தலைகீழாக ஆங்கில எழுத்துக்களை கவிழ்த்து வைத்து எழுதியிருக்கும் மொழி தெரியாத வலைபக்கம் ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் ஒரு நம்பிக்கை இருப்பதுண்டு. கூகிளும் யாகூவும் எப்படியாவது கை கொடுக்கும் என்று. அதன் இலவச மொழிபெயர்ப்பு சேவைகள் நமக்கு அவற்றை மொழிபெயர்த்து தருமே.
கூகிளின் மொழிபெயர்ப்பு சேவை ஏறத்தாழ 34 மொழிகளை நமக்கு புரியவைக்கிறது.
http://translate.google.com/translate_t#
அது போலத்தான் யாகூவின் பாபேல்பிஷ் சேவையும்.
http://babelfish.yahoo.com/
நேற்று இப்படித்தான் கூகிள் கண்கட்டி என்னை ஒரு இணையதளத்துக்கு இழுத்து சென்றிருந்தான்.ஆங்கில abcd-கள் வைத்து தான் எழுதியிருந்தார்கள்.ஆனால் என்ன மொழி என கொஞ்சமும் புரியவில்லை.எங்கும் அது பற்றிய தகவல்களையும் கொடுக்கவில்லை. குறைந்தது அந்த மொழி என்ன மொழி என தெரிந்தாலாவது மேலே நான் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகளை பயன்படுத்தலாம்.அது என்ன பாஷை என தெரியாமல் அந்த மொழி பெயர்ப்பு சேவையை எப்படி நாம் பயன்படுத்துவதாம்.அப்போது தேடியபோது கிட்டிய சேவை தான் language identifier அல்லது language detector.தலைகால் புரியாத அந்த உரைநடையை கொஞ்சம் காப்பி/பேஸ்ட் செய்தால் இச்சேவை அது என்ன மொழி என கண்டு பிடித்து கொடுக்கின்றது.
http://ruphus.com/identify/
மகிழ்ச்சியாய் இருந்தது. அதனால் பதிவாக்கிட்டேன்.
![]() இருவர் கற்றுக்கொள்கின்றனர். -ராபர்ட் ஹாஃப் |


7 comments:
Hey, detect language option is there in Google Translate too. It detects the language and translates the text to another language.
//ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்//
ஆனால் நன்பரே! இங்கு உங்கள் ஒருவரால் கற்பிக்க படுகிறது பலர் கற்றுகொள்கின்றனர்
அருமையான தகவல்.
தகவலுக்கு நன்றி நண்பரே.
உங்கள் ஃபோரம் சென்று வந்தேன். நல்ல திருப்பமாக இருந்தது
நன்றிகளுடன்
தமிழ்நெஞ்சம்
thanks for the post
நல்ல வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி PKP..
நம்ம தமிழையே கொடுத்துப் பார்த்தேன்... மிகச் சரியாக கண்டுபிடித்து விட்டது
In the google translater http://translate.google.com/translate_t#
Detect language option available..
thanks!
Post a Comment