பல சந்ததிகளுக்கொருமுறை வரும் முழு சூரியகிரகணத்தை பார்ப்பதுபோல அந்த கேஸ் ஸ்டேசனின் விலைப் பலகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். கேலன் பெட்ரோல் விலை $1.97 என்று எழுதி இருந்தது.இனிமேல் இந்த ரேஞ்சில் பெட்ரோல் விலையை என் வாழ்நாளில் நான் பார்ப்பேனோ தெரியாது.முடிந்தால் ஒரு போட்டோ எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கச் சொன்னேன் கோபாலிடம்.நம் குழந்தைகளிடம் காட்டலாமே என்றேன்.நிஜ உலகின் கேலன் பெட்ரோல் விலை $4.01 தான்.பொருளாதார மந்தம் காரணமாக இவாள் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். Dow,Sensex,Nikkei-காரர்கள் எல்லாம் அவர்களின் கரடி போக்கை விட்டு விட்டு மீண்டும் காளை ஓட்டத்துக்கு வரும் போது பெட்ரோல் விலையும் விண்ணை தொட்டுவிடும் என்கின்றேன் என்றேன். ஆனால் வழக்கம் போல கோபால் இந்த என் கருத்துக்கும் உடன்பட மறுத்துவிட்டான்.
முழு மின்சாரக் கார்களை இன்னும் ஏனோ ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே பார்க்கமுடிகின்றது. ஷோரூமில் என்றைக்கு பார்க்கப்போகின்றோமோ? சிக்காகோவிலிருந்து நியூயார்க்கு தரைவழி செல்லும் போது குறைந்தது மூன்று முறையாவது பெட்ரோல் டாங்கை நிரப்பவேண்டும்.இதுவே மின்சாரக்கார் எனில் ஐந்து முறை வழியில் காரை நிறுத்தி கார் பேட்டரியை சார்ஜ்செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்ய அரை மணிநேரம் என எடுத்துக்கொண்டாலும் இரண்டரைமணிநேரம் பயணத்தில் வேஸ்ட். இதுவே பெட்ரோல் காரானால் நிமிடத்தில் பில்அப் செய்துகொண்டு போய்கொண்டே இருக்கலாம். இந்த சிக்கலை போக்க Better Place எனும் நிறுவனம் தானியங்கி "பேட்டரி மாற்றுமிடங்களை" அங்காங்கே நிறுவும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் படி நூறு மைல்கள் நீங்கள் காரோட்டியவுடன் வழியில் வரும் அடுத்த "Battery switching station"-ல் போய் நீங்கள் எளிதாக உங்கள் வாகனத்தின் மின்கலத்தை மாற்றிகொள்ளலாம்.எல்லாமே தானியங்கி.கார் வாஷ் நிலையங்கள் போலவே நீங்கள் காரைவிட்டு இறங்கத் தேவையில்லை.அதுவே உங்கள் காரின் பேட்டரியை மாற்றித் தந்துவிடும்.இதனால் பேட்டரியை சார்ஜ் செய்யும் தொல்லை இல்லை.விலையும் மலிவு.சுற்று சூழலும் சுத்தமாகும் என்பது அவர்களின் கணக்கு.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் டென்மார்க்கில் இதுமாதிரியான Electric Recharge Grid-கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் சமீபத்தில் இணைந்துள்ளது. (அமெரிக்காவில் இன்னும் வரவில்லை. ) பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த பார்வை சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. எனினும் ஆயிலை மட்டுமே நம்பி வாழும் பல நாடுகளுக்கு இது நற்செய்தியில்லாததால் பல அரசியல் இடையூறுகளை இது கடக்கவேண்டி வரும்.
![]() ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!” -கவிஞர் வாலி |


2 comments:
PKP,
Tody the gas price in Houston $1.99/G (Reg).
//எனினும் ஆயிலை மட்டுமே நம்பி வாழும் பல நாடுகளுக்கு இது நற்செய்தியில்லாததால் பல அரசியல் இடையூறுகளை இது கடக்கவேண்டி வரும்.//
உண்மைதான், ஆனால் எனக்கெனவே இந்த வளைகுடா தேசங்களின் கூத்தெல்லாம் இன்னும் சில காலம் தான் என்கிறேன். காரணம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி அங்கே உலகின் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. பிறகு அங்கு இறுதியாக மிகப்பெரும் பூகம்பம் ஏற்படுமாம். (இறைவன் நாடினால், கூடிய விரைவில் இந்த முன்னறிவிப்புகள் அனைத்தையும் ஒரு பதிவாக தர முயற்சிக்கின்றேன்)
நாம் சிறுவயதில் படித்த விஞ்ஞான பாடம் நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால், தற்போது கிடைக்கும் பெட்ரோலியம் அனைத்திற்க்கும் காரணம் ஆதியில் ஏற்ப்பட்ட பெரும் பூகம்பத்தினால் பூமியின் மேற்பரப்பில் இருந்த அனைத்தும் பூமிக்குள் சென்று விட்டது. பிறகு அதிக உஷ்ணம் மற்றும் அழுத்தம் காரணமாக அதில் ஒரு பகுதி பெட்ரோலியமாக மாறிவிட்டது. தற்போது கிடைக்கும் பெட்ரோலியம் இன்னும் சில பத்து வருடங்கள் தான். அப்ப அடுத்த யுகத்திற்க்கு? மறுபடியும் மேலே உள்ளவைகள் கீழே போனால் தான் பெட்ரோலியம் உற்பத்தி ஆரம்பம் ஆகும். கணக்கென்னவெ சரியாகதான் உள்ளது.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
Post a Comment