உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, November 14, 2008

மேற்கே உதிக்கும் சூரியன்

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை "மேற்கே உதிக்கும் சூரியனை" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள். "மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்." என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா "Great shift on Earth"என சொல்கின்றாராம்.

இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்.

தினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.

அதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா? அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

இராமலிங்க அடிகள் வரலாறு இங்கே தமிழில் மென் புத்தகமாக. History of Thiru Arutprakaasa Vallalar in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories9 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

அருமையான தகவல் தோழரே. :-)

அபுல் said...

அன்புள்ள PKP,
எதாவது ஒரு நம்பிக்கையை அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதென்பது எல்லா மதங்களிலும் உள்ளது... அவையெல்லாமே முழுக்க முழுக்க 100% உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை..

Arnold Edwin said...

தகவலுக்கு நன்றி.
Co-incidence சிந்தனைக்குட்பட்டது

Anonymous said...

arumaiyana thagaval Nanbarey.!!!

Nasterdams sonnavai ellam tamilil engavathu kidaikuma..?

anbudan

Shanraj.R

Muhammad Ismail .H, PHD, said...

அன்பின் பிகேபியானந்தா,

யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஏற்கனவே என்னிடம் இதைப்பற்றி இரண்டு inputs இருந்தது. உங்களின் 'இரண்டாவது சூரியன் - http://pkp.blogspot.com/2008/10/blog-post_09.html' மற்றும் இந்த 'மேற்கே உதிக்கும் சூரியன்' - ம் சேர்த்து நான்கு ஆகி விட்டது. ஒபாமா ஒரு முழு இஸ்லாமியராக இருந்தால் அகில உலகுக்கே பெரும் நன்மைதான். ஆனால் தற்போதைய அரபுலக துலுக்கனைப் போல் நடந்தால் நிலைமை படு மோசம் தான். பார்ப்போம், காலம் இதற்க்கு சரியான பதிலைத்தரும்.

with care and love,

Muhammad Ismail .H, PHD,

nagoreismail said...

பதிவு மிகவும் அருமை,

"இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்."

- சிந்தனைக்குட்பட்டது,
நன்றியும் பாராட்டுகளும்
நாகூர் இஸ்மாயில்

raki said...

dear pkp

namasthe

i am not able to access the book on vallalar and the errot message
message reads as under:

Error in count on line 479.
./mydrive/Tamil TV Serial Songs/Kathalikka-Neramillai-Serial-Vijay-TV-Title-Song.mp3 is already defined.

will you please look into the same and rectify and oblige

thanks & regards

r radhakrishnan

Busy said...

Good one, But the Prophet Mohammed Rasullullah (saw) said tht "without 10 thing happen to the world the judgement day dn't come, the 10 most things are, Thajjal, More Earthquake, Sun rise in west, one huge fire will come, appearence of yejjuj mahjuj, talking animal (not parrot, robot), Jesus christ(prophet Issa) will come,

From these, only the sun will rise in west, no human being & changes will not happen

Ahamed said...

நல்ல சிந்தனை PKP. இஸ்லாம் கூறும் இந்த செயலை நாத்தீகர்களுக்கு நான் இப்படியும் கூறியுள்ளேன். ஒரே பாதையில் - கிழக்கிலிருந்து மேற்கு சுழன்று கொண்டிருக்கும் பூமி நிச்சயமாக தன் சுழற்சித் திசையை மாற்றி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழலும் காரணம் நியூட்டனின் மூன்றாம் விதியை நம்புவோர் இதனை கட்டயாயம் நம்புவர். "தாக்கம் மறு தாக்கம்" என்பது உண்மையெனில் நிச்சயமாக பூமி மேற்கு கிழக்காக சுழழும் அப்போது சூரியம் எமக்கு மேற்கே உதயமாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்