நோட்புக்குகள் என அறியப்பட்ட மடிக்கணிணிகள் இப்போது இன்னும் எடைகுறைந்து / வசதிகள் குறைந்து / விலைகுறைந்து நெட்புக்குகள் (netbooks) எனும் பெயரில் சந்தைகளில் வந்திருக்கின்றன.சிலர் இதை மினி நோட்புக் என்கின்றனர். இன்னும் சிலரோ இதை UMPC அதாவது Ultra-Mobile PC என்கின்றனர். விலை 300 டாலர் அளவில் இருக்கும்.பள்ளி பொடிசுகளுக்கு் படம் வரைய புரோகிராம் போடவென வாங்கிக் கொடுக்கலாம். அதில் DVD டிரைவையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. 400 பக்க நோட்டுப்புத்தகம் ஒன்றை விரலிடுக்கில் தூக்கித்திரியும் கல்லூரி இளைஞன் போல தூக்கித் திரியலாம். சிலதுகளின் ஹார்டிரைவுகள் SSD அதாவது Solid-state டிரைவுகள் கொண்டிருக்கும். சராசரி ஹார்டிரைவ் போல் இதில் டிஸ்க், ஸ்பிண்டில், ஹெட் எல்லாம் இருக்காது. வெறும் சிப் தான் டிரைவ். அதனால் நம் ஆசாமிகளின் குலுக்கல்களுக்கெல்லாம் இந்த நெட்புக்குகள் தாக்கு பிடிக்கும். பூட்டிங்கும் வேகமாக இருக்கும் என்கின்றார்கள். கூடவே இந்த நெட்புக்குகள் அதிக நேரம் மின்னிணைப்பின்றி ஓடும் சக்தி வாய்ந்தனவாம். கண்டிப்பாக வயர்லெஸ் கார்டுவசதி கொண்டிருக்கும்.
பெரும்பாலான வேலைகளை ஆன்லைனிலேயே செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.அதனால் தான் அதன் பெயர் நெட்புக். வலைமேயலாம் மின்னஞ்சல் பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் ஆபீஸூக்கு பதில் ஆன்லைனிலேயே இருக்கும் இலவச Google Docs-ன் word processor அல்லது spreadsheet-ஐ பயன்படுத்தலாம். உங்கள் நெட்புக்கில் எல்லா மென்பொருள்களையும் நிறுவியிருக்க எதிர்பார்க்கக்கூடாது.
இது அப்படியே நம்மை சீக்கிரத்தில் யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங் அல்லது கிளவுட் கம்ப்யூட்டிங்கில் (Cloud computing) கொண்டு போய் விடும். மாதம் ஒன்றாம் தியதி ஆனால் மின்சாரபில், தண்ணீர்பில், தொலைபேசிபில் கட்டுவது போல எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கோ அல்லது கூகிளுக்கோ மாதம் கொஞ்சம் காசு கட்டுவீர்கள்.அவர்களின் எல்லா மென்பொருள்களும் உங்களுக்கு ஆன்லைனிலே தயாராக இருக்கும்.உங்கள் போட்டோக்கள் பாடல்கள் வீடியோக்கள் இன்னும் பிற கோப்புகள் எல்லாம் உங்கள் நெட்புக்கிலிராமல் எங்கோ ஒரு செர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். தேவைப்பட்டதும் நொடியில் கிளிக்கி உங்கள் நெட்புக்கில் கொண்டுவரலாம். ரசித்துக்கொள்ளலாம். உங்கள் சி டிரைவ் எப்போதுமே காலியாக இருக்கும்.எப்படி இருக்குது கதை.
அமெரிக்கா வாழ் நண்பர்களுக்கு ஒரு டீல் சேதி. இந்த சனிக்கிழமை வால்மார்ட்டில் சேல் போட்டிருக்கிறார்கள். ஒரு Compaq மடிக்கணிணியின் விலை $298. மாடல் விவரங்கள் Compaq CQ50-139WM 15.4" laptop WITH 2GB RAM and 160GB HD.ஊருக்கு கொண்டு போக கிப்ட் ஆச்சுது.
ஓடத் தொடங்குமுன் நடக்க பழகிக்கொள்வோம். |
முனிசாமி "மூலிகை மர்மம்" தமிழ் மருத்துவ நூல் இங்கே தமிழில் மென் புத்தக வடிவில். Munisami Mooligai Marmam Medicine in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Download this post as PDF
1 comment:
Walmart deal is very limited!!!!
:-(
Post a Comment