உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, October 06, 2011

தேங்யூ ஸ்டீவ்!!

அபூர்வமாக கிளிக்கப்பட்ட இந்த படம் ஏதோ ஆழமாக பலவற்றையும் சொல்லும். ஸ்டீவ் தனது இறுதி மேடை பேச்சான WWDC 2011 Keynote மேடை பேச்சை முடித்து கீழே இறங்கியதும் போய் முதல் வேலையாக தனது மனைவின் தோளின் மேல் தலையை சாய்க்கின்றார். பொதுவாகவே ஆப்பிளை பொறுத்தவரை இது போன்ற மீட்டிங்குகளில் ஸ்டீவ்வின் வருகை மிக மிக முக்கியமானது.அவர் இல்லாவிட்டால் தலை இல்லாது தவிக்கும் உடம்பு போலாகிவிடும். கடந்த ஐபோன் 4S அறிமுகவிழாவும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. மனிதர் அந்த தனது கடைசி கீநோட் பேச்சை முடித்து இறங்கியதும் ஏற்கனவே கேன்சரினால் இளைத்துப்போன உடம்பின் களைப்பினால் தலையை சாய்த்தாரா அல்லது இதுதான் தனது கடைசி மேடை பேச்சு என்று தனது உள்ளுணர்வு சொன்னதால் அப்படி செய்தாரா யாரும் அறியோம்.அது ஒரு அற்புதமான தருணம்.அவர் மனதில் எண்ணங்கள் உருகிப்போயிருந்த நேரம். எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவருக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா போயிருக்கும். எத்தனையோ பேரின் விருப்பங்களை படைப்புகளாக்கி காட்டிய பல அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற அந்த நல்மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
தேங்யூ ஸ்டீவ்!!


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



11 comments:

Ganpat said...

நீ பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கிறாய்;ஆனால் உன்னை சுற்றி உள்ளவர்கள் சிரிக்கிறார்கள்!!
நீ இறக்கும்போது சிரித்துக்கொண்டே இறந்து உன்னை சுற்றி உள்ளவர்கள் அழும்படியான வாழ்க்கை வாழவேண்டும்!
மேற்கண்ட போன்மொழிக்கு எடுத்துக்காட்டக வாழ்ந்தவர் திரு.ஸ்டீவ் ஜாப்ஸ்.
கலிபோர்னியாவில் அவர் மறைந்தார் என செய்தி கேட்டு,கருணாநிதி நகரில் வாழும் நான் கண்ணீர வடிக்கிறேன்.
இதுவல்லவோ வாழ்க்கை!
சரஸ்வதி தன செல்ல மகனை தன பிறந்த நாள் அன்று பார்க்க ஆசைப்பட்டாள் போலும்!
ஆப்பிள் உள்ளவரை அவர் இருப்பார்!

Anonymous said...

We miss you Steve..RIP

நண்பன் said...

இன்னா லிலாஹீ இன்னா இளைஹீ ராஜிவுன் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவனுக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா இருந்திருக்கும்.
இவ்வுலகம் உள்ளளவும் இவர் புகழ் நிலைத்து இருக்கும்.

love Apple said...

miss you Steve.

Rock said...

"Stay Hungry. Stay Foolish."

Raja said...

http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc


see this video

This one speech could give, a million years long hope..

Anonymous said...

"...Because the People who are crazy enough to think they can change the world are the ones who do."

Thank You, Steve.

சத்ரியன் said...

அவரின் உயிரை ஒவ்வொருவர் கையிலும் தவழ விட்டுச் சென்றிருக்கிறார்.

இறவா புகழ் கொண்ட அவரது பூதவுடலுக்கு அஞ்சலி!

மாணவன் said...

3 apples change the world......1st apple: involved in adam and eve.2nd apple: fell on newtons head.3rd apple: steve jobs

RIP Steve jobs...

மாணவன் said...

தொழில்நுட்ப உலகில் தனி ஒரு மனிதனாக ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய ஸ்டீவ் இன்று நம்மை விட்டு பிரிந்தாலும் ஆப்பிள் உள்ளவரை அவரது பெயர் அழியாது....

அந்த அற்புத மனிதரின் ஆத்மா சாந்தியடையட்டும்... ஸ்டீவ் அமைதியாக உறங்குங்கள்...

Anonymous said...

ஸ்டீவ் ஜாப்ஸின் டாப் 10 மாஜிக்கல் தருணங்கள் - வீடியோ 4

http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1173-steve-jobs-magical-moments-4

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்