உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, November 22, 2008

அபிமான ஐபோன் பயன்பாடுகள்

ஐபோன்களின் ஊடுருவல் இந்தியாவில் கம்மி என கேள்விப் பட்டேன். ஆனால் இங்கு அது ஒரு "ஸ்டேன்டர்டு" போலாகிவிட்டது. வேலை இடத்திலும் சரி விமானப் பயணத்திலும் சரி அக்கம் பக்கம் எதிரே தூரே எல்லாம் ஐபோன் தான் தெரிகின்றது.அதிலும் அவ்வப்போது வெளியாகும் சில சூடான இலவச ஐபோன் பயன்பாடுகள் ஐபோன் பயனாளர்களை பரவசப்படுத்தி விடுவதுண்டு. Google mobile app சமீபத்திய உதாரணம் .கூகிளில் தேட வார்த்தைகளை நாம் டைப்ப வேண்டியதில்லை. வாயால் நாம் சொன்னாலே போதும்.அது நம் குரலை கேட்டு நமக்காக டைப்பிவிடுகின்றது.மேலும் சில உதாரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்.புதிதாக வந்திருக்கும் BlackBerry Storm டச் ஸ்கிரீனோடு வந்திருக்கின்றது.நல்ல போட்டியாக தெரிகின்றது.ஆனாலும் இது மாதிரியான பல நல்ல சுவாரஸ்யமான பயன்பாடுகளை அதில் நிறுவமுடியுமாவென தெரியவில்லை.

 • NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
 • Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
 • Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
 • NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
 • Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
 • Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
 • Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
 • Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
 • Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
 • Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
 • Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
 • Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
 • Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
 • Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
 • புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.
ஒரே சமயத்தில் இரண்டு
வேலை செய்ய
நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில்
ஒரே ஒரு வேலை
செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

சுஜாதா "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" மேடைநாடகம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Dr.Narendiranin Vinotha Vazakku Stage Drama in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories5 comments:

தமிழ்பித்தன் said...

அண்ணா ஐ-போனைப் பாவித்து எனது மடி கணணிக்கு இணைய இணைப்பை ஏற்படுத்தவாமா??

Srini said...

Dear PKP,
There is a APP called Flycast.
It allows streaming radio. Good news is it has about 5 tamil radios also. Another good news is it streams in Edge or 3G also.

I listen Tamil Radio while driving by connecting the audio to my car

Thanks
Srinivasan

Muhammad Ismail .H, PHD., said...

என்கிட்ட ஐபோனுக்கான எல்லா பயன்பாடுகளும் கிட்டதட்ட 2 GB -க்கு மேல இருக்கு. ஆனா என் கிட்ட ஐபோன் தான் இல்லை !!! உங்களுக்கு வேண்டுமா ?

இந்தியாவில் EV-DO 3G வந்து ஒரு வருடத்திற்க்கு மேலாகிவிட்டது. இங்கே பாருங்கள். http://bsnlevdoclub.com/featured-reviews/bsnl-evdo-rental-or-on-purchase/#comments . ஆனா அரசாங்கம் இன்னும் அதற்கான லைசென்ஸ் ஏலம் விடவில்லையாம். எனக்கு சிரிப்பா வருது. நான் அதை தான் உபயோகப்படுத்தி வருகின்றேன்.with care an love,

Muhammad Ismail .H, PHD,

Anonymous said...

Excellent article thanks

http://tamilnris.com
http://ammastips.com/

Anonymous said...

PKP, I read all your articles through RSS feed. Thanks! VEry informative! This post intrigued me. I have ipod touch. Can you post article and important s/w for the same?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்