உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, July 30, 2009

18 அம்சங்கள்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
  • மிக மிக நல்ல நாள் - இன்று
  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
  • மிகவும் வேண்டியது - பணிவு
  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு
  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
  • மிகக் கொடிய நோய் - பேராசை
  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை
  • நம்பக் கூடாதது - வதந்தி
  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
  • செய்யக் கூடியது - உதவி
  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
  • உயர்வுக்கு வழி - உழைப்பு
  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
  • பிரியக் கூடாதது - நட்பு
  • மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

அந்தனி ஜீவா ”திருந்திய அசோகன்” சிறுவர் நாவல். Anthony Jeeva "Thirunthiya Asokan" Siruvar Novel pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Thursday, July 23, 2009

வாடகைக்கு

நாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கும் ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” நிஜமாகிக் கொண்டே வருகின்றது. போன மாதம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு நாம் இந்த மாதம் காசு கட்டுவது போல போன மாதம் முழுக்க பயன்படுத்திய போட்டோஷாப் மென்பொருளுக்கான வாடகை கட்டணத்தை இந்த மாதம் நீங்கள் கட்டிவிட்டு ஒரேயடியாக ஜகா வாங்கிக்கலாம். கையில் காசிருந்தால் இன்னும் இரண்டு மாதம் கூட போட்டோஷாப்பை நீங்கள் வாடகைக்கு குறைந்த கட்டணத்தில் உங்கள் கணிணியில் வைத்துக் கொள்ளலாம். பைரேட்டட் மென்பொருள்களின் புழக்கத்தை தவிர்க்க இந்த மாதிரியான ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” ஒரு நல்ல நடைமுறை தான்.

இதற்கு கணிணியெல்லாம் தேவையில்லை. Computing without a computer என்ற கோஷத்தோடு வந்திருக்கின்றார் 25 வயது சச்சின் துக்கால்(Sacchin Duggal). இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பறந்ததுகளில் இதுவும் ஒன்று.

nivioCompanion என செட்டாப்பாக்ஸ் போல ஒரு சின்ன பொட்டி. அந்த சின்ன பொட்டியோடு ஒரு கீபோர்டு மவுசு மானிட்டரும் இருந்தால் யூ ஆர் ஆல் செட். இந்த சிறிய பொட்டியானது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்க உங்கள் விண்டோஸ் விஸ்டா முதல் எல்லாமே தூரத்திலுள்ள அவர்கள் டேட்டா செண்டரிலிருந்து தான் வரும். அந்த பொட்டியினுள் எதுவுமே நடப்பதில்லை. சேமிக்கப்படுவதில்லை எல்லாமே அவர்கள் டேட்டா சென்டரிலுள்ள SAN-ல் தான் சேமிக்கப்படும். nDrive என்கின்றார்கள்.10GB இலவசமாம்.Computing power-ஐ இஷ்டத்துக்கும் அப்புறம் கூட்டிக்கொள்ளலாம். Hardware அல்லது software upgrade பிற்காலத்தில் செய்யத் தேவையில்லை. ஒரு நாளும் கிராஷ் ஆகாது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் என சத்தியம் செய்கின்றார்கள். குறைந்தது 128 Kbps வேக இணைய இணைப்பாவது இருக்க வேண்டும். ஆனால் என்ன ஒரே பிராப்ளம் நாம் காலத்துக்கும் ஹார்டுவேருக்கும் சாப்ட்வேருக்கும் மாதச் சந்தா கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

Realtimepublishers கணிணிதுறையினருக்காக அநேக தரமான மென்புத்தகங்களை இலவசமாக வழங்குகின்றார்கள். நீங்கள் ஒரு IT professional எனில் கண்டிப்பாக கவனிக்க வேண்டியதொரு தளம். அவர்களின் Realtime Nexus Digital Library-யானது இலவச டெக்னாலஜி pdf eBooks-களால் நிரம்பியிருக்கின்றது.


பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்










செந்தில் நாதன் ”ஆரம்ப விண்ணியல்” விஞ்ஞான மென்புத்தகம் இங்கே தமிழில். Senthil Nathan "Aaramba Vinniyal" pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Wednesday, July 22, 2009

எட்டாதவை

காண்பது தான் உலகம் அதற்கும் மேல் வேறெதுவும் இல்லை என்பது தான் நம்மில் பலரும் நம்புவது. நம் புலன்களுக்கு எட்டாததால் பொருளுலகம் தவிர வேறுலகம் இல்லை என ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றோம். குத்திருட்டில் நாய் எதையோ பார்த்து குரைக்கின்றது ஊளையிடுகின்றது. நம் கண்களுக்கு எட்டாதது எதுவோ அதற்கு எட்டியிருக்கின்றது எனலாமா? அப்படியே தான் அதன் மோப்ப சக்தியும். புலன் விசாரணையில் துப்பறிய ஒரு நாய் பயன்படுத்தப்படும் போது ஏன் அப்பணியை செய்ய இன்னும் ஒரு ரோபோ உருவாகக்கப்படவில்லை. சில மாயநிலைகள் நம் புலன்களுக்கு மட்டுமல்ல கருவிகளுக்கும் கூட இன்னும் எட்டாதவையே. 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளை நம் சாதாரண காதுகளால் கேட்க முடிகின்றது. அதுவே அதற்கும் மேல் போனால் அதை கேட்க எப்.எம் ரேடியோக்கள் வேண்டும். வெறும் காதுக்கு எட்டாததால் 93.5 -அலைவரிசையில் சூரியன் எப்.எம் இல்லை என்றாகிவிடுமா? பூமிஅதிர்ச்சி வரப்போகின்றதென்றால் மிருகங்களின் புலன்களுக்கு ஏதோ ஒரு வகையில் அச்செய்தி எட்டிவிடுகின்றதாம். மனித ஜென்மத்தால் தான் இன்னும் அது முடியவில்லை. எதாவது ஒரு கருவி கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

திடம் திண்மம் வாயு இந்த மூன்று நிலைகளில் ஒன்றில் தான் பொருட்கள் இருக்கமுடியும் என பள்ளியில் சொல்லித் தந்தார்கள்.
நெருப்பு அது திடமா? திண்மமா? வாயுவா?
சூரியன் அதன் ஸ்டேட் என்ன? திடமா? திண்மமா? வாயுவா?
ஒளி அது துகளா இல்லை அலையா? இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மூன்று தன்மைகளும் சேர்ந்தாப்போல் பிளாஸ்மாவென நான்காவதாக ஒரு நிலை இருக்கலாமென சொல்லிவைத்திருக்கின்றார்கள்.

நம் சரீரம் திடம், நம் இரத்தம் திரவம், நாம் சுவாசிக்கும் ஆவி வாயு, நம் ஆன்மா பயோபிளாஸ்மாவோவென ஒரு தற்காலிக முடிவு.

பொருளுலகில் உள்ளவை நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் கட்டுபடும். பொருள்களுக்கு அப்பாற்பட்டவை எப்படி நம் கருவிகளுக்கோ கண்களுக்கோ கட்டுபடும்? அப்படி கட்டுபட்டால் அது பொருள் என்றாகிவிடுமே. எனவே நாம் எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?

Channel 4 - Dispatches (June 2009) - Terror in Mumbai எனும் ஒரு டாக்குமெண்டரி வீடியோவை சமீபத்தில் காண நேரிட்டது. அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப சமயம் பிடித்தது.
http://www.vimeo.com/5409826

துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்....
பூக்கள் மலரும்
- ஐஸா









706 பக்க மாபெரும் ஆனந்த விகடன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக.Tamil recipes Anathavikatan Mega Collection pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Monday, July 20, 2009

பள்ளிக்குப் பிறகு வழிகள்

பத்துக்குப் பிறகு பன்னிரண்டுக்குப் பிறகு என்ன செய்யலாமென யோசிப்பவர்களுக்கு ஒரு அருமையான விளக்கப்படம் இங்கே.
படத்தை சொடுக்கி அதை பெரிதாக்கிப் பார்க்கலாம். படிக்கலாம்.

Career Path Finder after higher secondary school SSLC or Plus two.


விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.






நீலகண்ட சாஸ்திரி ”தென் இந்திய வரலாறு” மென்புத்தகம் இங்கே தமிழில்.Neelakanda Sasthri "Theninthiya Varalaaru" in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்