உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, November 19, 2008

TNO

இணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது. சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை. மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.

TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.

பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்? அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.

கடந்த பதிவில் ஜிமெயில் பேக்கப் மென்பொருள் பற்றி எழுதியிருந்தேன். அதிலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்கொடுத்தால்தான் அதுவால் உங்கள் ஜிமெயிலை பேக்கப்செய்ய இயலும்.ஆனால் அது விசுவாசமாய் அதை உருவாக்கிய டெவலப்பருக்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை கொண்டுபோய் கொடுக்குமாவென்றால் தெரியாது. அது ஓப்பன் சோர்ஸ் இல்லாததால் அதை கணிப்பது மிகவும் கடினம். நமது நண்பர் "மாஸ்டர்" சுட்டிகாட்டியதால் இங்கு இதை தெரிவித்தேன்.அவர் போன்ற நாலும்தெரிந்த நண்பர்கள் இவ்வலைப்பூவுக்கு வந்து செலல், தங்கள் கருத்துக்களை சொலல் எனக்கெல்லாம் மிகவும் பெருமை. எளிதாய் இருக்கின்றதேவென்றுதான் அம்மென்பொருளை முன்கொணர்ந்தேன். ஒரு எச்சரிக்கையையும் செய்திருக்கலாம்.

Trust no one என நாமெல்லாரும் கெம்பீரமாய்ச் சொன்னாலும் சில விசயங்களில் நாம் சிலரை அல்லது சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. வாழ்க்கையே நம்பிக்கையில் தானே ஓடுகின்றது. கவிஞர் வைரமுத்துவின் "நம்பிக்கை" சின்னத்திரைப்பாடல் என்னோட ஃபேவரைட்.


நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

விடுதலை க.இராசேந்திரன் "ஈழப்பிரச்சனையில்" மென்புத்தகம் இங்கே தமிழில்.Viduthalai Ka.Rajeendran Eela Pirachanaiyil in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

Anonymous said...

அன்புள்ள பிகேபி

தாங்கள் முன்பு ஒரு முறை SUPERஎன்ற மென்பொருளைப் பற்றி பல பதிவுகளில் சொல்லியிருந்தீர்கள். அந்த மென்பொருளை நானும் நிறுவியிருந்தேன். ஆனால், அது பிற்பாடு ஒரு ANTI-VIRUS Scanning போது வைரஸ் இருப்பதாக அறிவித்தது. எதற்கும்உங்கள் பதிவுகளில் EULA ஒன்று போட்டு விடுவது நல்லது பாருங்கள்.

Anonymous said...

டிஸ்கி (டிஸ்க்ளைமர்) போடுவதை தான் நண்பர் EULA என்று சொல்கிறாரோ?

அது சரி, ஆயிரத்தி சொச்சம் சாப்ட்வேர்களை பற்றி சொல்லி ஆகிவிட்டது. இப்போ போய் “எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. நான் பொறுப்பு இல்ல என்று டிஸ்கி போட்டால் கடைசில பிகேபி யையும் நம்பக்கூடாது போல'னு மக்கள் நெனச்சுட்டா என்ன செய்யுறது? “

வாசகர்களின் நம்பிக்கை தான் நமது வெற்றி.

Muhammad Ismail .H, PHD., said...

// Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.//

உண்மைதான். ஆனால் இந்த கலியுகத்தில் இன்னும் மோசமான நிலமைகளை நாம் நெருங்கவில்லை. அப்பொழுது உண்மையானது பொய்யை போன்றும், பொய்யானது உண்மையை போன்றும் தோற்றமளிக்குமாம். பிரித்து உணர்வது ரொம்ப சிரமம் தான்.




with care and love,

Muhammad Ismail .H, PHD,

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்