உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, January 18, 2011

வாமுக‌ : போர்ட்ட‌பிள் டிரைவ்க‌ள்

"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இன்று போர்ட்ட‌பிள் டிரைவ் என‌ப்ப‌டும் எக்ஸ்டெர்ன‌ல் யூஎஸ்பி ஹார்ட் டிரைவுக‌ள் பற்றி பார்க்கலாம்.

த‌ங்க‌ளிட‌முள்ள‌ டேட்டாக்க‌ளையெல்லாம் த‌ன் ம‌டிக்க‌ணிணியில் ம‌ட்டுமே சேமித்து வைத்திருந்து, பின் ஒர் ந‌ன்னாளில் அத‌ன் ஹார்ட்டிரைவ் கிராஷ்ஷாக‌ அவை முழுவ‌தையும் இழ‌ந்து த‌விக்கும் ந‌ண்ப‌ர்க‌ளை பார்த்திருக்கின்றேன். இப்ப‌டி தாங்க‌ள் நெடுநாளாக சேகரித்து
வைத்திருந்த டிஜிட்ட‌ல் போட்டோ ஆல்ப‌ங்க‌ளை ஒரே நொடியில் இழ‌ந்தோர் அதிக‌ம். 3-2-1 Backup Strategy ப‌ற்றி கேள்வி ப‌ட்டிருக்கின்றீர்க‌ளா? முத‌லாவ‌தாக உங்க‌ள் க‌ணிணியிலுள்ள‌ ஒரிஜினல் காப்பி, பின் இர‌ண்டாவ‌தாக ஒரு போர்ட்ட‌பிள் டிரைவ்வில் அத‌ன் பேக்‍அப் காப்பி, மூன்றாவ‌து கிள‌வுடில் ஒரு பேக்கப் காப்பி (எ.கா பிக்காசா அல்லது Carbonite) என‌ மூன்று காப்பிக‌ளை வைத்துக்கொள்வ‌து எப்போதும் ந‌ல்ல‌து.எந்த‌ ச‌ம‌ய‌த்திலும் உங்க‌ள் மேலான‌ டேட்டாக்க‌ளை இழ‌க்க‌மாட்டீர்க‌ள்.

இப்போது இர‌ண்டாவ‌தாக நாம் சொன்ன போர்ட்ட‌பிள் டிரைவ்வில் ஒரு காப்பி வைத்துக்கொள்ள,‌ அந்த போர்ட்ட‌பிள் டிரைவ் வாங்குவ‌தைப் ப‌ற்றி க‌வ‌னிப்போம்.

1.கொள்ள‌ள‌வு: 320GB,500GB,750GB,1TB என‌ ப‌ல்வேறு அள‌வுக‌ளில் இது கிடைக்கின்ற‌து. 320GB-யில் ம‌ட்டும் 91,400 போட்டோக்க‌ளை நாம் சேமித்து வைக்கலாமாம் அல்ல‌து 80,000 MP3 பாட‌ல்க‌ள் அது கொள்ளும். அப்ப‌டியென்றால் 1TB ப‌ற்றி நீங்க‌ளே க‌ண‌க்கிட்டுக் கொள்ளுங்க‌ள். விர‌லுக்கேற்ற‌ மோதிர‌ம் வாங்கிக்கொள்ள‌வும்.

2.பரிம‌அள‌வு: 4"X3" அள‌வில் அல்லது 2.5" form factor அளவில் கிடைக்கும் டிரைவுகள் ரொம்ப கியூட். பாஸ்போர்ட் போல‌ ச‌ட்டைப்பையில் வைத்துக் கொண்டு நீங்கள் செல்லலாம்.

3.No Power Cord please: த‌னியாக‌ பெரிய‌ ப‌வ‌ர் கார்டெல்லாம் கொடுக்காம‌ல், USB கேபிளே ப‌வ‌ர் ம‌ற்றும் டேடாக்கு ப‌ய‌ன் ப‌டுமாறு இருத்த‌ல் அதை இன்னும் போர்ட்ட‌பிள்ளாக‌ வைத்துக்கொள்ள‌ உத‌வும். அப்ப‌டியே டிரைவில் ஒரு LED லைட்டும் இருந்தால் ந‌ல்ல‌து. டிரைவ் மூச்சு விடுகிறதா இல்லையாவென‌ தெரிஞ்சுக்க‌லாமே.

4. go USB3: அதிவேக‌மாக‌ டேட்டாக்க‌ளை ப‌ரிமாற உங்க‌ள் போர்ட்ட‌பிள் டிரைவ் USB 3 ஆக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து. உங்க‌ள் க‌ணிணியும் அதுபோல USB 3.0 போர்ட் கொண்டிருக்க‌ வேண்டும். பழைய USB 2.0-ஆனது 25GB டேட்டாவை காப்பி செய்ய‌ 14 நிமிட‌மெடுக்கின்றதுவென்றால் புதிய SuperSpeed USB 3.0 வெறும் 70 நொடிக‌ளே எடுக்கின்ற‌துவென்றால் வேகத்தை பார்த்துக் கொள்ளுங்க்கள். உங்கள் பழைய மடிக்கணிணியில் USB 3.0 போர்ட் இல்லையென்றால் 2PORT USB 3.0 Expresscard Superspeed Card உதவலாம்.

5.RPM: அது போல‌ போர்ட்ட‌பிள் டிரைவ் சுழ‌லும் வேக‌மும் முக்கிய‌ம்.7200RPM என்றால் மிக‌வும் ந‌ல்ல‌து. 5400RPM மோச‌ம‌ல்ல‌.

இப்போதைக்கு எனது அபிமான பிராண்ட் Western Digital My Passport Essential External Portable Hard Drive

சேவை செய்யும் க‌ர‌ங்க‌ள் பிரார்த்த‌னை செய்யும் உத‌டுக‌ளை விட‌ மேலான‌து. - ‍ம‌காத்மா காந்தி


”உபுண்டு உட‌ன் ஒரு ப‌ய‌ண‌ம் த‌மிழ் மென்னூல் ”Getting Started with Ubuntu 10.04 manual in Tamil


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

மாணவன் said...

வழக்கம்போலவே அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உபயோகமான தகவலை உங்களுக்கே உரிய எழுத்து நடையில் பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் அருமை ஐயா,

உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

Thirumalai Kandasami said...

Good Info..thanks for sharing..

http://enathupayanangal.blogspot.com

Speed Master said...

வழக்கம் போல் பயனுள்ள பதிவு

jafna said...

Dear Mr.PKP,

I have Maxtor External Harddisk 320GB. Now I need some prtection software for that.. Advance thanks..

IT Tweets said...

Thanks for Ubuntu Ebook

sen said...

Very useful. Well done, keep it up.

Sugan said...

//3-2-1 Backup Strategy ப‌ற்றி கேள்வி ப‌ட்டிருக்கின்றீர்க‌ளா? முத‌லாவ‌தாக உங்க‌ள் க‌ணிணியிலுள்ள‌ ஒரிஜினல் காப்பி, பின் இர‌ண்டாவ‌தாக ஒரு போர்ட்ட‌பிள் டிரைவ்வில் அத‌ன் பேக்‍அப் காப்பி, மூன்றாவ‌து கிள‌வுடில் ஒரு பேக்கப் காப்பி (எ.கா பிக்காசா அல்லது Carbonite) என‌ மூன்று காப்பிக‌ளை வைத்துக்கொள்வ‌து எப்போதும் ந‌ல்ல‌து.// How to sync btw all three disks is very important. can you share some ideas?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்