காலத்துக்கு காலம் வாக்கும் வழக்கமும் மாறிக் கொண்டிருக்கின்றது. பழைய படங்களின் ஊடாய் நம் பண்டைய தமிழகத்தைப் பார்க்கப்போகின்றேன் எனச் சொல்லி பழைய படங்களை ஒரு வேகப்பார்வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் கோபால். "பாசமலர்" ஓடிக் கொண்டிருந்தது. "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே" என்ற பாட்டில் என்னா ஒரு உற்சாகம், உத்வேகம். "நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை, வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என என்னே உறுதியோடு அந்த வரிகள் இருந்தன. இதெல்லாம் இன்றைக்கு சாத்தியமாவென தோன்றியது. வாக்கினில் மட்டுமல்ல வழக்கத்திலும் எவ்வளவு மாற்றங்கள். முன்பெல்லாம் முப்படைகளும் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் குறுநில மன்னவன். இரத்தம் சிந்தாமல் அவனுக்கு வெற்றிகள் கிட்டுவதில்லை. இன்றைக்கு ஈரானின் நியூக்கிளியர் எழுச்சியை காணப் பொறுக்காத சில நாடுகள் அதனுடன் சண்டையிட்டு அதன் எழுச்சியை தடுத்து நிறுத்தவில்லை மாறாக கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமே நடந்து முடிந்திருக்கின்றது. ஸ்டக்ஸ்நெட் (Stuxnet)என்ற ஒரு கணிணி வார்ம் வைரசே அங்கு ஆயுதமானது.இது பொதுவாக பிளாஷ் டிரைவ் மூலம் பரவவைக்கப் படுகின்ற ஒரு வைரஸ். ஏவுகணைத்தாக்குதல் நடத்தியிருந்தால் கூட ஈரானியர்களால் சீக்கிரமாய் மீண்டிருக்க முடியும். இந்த கணினி வைரசிடமிருந்து மீண்டுவர இன்னும் அதிக நாட்கள் வருடங்கள் பிடிக்கும் என்கின்றனர். பாருங்கள், நாம் பிடிக்க வேண்டிய ஆயுதமும் கூடகாலப்போக்கில் மாறியிருக்கின்றது. டிவியில் "படித்தால் மட்டும் போதுமா" படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
நட்பு வட்டம் எப்படி உடைகின்றதுவென ஒரு ஆராய்ச்சி.
ஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் மற்றவன் பிசியாக இருப்பானோவென நினைத்துக்கொள்கின்றனர்.
இதனால் அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டுமென தொடர்புகொள்ளாமலே இருப்பர்.
கொஞ்சம் காலம் சென்றதும்
மற்றவன் தன்னை முதலில் தொடர்பு கொள்ளட்டுமேவென இருப்பான்.
பின்னர் நான் முதலில் அவனை ஏன் தொடர்புகொள்ள வேண்டும் என நினைப்பான்.
அந்த நினைப்பே பின் வெறுப்பாக மாறி கடைசியில் ஒருவரையொருவர் மறந்தே போகின்றனர்.
மின்னஞ்சலில் வந்தது. நிஜமாகப்பட்டது.
கணித,விஞ்ஞான மூளைகளுக்கென மைக்ரோசாப்டிலிருந்து Microsoft Mathematics 4.0 என ஒரு இலவச மென்பொருளை வெளியிட்டிருக்கின்றார்கள். http://www.wolframalpha.com தளத்தை உங்களால் உபயோகப்படுத்த முடிந்தால் இதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
Download Microsoft Mathematics 4.0
இந்திய முழு நீளத்திரைப்படங்களைப் பார்க்க இங்கே ஒரு தளம். அழகாக அட்டவணைப்படுத்தி இருக்கிறார்கள்.
http://bharatmovies.com/tamil/watch/movies.htm
நல்ல துணையாக, தோழமையுடன் இருப்பதில்தான் உண்மையான மன நிறைவு இருக்கிறது. |
Download this post as PDF
3 comments:
//பாருங்கள், நாம் பிடிக்க வேண்டிய ஆயுதமும் கூடகாலப்போக்கில் மாறியிருக்கின்றது. டிவியில் "படித்தால் மட்டும் போதுமா" படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.//
உண்மைதான் ஐயா மிகச்சரியாக தொலைநோக்குப்பார்வையோடு தெளிவா சொல்லிருக்கீங்க உங்களுக்கே உரிய எழுத்துநடையில் அருமை....
Unbeatable Post. Thanks
//பாருங்கள், நாம் பிடிக்க வேண்டிய ஆயுதமும் கூடகாலப்போக்கில் மாறியிருக்கின்றது
படமே அழகாய் சேதி சொன்னது.
தகவல்கள் சூப்பர்.
Post a Comment