மூன்றரை சதவீதம் டவுண் பேமண்ட் செலுத்தி FHA கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றாள் நிஷா அவசரம் அவசரமாக. தரமான பாடசாலைகள் உள்ள அமைதியான ஒரு புறநகர்ப்பகுதி.வீட்டெதிரே மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன குடும்பம் குடும்பமாக.இனிமேல் இவள் மாதம்தோறும் மார்கேஜ் எனப்படும் வீட்டுக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்த வேண்டும்.அடுத்த வருட வரி ஒப்புவிப்பின் போது ஒபாமா 8,000 டாலர்கள் சலுகை கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம். அதனால் தான் இந்த அவசரம்.
முப்பது வருடங்கள் கழித்து நீ அத்தனை கடனையும் கட்டி முடித்திருந்தாலும் அந்த வீடு என்றைக்குமே உனக்கு சொந்தம் ஆகாது என்றான் கோபால்.அதெப்படி என நிஷா டென்சனாக கோபால் ஒரு கதை சொல்லவேண்டி வந்தது.
பாண்டி பசார் பிளாட்பாரத்திலிருந்து 500 ரூபாய் கொடுத்து ஒரு காலணி வாங்குகின்றாய் என வைத்துக்கொள்வோம். அதை வீட்டிற்கு கொண்டு சென்று ஒரு மாதமாய் அணிந்து அழகு பார்க்கின்றாய். பூரண திருப்தி உனக்கு. ஆனால் அடுத்த மாத தொடக்கத்தில் உனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது.அந்த காலணிகடைக்காரன் வந்து உன் வீட்டுக் கதவை தட்டுகின்றான். ஐந்து ரூபாய் கொடு அப்போது தான் அந்த காலணியை நீ வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை நான் இப்போது எடுத்துக்கொண்டு போய்விடுவேன் என்கின்றான். நீயும் ஐந்து ரூபாய் தானே என அதை கொடுத்து அவனை அனுப்பிவிடுகின்றாய். மீண்டும் அடுத்த மாதமும் உன் வீட்டுக் கதவு தட்டப்படுகின்றது.இப்போதும் ஐந்து ரூபாய் கேட்கிறான். நீயும் கொடுக்கின்றாய். அது பழக்கமாகி இப்போது மாதம் தோறும் ஒன்றாம் தேதியானால் அவன் கறாராக வந்து விடுகின்றான். ஐந்து ரூபாய் கொடுத்தால் நீ வைத்துக்கொள்ளலாம். கொடுக்காவிட்டால் அதை நான் எடுத்துக்கொள்வேன் என்கின்றான். இப்போது சொல் அந்த காலணி யாருக்குச் சொந்தம் உனக்கா அல்லது அவனுக்கா?
அரை மில்லியன் டாலர் கொடுத்து வீட்டை நீ வாங்கி சொந்தமாக்கிக் கொண்டாலும் வருடம் தோறும் நீ சில துக்கடா டாலர்களை வீட்டுவரியாக கடாசாவிட்டால் அவ்வீடு எளிதாக சர்க்காருக்குச் சொந்தமாகிவிடும். அத்தனை ஈவிரக்கமற்ற உலகம் இது என சொல்லி முடித்தான் கோபால். நிஷாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
![]() நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம் இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம் எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும். |

Download

2 comments:
நிஷாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
நல்ல சிந்தனை. சென்ற பதிவுக்கு கூகிளைப் பாராட்டி எழுதினேன்...கூகிள்கொஞ்ச நாளாய் ஒரே படுத்தல்,,,
Post a Comment