கைப்பேசிகள் கொஞ்சம் ஸ்மார்ட் ஆனதும் ஆனது, இன்றைக்கு இந்த ஸ்மார்ட்போன்களைக் கொண்டு நாம் கையாடும் கிரியாக்கள் கட்டுக்கடங்கா போய்க் கொண்டிருக்கின்றது. ஒருவர் ஐபோனை வைத்து ஊத்து ஊதிக் கொண்டிருக்கின்றார். இன்னொருவர் அதை மைக்காக பயன்படுத்தி ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருக்கின்றார். இன்னொருவரோ தனது கிடாரின் இழைகளை ஒரு ஐபோன் ஆப் கொண்டு எளிதாக டியூன் செய்து கொண்டிருக்கின்றார். நாங்களும் விட்டோமா பார் என்று ஒரு மருத்துவக்குழு இப்போது ஐஹெல்த்தென வந்து இரத்த அழுத்தத்தையும் உங்கள் ஸ்மார்ட் போன் கொண்டு சோதிக்கலாம் என்கின்றது. இவர்கள் கொடுக்கும் வன்பொருள் கிட்டை உங்கள் ஸ்மார்ட் போனில் செருகிக்கொண்டு ஸ்டாட் மியூசிக் கென கட்டளை கொடுத்தால் உங்கள் இரத்த அழுத்தம் ஐபோன் திரையில் அளந்து காட்டப்படும். கூடவே இரத்த அழுத்தம் எடுக்கப்பட்ட நாள், நேரம் போன்ற தகவல்களும் அதில் சேமித்து வைக்கப்படுவதால் மருத்துவரிடம் போகும் போது அவரால் எளிதாக உங்கள் இரத்த அழுத்தமானது ஏறி இறங்கும் பேற்றனை கணிக்க முடியும் என்கின்றனர். இது போல இனி சுகர் செக் பண்ண, கொலஸ்ட்ரால் செக் பண்ண டெம்பரேச்சர் எடுக்கவென புதுப்புது வன்பொருள் வால்கள் ஸ்மார்ட் போன்களுக்கென சந்தையில் வருவது தடுக்க முடியாததாகிவிடும். பொதுவாகவே இது போன்ற மருத்துவ தேவைகளுக்கு எலக்ட்ரானிக் கருவிகளின் நம்பகத்தன்மையை விட, கைகொண்டு செய்யும் முறைகளே அதிக துல்லியம் என நேகா ஒருமுறை சொல்லியிருக்கின்றாள். இதுவும் அவளைப் பொறுத்தவரை அந்த ரகத்தில் சேர்ந்து விடும்.
கைப்பேசிகள் மட்டும் தானா என்ன? அடுப்பு முதல் வீட்டிலிருக்கும் அத்தனை உபகரணங்களையும் நாங்கள் ஸ்மார்ட் ஆக்கி காட்டுகிறோமென LG நிறுவனமானது THINQ Technology-யோடு வந்திருக்கின்றார்கள். இதன்படி வீட்டு உபகரணங்கள் உங்கள் வீட்டு வை-பையோடு இணைக்கப்பட்டிருக்கும். இதனால் வாசிங்மெசின் துவைத்து முடிந்ததும் உங்கள் போனுக்கு அதனால் டெக்ஸ்ட் அனுப்ப முடியும்.கூடிய சீக்கிரத்தில் டிவீட்டும் செய்யலாம். அது smart washer. அலுவலகத்திலிருந்தே உங்கள் ஐபேட் வழி கண்காணித்து, வீட்டிலுள்ள robotic vacuum cleaner-யை இயக்கி வீட்டை சுத்தம் செய்யலாம். ஷாப்பிங் செய்யும் போது உங்கள் கைப்பேசியில், வீட்டு ஸ்மார்ட் ஃபிரிட்ஜானது அதில் என்னவெல்லாம் இருக்கின்றது, எது எது எப்போது காலாவாதியாகின்றது வென ஒரு லிஸ்ட் போட்டு இன்வென்டரியே கொடுத்து விடும். ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கொண்டிருக்கும் போதே இரவுக்கு தயாராக கைப்பேசி வழி ஐஸ்மேக்கரை ஆன் பண்ணிவிடலாமாம். எதாவது உபகரணம் மக்கர் பண்ணினால் அதுவே கஸ்டமர் சர்வீசுக்கு மெசேஜ்ம் அனுப்பி விடும்.இதெல்லாம் இன்னும் ஐந்து வருடம் கழித்து நடக்கப்போகின்ற சங்கதிகளில்லை. இன்னும் சில மாதங்களில் நம்மிடையே புழங்க விருக்கும் தட்டு முட்டுகள். வாலட்டை மட்டும் தயார்படுத்திக் கொள்ளவும்.
புதுவருடமானதும் என்னவோ சிலரின் கைப்பேசி அலாரங்கள் ஒழுங்காக வேலைச் செய்யவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்டதில் நம் நண்பனும் ஒருவன். ஸ்னூஸ் பட்டனே இல்லாத அலாரக்கடிகாரம் ஒன்றை பரிசளிக்கலாமென்றிருந்தேன். கோபால் பரிந்துரைத்தது Flying Digital Alarm Clock 6 மணிக்கு அலாரம் அடித்த கையோடு இந்த கடிகாரம் ரூமில் ஒரு ஹெலிகாப்டரையும் பறக்க விடுமாம். அதை நீங்கள் எழும்பிப் போய் பிடித்து அக் கடிகார பேஸில் வைக்கும் வரை கொடூர அலார ஒலி நிற்பதில்லையாம். நல்லப் பரிந்துரை. இன்னொன்று Laser Target Alarm Clockகொடுக்கப்பட்ட விளையாட்டு துப்பாக்கியால் தூக்க கலக்கத்தில் கடிகாரத்தில் வைக்கப்பட்டுள்ள டார்கெட்டை சரியாக சுட்டால் தான் அந்த அலார ஒலி நிற்குமாம். நல்லாவே யோசிக்கிறாங்க போங்க.
1958 மார்ச் 1ஆம் தியதி அன்று திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இலங்கை வானொலிக்கு வழங்கிய பேட்டி இங்கே MP3 வடிவில்.
http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3
உங்கள் சந்தேகங்களை சந்தேகப்படுங்கள் உங்கள் நம்பிக்கைகளை நம்புங்கள். |
தண்டறை சுப்பராய ஆசாரியார் ”அகம்புற ஆராய்ச்சி விளக்கம்” Tamil AgamPura Aaraaychi Vilakkam
Download this post as PDF
6 comments:
வணக்கம் ஐயா, தொழிநுட்ப தகவல்களை பதிவிடுவதில் தாங்கள் என்றுமே வல்லவர்தான் அந்தவகையில் இன்றும் வழக்கம்போலவே பயனுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை உங்களுக்கே உரிய எழுத்து நடையில் அருமை ஐயா
தொடரட்டும் உங்களின் இந்த பொன்னான வலைப்பணி....
//உங்கள் சந்தேகங்களை சந்தேகப்படுங்கள் உங்கள் நம்பிக்கைகளை நம்புங்கள்.//
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க சூப்பர்...
as usual nice
nice post about smart devices. thanks sir
very nice.
Happy New year
Hello Boss,
Thanks for coming back, today only i checked the new posts..
Thanks.... Thanks.....
Post a Comment