார விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் நம்மவர்கள் ஆன்லைன் அப்பியரன்ஸ்சிலும் கவனம் செலுத்தினால் நன்னாய் இருக்கும்.தூரத்து வாடிக்கையாளார்களுக்கு அந்தந்த இணைய தளங்களே அந்த வியாபாரம் பற்றிய மறைமுக நல்லெண்ணத்தையும் நம்பிக்கையின்மையினையும் கொடுக்கும் என்பதை அறியவேண்டும். வெள்ளிக்கிழமை ஐபோன் 4S கையில் வந்து கிடைத்ததும் கூகிளுக்கு ஆப்படிக்க வந்திருக்கும் SIRI-யோடு கூட அப்படியே கிளம்பிவிட வேண்டியது தான்.புதிதாக சர்வதேச விமானநிலையம் ஒன்றை திருவனந்தபுரத்தில் கட்டியிருக்கிறார்களாம். பார்க்கலாம். அப்படியே ஒரே கல்லில் இரண்டு மாங்காயிட்ட அசோக்கையும் சந்திக்க வேண்டும்.போன முறை வேலுவை பார்த்தோம் இந்த முறை முடிந்தால் பொன்னுசாமி. வேறெதாவது இருக்கு பரிந்துரைக்க?
On the Lighter Side
அபூர்வமாக கிளிக்கப்பட்ட இந்த படம் ஏதோ ஆழமாக பலவற்றையும் சொல்லும். ஸ்டீவ் தனது இறுதி மேடை பேச்சான WWDC 2011 Keynote மேடை பேச்சை முடித்து கீழே இறங்கியதும் போய் முதல் வேலையாக தனது மனைவின் தோளின் மேல் தலையை சாய்க்கின்றார். பொதுவாகவே ஆப்பிளை பொறுத்தவரை இது போன்ற மீட்டிங்குகளில் ஸ்டீவ்வின் வருகை மிக மிக முக்கியமானது.அவர் இல்லாவிட்டால் தலை இல்லாது தவிக்கும் உடம்பு போலாகிவிடும். கடந்த ஐபோன் 4S அறிமுகவிழாவும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. மனிதர் அந்த தனது கடைசி கீநோட் பேச்சை முடித்து இறங்கியதும் ஏற்கனவே கேன்சரினால் இளைத்துப்போன உடம்பின் களைப்பினால் தலையை சாய்த்தாரா அல்லது இதுதான் தனது கடைசி மேடை பேச்சு என்று தனது உள்ளுணர்வு சொன்னதால் அப்படி செய்தாரா யாரும் அறியோம்.அது ஒரு அற்புதமான தருணம்.அவர் மனதில் எண்ணங்கள் உருகிப்போயிருந்த நேரம். எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவருக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா போயிருக்கும். எத்தனையோ பேரின் விருப்பங்களை படைப்புகளாக்கி காட்டிய பல அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற அந்த நல்மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
தேங்யூ ஸ்டீவ்!!