உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, November 06, 2008

ரட்சகன்

கிடுகிடுவென நடுங்கும் குளிரில் காலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் குல்லாவையும் குட்டைப்பாவாடை சீருடைகளையும் அணிந்து கொண்டு மஞ்சள் வண்ண பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்கும் சிறார்களை பார்க்கும் போது பாவமாய் தான் இருக்கும்.சாளர சிட்டுக்குருவிகளின் கீச்சுகளோடு விடியலில் இவர்களின் கலகலபேச்சும் என்னை எழுப்பிவிடும். இன்னும் தூங்கிக்கொண்டிருப்பேன்.பாவம் அவர்களின் பெற்றோர்கள்.எனக்கும் ஒருவன் இருக்கின்றான்.

கதவை தட்டி என்னை எழுப்பி "அங்கிள் நான் சொல்லலை.அவர் ஜெயிச்சுட்டார்"-னு ஓவென உற்சாகம் பொங்க சொல்லி விட்டு பள்ளிக்கு பறந்து போனான் பக்கத்துவீட்டு சிட்டு.ஒன்பது வயது நண்பன்.பாதி கழுதை வயதாகின்றது எனக்கு.அரசியல் பேச ரொம்பவும் யோசிக்கின்றேன்.

நியூஸ்வீக் "The World Hopes for Its First President" என்று தலைப்பிட்டிருந்தது. உலகத்தின் முதன் அதிபர் என அவரை பிரகடனபடுத்தியிருந்தது.அவ்வளவு விறுவிறுப்பு உற்சாகம் எதிர்பார்ப்பு உலகமெங்கும்.எந்த பேதமும் இன்றி எல்லோரும் விரும்பும் தலைவராய் அவர் தெரிகின்றார். அதற்கேற்றாப்போல் அவரும் வெற்றியுரையாற்றும் போது எல்லைகளை கடந்து எல்லா மக்களையும் நினைவுகூர்ந்து "மாற்றத்துக்காக" விளித்திருந்தார். மக்கள் பெரும் சிக்கல்களில் தவிக்கும் போதெல்லாம் அதிலிருந்து தங்களை காப்பாற்ற கடவுள் அவதாரமாக தோன்றுவார் என்பார்கள். உலகமே இவர் மேல் "நம்பிக்கை" வைத்திருக்கின்றது.

ஐரோப்பிய ஐரிஷ் பிண்ணனி கொண்ட அமெரிக்க அம்மா வெள்ளை நிறத்தவர், ஆப்ரிக்க அப்பா கருப்பு நிறத்தவ்ர், பிறந்தது ஹவாய், வளர்ந்தது ஆசிய இந்தோனேசியா. இஸ்லாமிய சூழலில் பிறந்துவளர்ந்து கிறித்தவ சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவர். கையில் எப்போதும் ஒரு ஹனுமன் சிலை இருக்கும் என கேள்விப்பட்டேன்.இப்படி இவரில் உலகம் முழுக்கவும் கலந்திருக்கின்றது.

ரோலர்கோஸ்டர்களில் போகும் முன் "Buckle UP" என்போம்.உற்சாகத்திலும் கத்துவார்கள். பயத்திலும் கத்துவார்கள்.முழுசுற்றும் முடியும் வரை நம்மால் எதுவும் செய்யமுடியாது. கத்திக்கொண்டே இருப்போம் காரணம் தெரியாமல்.



ஒரு விளக்கு
இன்னொரு விளக்கை
ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

10ம் வகுப்பு சிறுகதைகள் தொகுப்பு இங்கே தமிழில் மென் புத்தகமாக. 10th Stnadard Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

Karthik said...

Picture of Obama holding a Hanuman dollar, http://www.time.com/time/politics/whitehouse/photos/0,27424,1811278,00.html

ந ரமேஷ் said...

நல்ல எழுத்தாளருக்குரிய எல்லா அம்சமும் உங்கள் எழுத்தில் உள்ளது. சொல்லாத பல அர்த்தங்களை கடைசி வரிகள் சொல்கிறது. கவிதை பி.கே.பி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்